குமரன்

அரசியல் போர்க்களம்! – பி.மாணிக்கவாசகம்

நாட்டில் அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டு இரண்டு வாரங்களாகப் போகின்றன. ஆயினும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் கூடுகின்றனவே தவிர குறைவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. நவம்பர் 16 ஆம் திதகி வரை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் இரண்டு தினங்கள் முன்னதாக 14 ஆம் திகதி கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச வர்த்தமானியின் மூலம் அறிவித்துள்ளார். ஆயினும் தொடர்ந்து செல்கின்ற உறுதியற்ற அரசியல் செயற்பாடுகள் அடுத்தடுத்த கட்டங்களில் எத்தகைய நிலைமைகளைத் தோற்றுவிக்கும் என்பது குறித்து பலரும் கவலை கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். உள்நாட்டில் மட்டுமல்லாமல், ...

Read More »

தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை உயிரோட்டமாக வைத்துள்ளது ஆஸ்திரேலியா. அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை உயிரோட்டமாக வைத்துள்ளது ஆஸ்திரேலியா. #AUSvSA ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இன்று இடம்பெற்ற சம்பவங்களை பயங்கரவாத தாக்குதல் என கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் மத்திய பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் காவல்துறையினரால் சுடப்பட்டு கைதுசெய்யப்பட்ட நிலையில் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் அதற்கு முன்னர் வாயு போத்தல்கள் நிரம்பிய தனது காரை வெடிக்க வைத்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இதேவேளை குறிப்பிட்ட நபர் காவல்துறையினர் ...

Read More »

டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மோதல்!

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் நிகழ்ந்த சர்ச்சை அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின்போது சி.என்.என். டெலிவிஷன் நிருபர் அகோஸ்டா மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அகதிகளாக வருவோர் பற்றி டிரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக கேள்வி எழுப்பினார். நாடு கடந்து அகதிகள் வருவது படையெடுக்க அல்ல என்று அவர் கூறினார். அதைக் ...

Read More »

சிறிலங்கா காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்!

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த காவல் துறை  திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.   அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் 43ஆவது சீர்த்திருத்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அமைச்கர்கள் மற்றும் அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பில்  வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானியான 2096 / 17இல் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கி(CBSL) உட்பட அரச வங்கிகள் மீண்டும் நிதி மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது

Read More »

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் கத்திக்குத்து தாக்குதல்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் மத்திய பகுதியில் நபர் ஒருவர் சற்று முன்னர் பலரை கத்தியால் குத்திகாயப்படுத்தியுள்ளார். காவல்துறையினர் சிறிய எண்ணிக்கையானவர்கள் கத்திக்குத்திற்குஇலக்காகியுள்ளனர் என தெரிவித்துள்ளனர் நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். மெல்பேர்னின் போர்க் வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஸ்வான்ஸ்டன் வீதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிகின்றது என்ற தகவலை தொடர்ந்து  அந்த பகுதிக்கு நாங்கள் சென்றவேளையே இந்த சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டது என காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் நபர் ஒருவரை கைதுசெய்து காவல்துறை  பாதுகாப்புடன் வைத்தியாசாலையில் ...

Read More »

ஐரோப்பிய ஒன்றியமும் அவுஸ்திரேலியாவும் வேண்டுகோள்!

சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது நம்பிக்கை வாக்கெடுப்பினை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியமும் அவுஸ்திரேலியாவும் வேண்டுகோள் விடுத்துள்ளன. நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூட்டப்படுவது குறித்த வர்த்தமானி அறிவித்தலை கருத்திலெடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களும் நோர்வே சுவிட்ஸ்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர். நாடு தற்போது எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலைக்கு முடிவை காண்பதற்காக நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது வாக்கெடுப்பை நடத்துவதற்கு உடனடியாக அனுமதிப்பதன் மூலம் நாடாளுமன்றம் தனது பெரும்பான்மையை நிருபிப்பதற்னு அனுமதிக்கவேண்டும் என தூதுவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த ...

Read More »

கோத்தாவிற்கு விதித்த தடை நீக்கம்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விஷேட மேல் நீதிமன்றால் இன்று நீக்கப்பட்டுள்ளது. அரச நிதி மோசடியில் கோத்தபாயவிற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விஷேட மேல் நீதி மன்றில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகிய போது எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி முதல் ஜனவரி 14ஆம் திகதி வரையில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

Read More »

பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி!

சூரியனும் பூமியும் 460 கோடி ஆண்டுகள் முன்பு உருவாயின.  ஆனால், சுமார் 1,362 கோடி ஆண்டுகள் முன்பே சூரியனைப் போலப் பல மடங்கு நிறை கொண்ட குண்டுவிண்மீன்கள் பிறந்தன எனவும் சுமார் 1,355 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இவற்றில் பல சூப்பர் நோவாவாக வெடித்துச் சிதறி, அதில் சில முதன்முதல் விண்மீன் கருந்துளைகளாக உருவாயின எனவும் கண்டு பிடித்துள்ளனர். அரிசோனா குண்டு விண்மீன்கள் வானவியல் துறை ஆய்வாளர் ஜூட் பவுமனும் (Judd Bowman) அவரது ஆய்வுக் குழுவினரும் சேர்ந்து 28 பிப்ரவரி  2018-ல் நேச்சர் ...

Read More »

மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை!

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘மெரினா புரட்சி’ படத்திற்கு மீண்டும் தடை விதித்துள்ளார்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘மெரினா புரட்சி’ என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த மத்திய திரைப்பட தணிக்கை குழு படத்துக்கு அனுமதி கொடுக்காமல் மறுசீரமைப்பு குழுவுக்கு அனுப்பியது. தற்போது படத்தை பார்த்த நடிகை கௌதமி தலைமையிலான மறு சீரமைப்பு குழு எந்த காரணமும் சொல்லாமல் மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை விதித்துள்ளனர். மறு சீரமைப்பு குழு மறுப்பு தெரிவித்தால் டெல்லி ...

Read More »