புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதுடன் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதும் நடந்துவருகிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய அறிவிப்புகளை அவுஸ்திரேலிய அரசு அண்மையில் வெளியிட்டிருக்கிறது.
TPV எனப்படும் தற்காலிக விசா காலாவதியாவதற்கு முன்னரே இந்த விசா புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். நிரந்தர வதிவிட உரிமை கொண்டவர்கள் குடியுரிமை பெறும் விண்ணப்பங்களுக்கான நிபந்தனைகள் இறுக்கமாக்கப்படவுள்ளன. இந்த நிலைமைகளால் தமிழ்ப் பின்னணி கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை உள்ளது.
இவை பற்றியும் மற்றைய பாதுகாப்பு விசா சார்ந்த விடயங்கள் பற்றியும் பேசுவதற்காக அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையும் தமிழ்த் தகவல் மையமும் இணைந்து தகவல் மாலை ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றன.
இந்த மாற்றங்கள் குறித்து விளக்கம் தரவும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் என பல முக்கிய வழக்குகளில் பிரசன்னமான மெல்பேண் குடிவரவு சட்டத்தரணி ஒருவர் கலந்து கொள்ள இருக்கிறார். அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையின் பாலா விக்னேஸ்வரனும் பங்குபற்றுகிறார்.
தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள், அவர்களது நலன் விரும்பிகள், மற்றும் இம்மாற்றங்கள் பற்றிய தகவல்களை அறிய விரும்புவோர் இந்தத் தகவல் மாலையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடைசி நிமிட அவசர முயற்சிகளைத் தவிர்க்க வருமுன் காப்போம்.
நாள்: 29 ஜூலை 2018 – ஞாயிற்றுக் கிழமை
நேரம்: வரவு பிற்பகல் 2:50 [பிற்பகல் 3:00 மணியிலிருந்து 5:00 மணி வரை]
இடம்: பெண்டில் ஹில் தொடருந்து நிலையத்தின் அருகில் உள்ள யாழ் மண்டபம்
29 July 2018 Sunday 2:50 PM [3:00 PM to 5:00 PM]
Yarl Function Centre
221A, Wentworth Avenue, Pendle Hill
⇨ குடிவரவு மற்றும் சட்ட ஆலோசனைகள்
⇨ கேள்வி – பதில்
Information Session for Refugees and Asylum-seekers
⇨ Advice on Migration and Migration Law (Recent developments)
⇨ Questions and Answers
மேலதிக தகவல்களுக்கு: 0419 361 273 (பாலா விக்னேஸ்வரன்) மற்றும் 0421 83 2255 (சுஜன் செல்வன்)