குமரன்

தமிழ்க் கட்சிகளுக்கு ஆதாயம்; தமிழ் மக்களுக்குச் சேதாரம்!

போட்டிபோட்டுக் கொண்டு அலைபேசிக் கம்பனிகள் வெகுமதிகளை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அநேக மக்கள் அது குறித்து ஆர்வம் இல்லாது இருக்கின்றார்கள்.  அதைப்போலத்தான் சேதாரங்களை நினைத்தே, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் இருக்கிறார்கள். பொதுவாகவே, அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்பதில் நாம் எல்லோரும் கெட்டிக்காரர்கள்தான். ஆனால், பதில்களைக் கண்டுபிடிப்பதில்தான் சிரமங்களை எதிர் கொள்கிறோம். தமிழ் மக்களின் அரசியலில், பொதுவானதும் முக்கியமானதுமான பிரச்சினைகளிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்  உள்ள கட்சிகளுக்குள்ளேயே ஒருமித்த கருத்தில்லையென்றால், என்ன செய்வது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. ...

Read More »

மெல்பேர்ண் நகரில் திடீர் பதற்றம் !

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருக்குமீ பிளாக்ராவ்(Flagstaff ) தொடருந்து நிலையத்தில் திடீர் பதற்றம் ஏற்படுள்ளது. இதனால்  ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். பயணி ஒருவரிடம் துப்பாக்கி இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டு  காவல்துறையினர் அதிரடியாக களமிறங்கினர். என்னவென்று தெரியாத நிலையில் பயணிகள் அச்சமடைந்தனர். சோதனையின்போது சந்தேக நபர் ஒரு  தெருக்கலைஞர் எனத் தெரிவந்தது.  அக்கலைஞர் கையில் இசைக்கருவி அடங்கிய பை இருந்துள்ளது. பயணிகளுக்கோ  பைக்குள் துப்பாக்கியை மறைத்து வைதிருப்பதாக சந்தேகம் எழவே காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதேநேரம் இசைக் கலைஞர்  இசை நிகழ்ச்சிக்காக தொடங்குமுன் மூச்சுப் பயிற்சி செய்துகொண்டிருந்தது ...

Read More »

ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றியீட்டி ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெற்று வருகின்றது. இதில் சார்ஜாவில் இடம்பெற்ற முதலாவது, இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி தொடரில் 2:0 என்ற நிலையில் இருந்தது. இந் நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி நேற்றைய தினம் அபுதாபியில் நேற்று மாலை 4:30 ...

Read More »

ஜெனீவா தீர்மானத்தை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!

ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கைச்சாத்திட்டுள்ளதைத் தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது, முப்படையினர், அரசாங்கம் மற்றும் மக்களை காட்டிக்கொடுத்த செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட காணிகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீண்டும் விடுவிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள முன்மொழிவு, அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள பிழையான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, ...

Read More »

யாழில் முகமூடி அணிந்த கும்பலால் தாக்குதல்!

யாழில்.வீடொன்றின் மீது முகமூடி அணிந்த கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டு உள்ளது. கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை உட்புகுந்தவர்கள் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். நாம் உறக்கத்தில் இருந்த போது , கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டு எழுந்த போது எமது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை முகத்தினை கறுப்பு துணிகளால் கட்டிவாறு நின்ற கும்பல் அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றது என வீட்டின் உரிமையாளர் யாழ். காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு ...

Read More »

விண்வெளியில் பெண்களின் வரலாற்று நிகழ்வு ரத்து!

விண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து விண்வெளி நடையை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய கட்டுமானப்பணிகளுக்காக சில மணி நேரம் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று, விண்வெளியில் மிதந்து கொண்டு வேலை செய்வது வழக்கம். இதுவரை இந்தப் பணிகளை ...

Read More »

‘தேர்தலுக்கான அவசியம் எந்தக் கட்சிக்கும் இல்லை’!-பைசர் முஸ்தபா

தேர்த​லை நடத்த ​​வேண்டும் என்று எல்லோரும் கூறினாலும், எந்த​வோர் அரசியல் கட்சியும், இது தொடர்பான முனைப்புடன் இல்லை. தேர்த​லை நடத்த, அரசியல் கட்சிக​ளே தாமதித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்தவோர் அரசியல் கட்சியும், தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற முனைப்பில் இல்லையென்று, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா தெரிவித்தார்.   நேற்று (26) அவர் வழங்கிய பிரத்தியேகச் ​செவ்வியி​​லேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ​செவ்வியின் முழு விவரம் வருமாறு, கே: ஜனாதிபதி முறையை ஒழித்தல், அதிகாரப் பகிர்வு, தேர்தல் முறைமையில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் நேர்மையாக செயற்பட்ட இலங்கையர்!

மிகவும் நேர்மையாக செயற்பட்ட இலங்கையர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காணாமல் போன பணப்பை ஒன்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரண்டு நபர்கள் 19500 அவுஸ்திரேலிய டொலர்களை (2.46 மில்லியன்) வங்கியில் மாற்றி கொண்டு பிட்ஸா கடை ஒன்றுக்கு சென்று அமர்ந்துள்ளனர். பிட்ஸாவுக்கு காத்திருந்த நபர்களில் ஒருவரது கையில் இருந்து பணப்பை கீழே விழுந்துள்ளது. எனினும் அதனை கவனிக்காமல் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். பலர் அங்கு நடமாடியுள்ளனர். ...

Read More »

போலி செய்திகளை முடக்கும் பணிகளில் முகநூல்!

ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய பொது தேர்தலையொட்டி போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய பொது தேர்தலுக்கு தயாராகும் விதமாக ஃபேஸ்புக்கில் போலி செய்திகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரவுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. போலி செய்திகள் பரவுவதை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் ஊடகம் மற்றும் தனியார் செய்தி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இதுதவிர பயனர்கள் அடுத்த வாரம் முதல் தங்களது வேட்பாளர்களின் 20 விநாடி வீடியோக்களை பார்க்க முடியும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதற்கென ஃபேஸ்புக் ...

Read More »

அவுஸ்திரேலிய பணியாளர்களால் திருமலை கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது!

இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்கு கலந்துகொள்ள கடந்த மார்ச் 23 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான சக்சஸ் கப்பலின் பணியாளர்களினால் நேற்று திருகோணமலை ரவுன்ட் பே கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக சக்சஸ் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் டிரகன் ஜி க்ரோகன் அவர்கள் உட்பட 19 கடற்படையினர் கலந்துகொண்டனர். அதேபோன்ற இலங்கை கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ நிருவனத்தின் ...

Read More »