ஆஸி. அணியில் ஸ்மித், வோர்னர் இல்லையெனில் அது பைத்தியக்காரத்தனம்!

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந் நிலையில் இத் தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணிக் குழாமில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இல்லையன்றால் அது பைத்தியக்காரத் தனம் என அவுஸ்திரேலிய  அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

 

ஸ்மித் மற்றம் வார்னர் மீதான தடைக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதியுடன் முடைவடைகிறது. ஆகையினால் இவர்கள் இருவரும் அவுஸ்திரேலிய அணியின் இடம்பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையிலேயே அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வோர்னர் விளையாட வாய்ப்புள்ளதுடன், ஸ்மித் அஷஸ் தொடரில்தான் விளையாடுவார் என கூறப்படுகின்றது.

 

இருவரும் அணிக்கு திரும்பும் முன் சில போட்டிகளில் விளையாடுவது அவசியம். இது எல்லாம் நிர்வாகத்தின் ஒரு பகுதி. நாம் சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு இது கடினமான நேரம் என்பது எங்களுக்குத் தெரியும். அணிக்கும் கடினமான நேரம்தான். கடந்த 9 அல்லது 10 மாதங்களாக ஒருங்கிணைந்து சென்று கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

தற்போதும், வரும் காலத்திலும் அவர்கள் எவ்வளவு கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களும் வாய்ப்பை தேடுவார்கள், நாங்களும் வாய்ப்பை தேடுவோம்.

நாம் இரண்டு சிறந்த வீரர்களை பற்றி பேசி வருகிறோம். நாம் உண்மையிலேயே இரண்டு சிறந்த வீரர்களை பற்றி பேசவில்லை. அவர்களை நாங்கள் உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்கவில்லை என்றால், அது பைத்தியக்காரத்தனமாகும் என்றார்.