குமரன்

சிறுமி இஷாலினியின் குடும்பத்தாரிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

கொழும்பில் இருந்து டயகமவுக்கு சென்ற ஒரு சிறப்பு காவல் துறை குழுவினர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் பணிபுரிந்த வேளையில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த இஷாலினி குறித்து சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தனர். இந்த சிறப்பு காவல் துறை குழு நேற்று காலை 7.30 மணியளவில் டயமகவில் அமைந்துள்ள சிறுமி இஷாலினியின் இல்லத்திற்கு சென்று வாக்கு மூலங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையினை ஆரம்பித்திருந்தது. இதன்போது இஷாலினியின் தாய், தந்தை, சகோதரர் மற்றும் கொழும்பு, பெளத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ரிஷாத் பதியூதீனின் இல்லத்திற்கு சிறிமியமை பணியமர்த்த ...

Read More »

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதில் முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறார். இதனால் நடிகர்கள் கார்த்திக், பார்த்திபன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பாண்டிச்சேரி சென்று உள்ளனர். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளர். இங்கு நடைபெறும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அனைவரும் ஐதராபாத் செல்ல இருக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாக ...

Read More »

உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளது!

குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வெறும் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள். சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. இதில் சமீபத்திய மாறுபாடாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கும் நிலையில், டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் என உலக சுகாதார ...

Read More »

தமிழ் மக்களின் ’அரசியல் அணி’

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.சிவராம் (தராக்கி) `காலத்தின் தேவை அரசியல் வேலை` என்று குறிப்பிடுவார். காலத்தே பயிர் செய்தல் எல்லாவிதமான விடயங்களிலும் முக்கியம் பெறுகிறது. அதே போன்றுதான் இப்போதைய பூகோளவியல் அரசியல் மாற்றத்திலும் அரசியல் வேலையைச் சரியான முறையில் செய்தாகவேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கும் அவர்களது அரசியல் தரப்பினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது வாய்ப்பைப் பயன்படுத்தியாகவேண்டுமென்ற நிலை மீண்டும் ஒருமுறை உருவாகி இருக்கிறது. ‘விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள்’ என்ற ஒருமிப்புடன் எழுந்த அரசியல் பிரயோகம் ‘முக்கியமானதோர் அரசியல் அமைப்பு’ எனும் பாவனையுடன் ...

Read More »

தமிழ் பெண்ணை ‘அடிமை’யாக வைத்திருந்த வழக்கு: மெல்பன் தம்பதியருக்கு சிறைத்தண்டனை!

தமிழ்ப்பெண் ஒருவரை வீட்டுவேலையாள் என்ற பெயரில் எட்டு வருடங்கள் அடிமையாக வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் மெல்பனைச் சேர்ந்த தமிழ் தம்பதியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் பத்து வாரங்களாக விக்டோரிய உச்ச நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் குறித்த தம்பதியர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தநிலையில் இன்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி John Champion இவர்களுக்கான தீர்ப்பினை அறிவித்தார். இதன்படி மனைவிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கணவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மனைவி ...

Read More »

பிரான்சில் 59 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.11 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் ...

Read More »

மீண்டும் பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, பிரபல இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது நவரசா வெப் தொடர் உருவாகி உள்ளது. இதில் அவர், கவுதம் மேனன் இயக்கி உள்ள ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதுதவிர பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ போன்ற படங்களையும் கைவசம் ...

Read More »

’ரிஷாட் வீட்டிலிருந்த இளைஞர் தும்புத்தடியால் தாக்கினார்’

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த இளைஞர் ஒருவர், தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்ததாக உயிரிழந்த சிறுமியின் தாயாரான ஆர்.ரஞ்சினி தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார். தான் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காகவே சிறுமி, ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு பணிப் பெண்ணாக சென்றார் என்றும் அவரது தாயார் ரஞ்சினி குறிப்பிட்டார். ரிஷாட் எம்.பியின் வீட்டிலுள்ள இளைஞர் ஒருவர் தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி ...

Read More »

பயணக்கட்டுப்பாடு விவகாரம் ; இராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டுவர எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் ஜூன் 10 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றறிக்கை வெளியிட்டார். பின்னர், ஜூலை 14 முதல் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி அத்தியாவசிய கடமைகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ் மற்றும் ரயில்கள் பயணிப்பதற்கு அனுமதி ...

Read More »

கல்வி அமைச்சருக்கும் ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி

கல்வி அமைச்சருக்கும் ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். கல்வி அமைச்சருக்கும் ஆசிரியர் அதிபர்களின் தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஓர் உடன்பாட்டை எட்ட முடியாததால் இணையக் கற்பித்தல் செயற் பாடுகளிலிருந்து விலகி வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Read More »