குமரன்

டிரம்ப் உடல் நலம் நல்ல நிலையில் உள்ளது!

டிரம்ப் உடல் நலம் நல்ல நிலையில் உள்ளது என்று வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கு ஆண்டு தோறும் உடல் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபரானது முதல் அவருக்கு வருடாந்திர உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 2017- ஜனவரியில் அதிபராக பொறுப்பேற்ற டிரம்பிற்கு நேற்று 2-வது முறையாக உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. உடல் பரிசோதனையை வெள்ளை மாளிகையில் அதிபருக்கான மருத்துவர் சீன் பி கோன்லே தலைமையிலான மருத்துவக்குழு மேற்கொண்டது. 4 மணி நேரம் நடைபெற்ற ...

Read More »

கண்டுகொள்ளப்படாத மக்கள் கூட்டம்!

‘வெளியே வந்து பாருங்கள்… போதும் போதும் என்று சொல்லுகின்ற நம்மில் பலருக்கு, அளவுக்கு அதிகமாகவே வசதிகள் கிடைக்கப் பெற்றிருப்பதைக் காண்பீர்கள்’ என்று வெளிநாட்டுக் கவிஞர் ஒருவர் எழுதினார். உண்மைதான்! நாட்டில் பெரிய பெரிய விவகாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்ற நாம், சமகாலத்தில், உண்பதற்கு ஒருவேளை உணவும் அடிப்படை வசதிகளும் இன்றி, அன்றாட வாழ்க்கையைக் கூட, வாழ்வதற்கு வழிதெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கணிசமான மக்கள் கூட்டம் நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதை, மறந்து விடுகின்றோம். அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்காக, இன்றைய, நேற்றைய அரசாங்கங்கள் எதுவும் காத்திரமான நடவடிக்கைகளை ...

Read More »

விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு!- அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளவர்களின் விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பிராந்திய பகுதிகளில் வாழ விரும்பும் குடியேறிகளின் விசா விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலனை செய்யப்படும் என குடிவரவு துறை அமைச்சர் David Coleman தெரிவித்துள்ளார். சிட்னி, மெல்பேர்ன், குயின்ஸ்லாந்து போன்ற நகரங்களில் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதினால் குறித்த நகரங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமா பிராந்திய பகுதிகளில் புதிய குடியேறிகளை அனுப்புவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் நகரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் பிரதேச செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு ...

Read More »

ஈ.பி.ஆர்.எல்.எவ் வலைக்குள் சிக்கிக்கொண்ட விக்கி!

விடுதலைப் புலிகளைக் கொலைகாரர்களாக அடையாளப்படுத்தும் ஆவணமொன்று, யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதை, வெளியிட்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய மாநாடு நடந்த அரங்கில், அந்த ஆவணப் பதிவை வெளியிட்டு வைத்தவர், வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன். அதில், தமது கட்சியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்டவர்கள் விடுதலைப் புலிகளால், படுகொலை செய்யப்பட்டதாக மாத்திரம் அந்த வரலாற்று ஆவணக் குறிப்பு வெளிப்படுத்தவில்லை. ‘கந்தன் கருணை’யில் 60 பேர் படுகொலை செய்யப்பட்டதாகவும் டெலோ தலைவர் உள்ளிட்ட அந்த அமைப்பின் ...

Read More »

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ். மாநகரில் களியாட்டங்களுக்குத் தடை!

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்ப்பாண மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேலிக்கை விழாக்களை நடத்துவதை தடை செய்யக் கோரும் பிரேரணை சபையின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணின் உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் சபையில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். “யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் தேசிய எழுச்சி நாட்கள் மற்றும் நினைவேந்தல் நாட்களில் களியாட்ட நிகழ்வுகள் மற்றும் கேலிக்கை விழாக்களை நடத்துவதை தடை ...

Read More »

பண மோசடி செய்த மத போதகருக்கு விளக்கமறியல்!

கனடா நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து 35 இலட்சம் ரூபா பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினார் – நம்பிக்கை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிருஸ்தவ மத போதகரை விளக்கமறியில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைந்துள்ள கிருஸ்தவ ஆலயத்தில் போதகராக கடமையாற்றுபவர், குருநகரைச் சேர்ந்த நபர் ஒருவரை கனடாவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறியுள்ளார். கனடாவுக்கு அனுப்பிவைப்பதற்கு அந்த நபரிடம் 45 இலட்சம் ரூபா பணம் வேண்டும் என்றும் போதகர் தெரிவித்துள்ளார். அதன்படி முதல்கட்டமாக 35 இலட்சம் ரூபாவை வழங்குமாறு போதகர் ...

Read More »

பார்த்திபன் – சீதா மகள் அபிநயாவுக்கு திருமணம்!

பார்த்திபன் – சீதாவின் மூத்த மகளான அபிநயாவுக்கும், எம்.ஆர்.ராதாவின் மகள் வழி கொள்ளு பேரனான நரேஷ் கார்த்திக்குக்கும் வருகிற மார்ச்சில் திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகர் பார்த்திபனும், நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்கும் அபிநயா, கீர்த்தனா என 2 மகள்களும் ராக்கி என்ற மகனும் உள்ளார்கள். பார்த்திபனும், சீதாவும் விவாகரத்து பெற்று தனியாக வசிக்கின்றனர். பார்த்திபன் – சீதா தம்பதியின் இரண்டாவது மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. ...

Read More »

கசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிட்டு கொலை – ஐ.நா. அறிக்கை

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுக்கிறது. இந்த நிலையில் ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ...

Read More »

ஆஸி. அணியில் ஸ்மித், வோர்னர் இல்லையெனில் அது பைத்தியக்காரத்தனம்!

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில் இத் தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணிக் குழாமில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இல்லையன்றால் அது பைத்தியக்காரத் தனம் என அவுஸ்திரேலிய  அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.   ஸ்மித் மற்றம் வார்னர் மீதான தடைக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதியுடன் முடைவடைகிறது. ஆகையினால் இவர்கள் இருவரும் அவுஸ்திரேலிய அணியின் இடம்பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையிலேயே ...

Read More »

அரசியல் தெரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்!- நடிகர் கார்த்தி

ஊடகங்களை வெவ்வேறு தரப்பினரும் எப்படிப் பார்க்கிறார்கள்? ஊடகங்களிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? இப்படி ஒரு கேள்வியுடன் ‘ஊடகங்கள்… ஊடலும் உறவும்!’ எனும் கலந்துரையாடலை நடத்தியது ‘இந்து தமிழ்’ நாளிதழ். ஈரோட்டில் சில நாட்களுக்கு முன் ‘சக்தி மசாலா’ நிறுவனம் நடத்திய ஐம்பெரும் விழாவின் ஊடாக நடந்த முதல் கலந்துரையாடலில் பங்கேற்றவர் நடிகர் கார்த்தி. வேளாளர் பொறியியல் கல்லூரி வளாகத்தில், மாணவ – மாணவியர் உற்சாகமான ஆர்ப்பரிப்பின் நடுவே ‘இந்து தமிழ்’ நாளிதழின் முகவர்கள் – விற்பனையாளர்கள், வாசகர்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், கார்த்தியுடன் கலந்துரையாடினார் ...

Read More »