குமரன்

இரட்ணஜீவன் கூல்- மணிவண்ணன் வழக்கு இணக்கசபைக்கு மாற்றம்!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இணக்க சபையில் முறைப்பாட்டாளரும் எதிரியும் இணக்கப்பாட்டுக்கு வராவிடின் வழக்கை வரும் நவம்பர் 14ஆம் திகதி விளக்கத்துக்கு நியமிப்பதாகவும் நீதிமன்று கட்டளை வழங்கியது. தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிராக ...

Read More »

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகள் என்று எவரும் இந்த நாட்டில் இல்லை என்று அவர் கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இது சம்பந்தமாக பேசி தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அவர் கூறினார். அண்மையில் கண்டி சட்டத்தரணிகள் சங்கத்துடன் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்குப் பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ...

Read More »

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் இருந்த 35 பேரும் எங்கே?

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் கடந்தவார இறுதியில் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த முகாமில் எஞ்சியிருந்த 35 பேரையும் அவுஸ்திரேலியாவிலுள்ள முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி சட்டவிரோதமாக படகுமூலம் வந்தவர்களை தடுத்து வைத்து பரீசிலிக்கவென கடந்த 2008ம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் நிர்மாணிக்கப்பட்டது. சுமார் 10 ஆண்டுகள் கழித்து கடந்தவார இறுதியில் மூடப்பட்டதை அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் David Coleman உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் கிறிஸ்மஸ் தீவில் எஞ்சியிருந்த 35 பேர் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவிலுள்ள தடுப்பு முகாம்களுக்கு ...

Read More »

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வெளியேற வேண்டும்!- பாகிஸ்தான்

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ”ஆக்சன் ஏய்டு” என்ற தொண்டு நிறுவனம் பாகிஸ்தானில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் ஒன்றாகும், வறுமை ஒழிப்பு, கல்வி, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பணியை “ ஆக்சன்ஏய்டு” தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிலையில், 60 நாட்களுக்குள் தங்கள் செயல்பாடுகளை ...

Read More »

“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” – ஜூனியர் விக்ரம்

“இதெல்லாம் இவ்வளவு வேகமா நடக்குமாங்கிறதே எனக்கு ஒரு கனவு போலத்தான் இன்னும் இருக்கு. ‘சேது’ படத்துக்கு முன்பான பத்து வருஷங்களும் என் அப்பாவுக்கு அவ்வளவு கஷ்டமான காலம். அப்போதான் நான் பிறந்தேன். பாலா மாமாதான் என் அப்பாவோட எல்லாக் கனவுகளுக்கும் ஒரே படத்தின் மூலம் உயிர் கொடுத்தவர். திடீர்னு கட் பண்ணினா, அதே பாலா மாமா இப்போ என்னையும் ஹீரோவாக்கி, ‘வர்மா’ படம் டைரக்ட் பண்ணிட்டிருக்கார். இது ரெண்டுக்கும் பின்னால கடவுள்னு ஒருத்தர் இருக்கார்… காரணம்னு ஏதோ இருக்கு… அதை எனக்கு சிம்பிளா சொல்லத் ...

Read More »

புலமைப் பரிசில் பரீட்சை! 3 தமிழ் மாணவர்கள் முன்னிலையில் !

இடம்பெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முன்னிலையிலுள்ள  3 தமிழ் மாணவர்களில் இருவர் 2 ஆம் இடத்தினையும் ஒருவர் 3 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர். இந்நிலையில்,  முதலாம் இடத்தை பிலியந்தல -சோமவீர சந்ரசிறி வித்தியாலயத்தைச் சேர்ந்த புமித் மெத்துனுல் விதானகேயும் வெயங்கொட – சென்.மேரிஸ் கல்லூரியின் குருகுலசூரிய சனுபா திமத் பெரேராவும் பெற்றுள்ளனர். இருவரும் 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் ...

Read More »

சுமந்திரன் மீதான கொலை முயற்சி! சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரம் தாக்கல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலைசெய்ய முயற்சித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் போராளிகளான 5 சந்தேகநபர்களுக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் நேற்று(4) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பிரமுகர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஐவர் மீதும் தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. கொழும்பு, இலக்கம் – 6 சிறப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் வீதி விபத்து ஏற்படும் பகுதியாக மெல்போர்ன் வடக்கிலுள்ள Plenty Road, Bundoora என கூறப்பட்டுள்ளது. இந்த தகவிலினை பிரபல காப்புறுதி நிறுவனமான AAMI-இன் புதிய அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஓகஸ்ட் 2017 முதல் திகதியிலிருந்து 31 ஜுலை 2018 ற்க்கு இடையில் நாடு முழுவதும் ஏற்பட்ட வாகன விபத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் பிரகாரம் கடந்த ஒரு ஆண்டில் மெல்போர்னில் மட்டுமல்லாது அவுஸ்திரேலியா முழுவதிலும் அதிக வீதி விபத்துக்கள் இடம்பெற்ற பகுதியாக மேற்குறித்த பகுதி உள்ளது. ...

Read More »

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் வெளியானது!

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் புதிய குவால்காம் சிப்செட் விவரங்கள் தெரியவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனிற்கான ஆன்ட்ராய்டு பை ஃபர்ம்வேர் லீக் ஆகியுள்ளது. இதில் வெளிவர இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் குறியீட்டு பெயர் தெரியவந்துள்ளது. அதன்படி சாம்சங் நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் வின்னர் என அழைக்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்து சாம்சங் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், இதன் வெளியீட்டு தேதி மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ...

Read More »

வடமாகாண சபை பாவங்களை சுமந்து விடைபெறுகிறதா?

நாங்களே கொண்டு வந்த நல்லாட்சி அரசு எங்களது நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து இன்றைக்கு எங்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே நங்கள் இனி கவனமாகச் செயற்பட வேண்டியிருக்கிறது. என மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் போது மாகாண சபைக்கான தேர்தலை விரைவாக வைக்குமாறு கோரி ஐனாதிபதிக்கு கடிதம் அனுப்பலாம் என தர்மபால செனவிரட்ன அவைத் தலைவரிடம் கேட்டிருந்தார். நாங்கள் அவ்வாறு ...

Read More »