வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று ஒரு உரத்தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று வடகொரியா. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் அந்நாட்டின் கிம் ஜாங் உன் (36) செயல்பட்டு வருகிறார். உலக நாடுகளுடன் பெரும்பாலும் வர்த்தகம் உள்ளிட்ட எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளாத வடகொரியாவில் ஊடகங்கள் உள்பட அனைத்து துறைகளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிநாட்டு ஊரடங்கள் அந்நாட்டில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் எந்த ...
Read More »குமரன்
ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் கத்திக்குத்து !
ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் நிகழ்த்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரை மீட்ட காவல் துறை தாக்குதல் நடத்திய நபரை கொன்றனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா பிராந்தியத்தின் தெற்கு ஹெட்லாண்ட் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிகவளாகத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த மக்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும், 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். ...
Read More »இலங்கையில் 105 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்படும்!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அமுல்செய்யப்பட்டு வருகின்றது. அந்த 21 மாவட்டங்களிலும் நேற்று இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் திங்கட் கிழமை& அதிகாலை 5.00 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. பின்னர் அன்றைய தினம் முதல் இரவு 8.00 மணியிருந்து அதிகாலை 5.00 மணி வரையிலான 9 மணி நேரமே ஊரடங்கு அமுல் செய்யப்படும். எனினும் எதிர்வரும் 6 ஆம் திகதி புதன் கிழமை இரவு 8.00 மணி ...
Read More »ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியது ஆஸ்திரேலியா
வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு. ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கும். சோபிக்காத வீரர்களை நீக்கும். இந்த ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளது. அதேவேளையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மார்னஸ் லபுஸ்சேன்-ஐ ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா ...
Read More »நான் விலக மாட்டேன் – பிரசன்னா
சமூக வலைத்தளமான ட்விட்டரில் இருந்து விலக மாட்டேன் என்று நடிகர் பிரசன்னா கூறியிருக்கிறார். அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. இந்தப் படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி இருந்தார்கள். இந்த காட்சிக்கு தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது ...
Read More »கொரோனாவுக்கு எதிரான போரில் சீனா மிகப்பெரிய சாதனை – ஜின்பிங் பெருமிதம்
கொரோனாவுக்கு எதிரான போரில், சீனா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என்று சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்தார். நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 862 ஆக உயர்ந்தது. புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை. அதனால், பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 633 ஆக நீடிக்கிறது. சீன நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டத்தொடர், கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனாவின் கோரத்தாண்டவத்தால், அப்போது தள்ளி வைக்கப்பட்ட கூட்டத்தொடர், வருகிற 22-ந் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read More »வடகொரியாவின் புதிய தலைவர்
வடகொரிய தலைவர் கிம் ஜாங் வுன்னின் அரசியல் வாரிசாக அவரது சகோதரியை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நகர்வானது, வடகொரியாவின் அதி முக்கிய பொறுப்புக்கு கிம் யோ ஜாங் தெரிவாக உள்ளார் என்பதை உறுதி செய்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கிம் ஜாங்-ன் தந்தை மரணப்படுக்கையில் இருந்த காலகட்டத்தில், தற்போது கிம் யோ-வுக்கு அளிக்கப்பட்டுள்ள இதே பொறுப்பை கிம் ஜாங் வுன்னுக்கு உயர்மட்ட அதிகாரிகள் தரப்பு வழங்கியிருந்தனர். கிம் குடும்பத்தின் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் வடகொரிய தேசிய அமைச்சரவை கூடி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ...
Read More »வடக்கு ஆளுநர் மூன்று மாதங்களுக்கு விடுமுறை…..!
வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளதுடன் முதலாம் திகதியான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் மூன்று மாதங்களுக்கு அவர் இந்த விடுப்பைக் கோரியுள்ளார். அத்துடன், ஆளுநரின் பணிகளை ஒழுங்குபடுத்தி நிர்வாகத்தை முன்னெடுக்க வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் ஆகியோரைக் கொண்ட குழுவை அனுமதிக்குமாறும் ஆளுநர் தனது கடிதத்தில் கேட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேறொரு ...
Read More »வடகொரியா தலைவர் கிம் நிற்கவோ, நடக்கவோ முடியாமல் உள்ளார்!
வடகொரியா தலைவர் கிம் உயிருடன் இருப்பதாகவும், அவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தே யோங் ஹோ தெரிவித்துள்ளார். வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 11-ந் திகதிக்கு பிறகு வெளியுலகத்துக்கு வராத நிலையில், இதய அறுவை சிகிச்சையை தொடர்ந்து, அவர் இறந்துவிட்டார் என்றும், கோமா நிலையில் இருக்கிறார் என்றும் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அண்டை நாடான தென்கொரியா இந்த செய்திகளை மறுப்பதோடு, கிம் நலமாக இருப்பதாக தொடர்ந்து கூறிவருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ...
Read More »ஆஸ்திரேலியாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத மந்திரி ராஜினாமா
ஆஸ்திரேலியாவில் அரசு பிறப்பித்திருந்த சமூக இடைவெளியை பின்பற்றாத டிரேவர் வாட்ஸ் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு இலாகாவின் நிழல் மந்திரியாக பதவி வகித்து வந்தவர் டிரேவர் வாட்ஸ். (பிரதான எதிர்க்கட்சி உறுப்பினருக்கு வழங்கப்படும் மந்திரி அந்தஸ்து நிழல் மந்திரி எனப்படும்) இவர், தேசிய விடுதலை கட்சியை சேர்ந்தவர். டிரேவர் வாட்ஸ், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சட்டமன்ற தொகுதியான வடக்கு டூம்பாவோ நகரின் விரைவு வழிச்சாலையில் போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். ...
Read More »
Eelamurasu Australia Online News Portal