ஏன் எனது தந்தை இறக்கநேரிட்டது

மிக் உடன்படிக்கை என்பதை ஒரு சிறுமியாக நான் முதன்முதலில் 2007இல் கேள்விப்பட்டவேளை- அந்த சொற்கள் எனது தந்தையின் பத்திரிகையில் எழுதப்படுவது- இரண்டு வருடங்களிற்கு பி;ன்னர் நான் எனது வாழ்வின் மிகவும் துயரம் மிகுந்த நாளில் -நான் அவரது புதைகுழியின் முன்னாள் நிற்பதற்கு வழிவகுக்கும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.


எனது தந்தை மிக்விவகாரத்தை பகிரங்கப்படுத்தியிருக்காவிட்டால் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் இன்றும் எழுதிக்கொண்டிருந்திருப்பார்- இன்றும் தவறுகளை பகிரங்கப்படுத்திக்கொண்டிருந்திருப்பார் – எந்த அதிகாரத்திற்கு எதிராகவும் துணிச்சலுடன நின்றிருப்பார் என்பது நீண்ட காலமாகவே நானும் ஆதாரங்கள் குறித்து பரிச்சயமுள்ளவர்களும் உணர்ந்துகொண்டுள்ள விடயம்.

எனது தந்தையை கொலை செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவது தேசத்தின் நலனுடன் தொடர்புபட்டது என நான் இலங்கையர்களை தொடர்ந்தும் வற்புறுத்திவரும் இந்த தருணத்திலும்- அவரது மரணம் நிகழ்ந்து 12 வருடங்களிற்கு பின்னரும் , பலரும் மிக்உடன்படிக்கை குறித்து இன்னமும் அறியாத நிலையில் உள்ளனர்.

மிக் உடன்படிக்கையை இலகுவாக தெளிவுபடுத்துவது மக்கள் விளங்கிக்கொள்வதற்கு உதவக்கூடும்.

சிறிய எண்ணிக்கையிலான மிகச்சிறந்த புலானய்வாளர்களின் பணிகள் இந்த விடயத்தில் பல உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு உதவியுள்ளன.

ஜனவரி 2006 இல் விமானப்படை தளபதி எயர்சீவ் மார்சல் டொனால்ட் பெரேரா விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைக்காக குண்டுவீச்சுவிமானங்களை கொள்வனவு செய்வதற்காக வெளிப்படையான கேள்விபத்திரத்திற்கு அழைப்பு விட விரும்பினார்.


அதன் பின்னர் சிங்கப்பூரிலும் உக்ரைனிலுமிருந்து பல வர்த்தகர்கள் உதயங்க வீரதுங்கவுடன் இலங்கைக்கு வந்தனர்.

உக்ரைன் வர்த்தகர்களும் உதயங்க வீரதுங்கவும் பாதுகாப்பு செயலாளராகயிருந்த கோத்தபாய ராஜபக்சவை சந்தித்தனர்.
அந்த சந்திப்பில் வெளிப்படையான கொள்வனவு முயற்சிகள் ஜன்னலிற்கு வெளியே தூக்கிஎறியப்பட்டன,உதயங்க வீரதுங்கவால் அழைத்துவரப்பட்ட உக்ரைன் நிறுவனம் மாத்திரம் குண்டுவீச்சு விமானங்களை கொள்வனவு செய்வதற்கான கோரிக்கைகளை முன்வைத்தது.
அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும், உதயங்க உக்ரைன் நிறுவனத்தின் சார்பில் விமானப்படையினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

2006 ஜூன் மாதத்தில் ரஸ்ய- உக்ரைன் தூதுவராக நியமிக்கப்பட்ட பின்னரும் அவர் உக்ரைன் நிறுவனத்தின் சார்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவந்தார்.
விமானக்கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட உக்ரிமாஸ் நிறுவனம் உக்ரைனிற்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.

மிக் விமானக்கொள்வனவு நடவடிக்கைகள் நாடுகளிற்கு இடையிலானவை என்பதால் கேள்விபத்திர முறை அவசியமில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததுடன் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது.

விமானப்படையினருக்கும் உக்ரிமாசிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை விமானங்களிற்கான ,விமானங்களை திருத்துவதற்கான பணத்தை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பெலிமிசா ஹோல்டிங் என்ற நிறுவனத்திற்கு வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
விமானப்படைக்கும் உக்ரைனிற்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இலங்கை பெலிமிசாவிற்கு டொலர்களை வழங்கியது.

கோத்தபாய ராஜபக்சவை பொறுத்தவரை மிக்விமான கொள்வனவு முடிவடைந்துவிட்டது, ஏற்றுக்கொள்ளப்பட்ட பணம் வழங்கப்பட்டுவிட்டது,அவ்வளவுதான்.


ஆனால் பத்திரிகையாளர்கள் இதில் ஏதோ மர்மம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

சண்டே டைம்சின் இ;க்பால் அத்தாஸ் 2006 இல் விமானக்கொள்வனவில் ஏதோ மர்மம் உள்ளது என எழுதினார்.

விமானப்படையினர் 2.462 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளனர்,இது 2000 ம் ஆண்டில் சந்திரிகா அரசாங்கம் வழங்கியதை விட இரண்டு மடங்கு அதிகம் என அவர் எழுதினார்.
இதனை தொடர்ந்து 2007 இல் எனது தந்தையின் பத்திரிகை இது தொடர்பில் தொடர்ச்சியாக பல கட்டுரைகளில் ஆழமாக ஆராய்ந்தது.

கேள்விப்பத்திர முறைகளை கைவிட்டுவிட்டு விமானங்களை உக்ரைன் மூலம் கொள்வனவு செய்யும் தீர்மானத்தில் கோத்தபாய ராஜபக்ச நேரடியா தொடர்புபட்டிருந்தார் என எனது தந்தையின் பத்திரிகை நிரூபித்தது.

இந்த விவகாரத்தில் வீரதுங்கவிற்கும் சிங்கப்பூரை சேர்ந்தவர்களிற்கும் உள்ள தொடர்புகளையும் அம்பலப்படுத்தியது.

மிகமுக்கியமாக பிரித்தானியாவில் பெலிஸ்மா நிறுவனமொன்று ஒன்று இல்லை என்பதை அம்பலப்படுத்தியது.

அனைத்து உண்மைகளையும் திரட்டி வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை எனது தந்தை 2009 இல் கொல்லப்பட்டார்.

அகிம்சா விக்கிரமதுங்க