யாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்துஅழிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய ...
Read More »குமரன்
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் செல்வராகவன் திரைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் செல்வராகவனின் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் சில காரணங்களால் இப்படம் இன்று வரை வெளியாகாமல் இருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக ...
Read More »மார்ச் மாத இறுதிக்குள் நான்கு மில்லியன் அவுஸ்திரேலிய மக்களிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்க திட்டம்
மார்ச் மாத இறுதிக்குள் நான்கு மில்லியன் அவுஸ்திரேலிய மக்களிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் தி;ட்டம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். பெப்ரவரி நடுப்பகுதியில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகலாம் எனஅவர் தெரிவித்துள்ளார். மார்ச் மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு மருந்தினை வழங்கும் திட்டம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். முதலில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டலில் பணியாற்றுபவர்களிற்கும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கையாள்பவர்களிற்கும் சுகாதார பணியாளர்களிற்கும் முதியோர் மற்றும் அங்கவீனர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ...
Read More »அவுஸ்திரேலியாவில் புதிய வகை கொரோனா சமூகத்திற்குள் பரவுகின்றதா என அச்சம்
புதிய வீரியமிக்க கொரோனா வைரசினால் உருவாகியுள்ள சமூக பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் மூன்று நாட்களிற்கு முடக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பிரதமர் அனஸ்டேசியா பாலஸ்சே அறிவித்துள்ளார். ஹோட்டலின் தனிமைப்படுத்தல் பணியாளர் பி117 என்ற வகை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே அவர் புதிய முடக்கலை அறிவித்துள்ளார். அவருடன் தொடர்பிலிருந்த 179 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட வகை வைரஸ் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களிடம் முன்னர் காணப்பட்ட போதிலும் சமூகத்தில் காணப்படவில்லை. புதிய கொரோனா வைரஸ் அதிகளவு தொற்றும் தன்மை ...
Read More »ஏன் எனது தந்தை இறக்கநேரிட்டது
மிக் உடன்படிக்கை என்பதை ஒரு சிறுமியாக நான் முதன்முதலில் 2007இல் கேள்விப்பட்டவேளை- அந்த சொற்கள் எனது தந்தையின் பத்திரிகையில் எழுதப்படுவது- இரண்டு வருடங்களிற்கு பி;ன்னர் நான் எனது வாழ்வின் மிகவும் துயரம் மிகுந்த நாளில் -நான் அவரது புதைகுழியின் முன்னாள் நிற்பதற்கு வழிவகுக்கும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது தந்தை மிக்விவகாரத்தை பகிரங்கப்படுத்தியிருக்காவிட்டால் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் இன்றும் எழுதிக்கொண்டிருந்திருப்பார்- இன்றும் தவறுகளை பகிரங்கப்படுத்திக்கொண்டிருந்திருப்பார் – எந்த அதிகாரத்திற்கு எதிராகவும் துணிச்சலுடன நின்றிருப்பார் என்பது நீண்ட காலமாகவே நானும் ஆதாரங்கள் குறித்து பரிச்சயமுள்ளவர்களும் ...
Read More »71 பெண் கைதிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது
காலி சிறைச்சாலையின் 39 பெண் கைதிகளுக்கு இன்று கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் கிளிநொச்சியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு நாளை கொண்டு செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இதேவேளை போகம்பர சிறைச்சாலையின் மேலும் 32 பெண் கைதிகளுக்கு கொவிட்-19 தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதுடன் அவர்கள் கல்லெல்ல கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Read More »போலி வீசா வைத்திருந்த மூவர் கைது
போலி வீசா வைத்திருந்த மூவரை குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினால் கைது செய்யப் பட்டுள்ள தாக தெரியவந்துள்ளது. போலியான வீசாக்களை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்குச் செல்ல முற்பட்ட 03 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த நபர்கள் குடிவரவு மற்றும் குடி யகழ்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள தாகத் தெரியவந்துள்ளது.
Read More »குவாண்டம் உலகத்தில் ரகசியங்களைப் பாதுகாப்பது எப்படி?
மற்றவர்களுடன் நாம் நிகழ்த்தும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தகவலைப் பரிமாறிக்கொள்ளும் இருவரின் அனுமதியில்லாமல் மூன்றாவது நபர் அதனைப் படிக்க முடியாது. இதற்குத் தரவுகளைச் சங்கேதமாக்குதல் (encryption) என்று பெயர். அகல்யா என்ற முதல் நபர் பாபு என்ற இரண்டாம் நபருக்குச் சங்கேதப்படுத்தப்பட்ட தகவலை அனுப்புகிறார். பாபு மட்டுமே அந்தச் சங்கேதத்துக்கான திறவுகோலைக் கொண்டிருக்கிறார் என்றும், கதிர் என்ற மூன்றாவது நபர் இங்கே ஒரு பரிவர்த்தனை நடந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிந்தாலும், அதில் அவர் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வது எப்படி என்றும் அகல்யா எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்ள ...
Read More »திருப்பாவை பாசுரத்துக்காக இணைந்த 9 நடிகைகள்
பிரபல நடிகைகளாக இருக்கும் ஒன்பது பேர் மார்கழி மாத திருப்பாவை பாசுரத்துக்காக இணைந்திருக்கிறார்கள். மார்கழி மாத திருப்பாவை பாசுரத்தை நடிகைகள் சுஹாசினி, உமா பத்மநாபன், ரேவதி, நித்யா மேனன், ரம்யா நம்பீசன், அனுஹாசன், கனிகா, ஜெயஸ்ரீ ஆகிய 8 நடிகைகள் இணைந்து பாடி இருக்கிறார்கள். இந்த பாடலுக்கு நடிகை ஷோபனா நடனம் ஆடி உள்ளார். இதுகுறித்து சுஹாசினி கூறும்போது, “மார்கழித் திங்கள் தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சியாக தொழில் ரீதியிலான பாடகர்கள் அல்லாத நாங்கள் ...
Read More »நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டார் இவன்கா டிரம்ப்
அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என தெரிவித்தமைக்காக இவன்கா டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார். டுவிட்டர் செய்தியொன்றில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுள்ள இவன்கா அவர்களை வன்முறையில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்க தேசப்பற்றாளர்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறும் நடவடிக்கைகளோ அல்லது எங்கள் சட்ட அமுலாக்களை அவமதிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இவன்காவின் இந்த டுவிட்டர் பதிவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை தொடர்ந்து அவர் அதனை நீக்கியுள்ளார். டிரம்பின் ஆதரவாளர்களால் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal