ஆஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேறுபவர்கள் எவராக இருந்தாலும் அச்சமூகத்தில் அவர்கள் இயங்குவதற்கு வேலைப் பெறுவதற்கு ஆங்கிலத்திறன் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த சூழலில், ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள முஸ்லீம்கள் சிறப்பான ஆங்கிலத் திறனை கொண்டிருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகவே இருக்கின்றது என டீகின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2007ம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்த யூசப் கரிமி, பல்கலைக்கழகத்தில் சென்று படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டிருந்திருக்கிறார். “எனது நண்பர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல விரும்பினார்கள், ஆனால் அவர்களுக்கு அந்த ...
Read More »குமரன்
சந்தேகநபர்கள் தொடர்பான அறிக்கையை கோரியுள்ள சட்டமா அதிபர்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில், விரிவான அறிக்கையொன்றை தம்மிடம் வழங்குமாறு, சட்டமா அதிபர் தப்புல டீ லிவேரா அறிவுறுத்தியுள்ளார். பதில் பொலிஸ்மா அதிபருக்கே, சட்டமா அதிபர், இன்று இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதற்கமைய, கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் எத்தனை பேர், அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட காரணங்களை உள்ளடக்கிய தகவல்களை தமக்கு அனுப்புமாறு, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை இந்த மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சட்டமா அதிபரின் ...
Read More »கல்முனையும் கன்னியாவும்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழுமையான அதிகாரங்களுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தல் என்பது, அப்பிரதேச தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த விடயம் தொடர்பில், அப்பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களிடையே அபிப்பிராய பேதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அண்மையில் இந்த விடயம் சூடுபிடித்தது. இது, இன்று நேற்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையோ, இன்று நேற்று உருவான பிரச்சினையோ அல்ல. 1989ஆம் ஆண்டிலிருந்து மிக நீண்ட காலமாக அப்பிரதேச தமிழ் மக்களாலும் தலைமைகளாலும் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கையாகும். இதுவரை காலமும் பதவிக்கு வந்த எந்த ...
Read More »கன்னியாவில் விகாரை அமைக்க இடைக்கால தடை!
திருக்கோணமலை – கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோவிலில் விகாரை அமைப்பதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் மற்றும் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை தர்மகர்த்தா சபையே தொடர்ந்தும் நிர்வகிக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அத்துமீறி நுழைந்து சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை மேல் நீதிமன்றில் எழுத்தானை மனுவொன்று கடந்த 19ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வெந்நீர் ஊற்று ...
Read More »அமெரிக்காவில் இம்ரான் கான் உரையாற்றும்போது எழுந்த பலூசிஸ்தான் சுதந்திர கோஷம்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றும்போது சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு ...
Read More »சூர்யாவுக்கு வில்லனாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தில் அவருக்கு வில்லனாக முன்னாள் எம்.பி. நடித்து வருகிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் ஆகஸ்டு 30-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அவர் சுதா கொங்காரா இயக்கும் சூரரைப்போற்று படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் பட்டியல் தமிழிலிருந்து பாலிவுட், ஹாலிவுட் என நீள்கிறது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாளராக ...
Read More »நியூசிலாந்தில் 5.2 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்!
பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 10.35 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் ...
Read More »நயன்தாரா வழியில் தமன்னா!
நயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். தமன்னா நடிப்பில் இந்த ஆண்டு ‘கண்ணே கலைமானே’, ‘தேவி 2’ ஆகிய படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. தெலுங்கில் எப் 2 பன் அண்ட் ப்ரஸ்ட்ரேஷன், இந்தியில் காமோஷி என்ற படமும் வெளியாகியுள்ளன. இவற்றில் தேவி 2, காமோஷி ஆகிய 2 படங்களும் பேய் படங்கள். தற்போது அவர் நடிப்பில் உருவாகிவரும் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு செப்டம்பர் மாதம் படம் ...
Read More »யாழில் சிறிலங்கா காவல் துறை துப்பாக்கி சூட்டில் இளைஞன் பலி!
சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் சிறிலங்கா காவல் துறை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிய முடிகிறது. உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Read More »ஆஸ்திரேலியா எங்கும் ஆர்ப்பாட்டம்!
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று மனுஸ் மற்றும் நவுருத்தீவில் 6ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி மெல்பேர்ன், சிட்னி உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள், ‘அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரவும், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், ஆறு ஆண்டுகள் ரொம்ப அதிகம், ’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியுள்ளனர். 2013ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில் அப்போதைய பிரதமர் கெவின் ருட் தலைமையிலான லேபர் அரசாங்கம் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal