குமரன்

அவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமை மூடிவிடுக!-ஐநா

அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை  அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருக்கும் முகாம்களில் பாரிய நோய் அபாயம் உள்ளதால் அங்குள்ளவர்களை உடனடியாக வெளியேற்றவேண்டுமென ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. யுஎன்எச்சீஆர் அமைப்பின் அவுஸ்திரேலியாவிற்கான பேச்சாளர் கதெரின் ஸ்டபெர்பீல்ட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் சுகாதாரசேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். நவ்று முகாமில் கடந்த மாதம் பதின்ம வயது யுவதியொருவர் தீ மூட்டி தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ள ஐநா அமைப்பின் பேச்சாளர் அவரை முகாமிலிருந்து வெளியேற்றவேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் ...

Read More »

குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு வானிலை அறிக்கை வாசித்த தொகுப்பாளர்!

மின்னெஸோடாவைச் சேர்ந்த வானியல் நிபுணரான சூசி மார்டின், சர்வதேச குழந்தை சுமக்கும் வாரத்தை ஆதரிக்கும் பொருட்டு, தொலைக்காட்சியில் தனது குழந்தையுடன் தோன்றி வானிலை அறிக்கை வாசித்துள்ளார். சூசி குழந்தையுடன் வானிலை அறிக்கை வாசித்த காணொளி இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது. தன் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்ட சூசி, கைக்கடக்கமான உதவியாளர் என்று அந்தக் குழந்தையை அறிமுகம் செய்துவிட்டு தனது அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார். இந்த காணொளியில் தூக்கக் கலக்கத்தில் இருக்கும் சூசியின் குழந்தைக்கும் பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர். வேலையைச் செய்யும்போதே இப்படி குழந்தையைக் கட்டிக்கொள்வது தான் ...

Read More »

பாடகி சின்மயின் துணிச்சலை பாராட்டுகிறேன்!-நதியா

உலக அளவில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள் குறித்து metoo மூலம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் பாடகி சின்மயி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி குற்றசாட்டு குறித்து நடிகை நதியா கூறுகையில், இப்படி பல பெண்கள் முன்வந்து தங்களுக்கு நடந்த அநீதிகள் குறித்து பேசினால், குற்றம் செய்தவரின் பெயரை வெளியிட்டால் அவர்களுக்கு பயம் வரும் அதனால் பெண்கள் முன்வந்து இதுபோன்று பேசவேண்டும். ஆண்கள் தங்கள் உரிமைக்காக பேசுகின்றனர். அதுபோல் ...

Read More »

விஜயகலா கைது ஒரு அரசியல் நாடகமா?

இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கைப் பொலிஸ் திட்டமிட்ட ...

Read More »

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து அநுராதபுரம் வரையான நடைப்பயணம்!

ஊடக அறிக்கை மனிதகுலவரலாற்றின் பரிணாமம் என்பது, காலத்திற்குக்காலம் அதன் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்களை மதிக்கின்ற, அவற்றைப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் பெரும் அக்கறையோடும், அறிவார்ந்தும் செயல்படுவதன்மூலமாகவே, மனிதசமூகம் பாரிய வளர்ச்சிநிலையைக் கண்டிருக்கின்றது. உலகம் என்ற ஒற்றைச் சொல்லில் பல நாடுகளும், அந்நாடுகளின் தனித்துவமான இன அடையாளங்களுடன் வாழக்கூடிய இறையாண்மையுள்ள மக்களினதும் ஒன்றுபட்ட கூட்டாகவே அவரவர் உரிமைகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன. இத்தகைய நிலைகளைச் சீர்தூக்கிப்பார்க்கின்ற, தனிமனித உரிமைகளிலும் அவற்றின் முன்னேற்றங்களிலும் அக்கறைகொண்ட நாடுகளால்தான் தமது வளர்ச்சிப்பாதையில் பெரும் முன்னேற்றகரமாச் செயற்பட முடிகின்றன. அவ்வாறு முடியாத நாடுகளினாலும் அதன் ...

Read More »

எல்லை நிர்ணய மீளாய்வு குழு அறிக்கை வெளியான பின்னரே தேர்தல்கள் குறித்து நிலைப்பாட்டுக்கு வர முடியும்!

தேர்தல் முறைமை குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது என அதன் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். தலைமையிலான எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை வெளியானதன் பின்னரே மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியும் எனவும் தெரிவித்தார். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்தி மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More »

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை கோரி அனுராதபுரம்  சிறைச்சாலைக்கு கால்நடை பவனியை மேற்கொண்ட மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி கடந்த ஒன்பதாம் திகதி கால்நடை பேரணியை ஆரம்பித்த யாழ்பல்கலைகழக மாணவர்கள் இன்று மதியம் அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைந்தனர். இவ்வாறு அனுராதபுரம் சிறைக்கு சென்ற மாணவர்களில் சிலருக்கு அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது அதேவேளை ஏனைய மாணவர்கள் சிறைச்சாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். அரசியல் கைதிகளின் விவகாரத்தில் நல்லிணக்க அரசாங்கத்தின் போக்கை கண்டித்து ...

Read More »

ஐ.நா. மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக ஆதரவை பெற்ற இந்தியா, உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கென சில நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகளை பெறுவதன் மூலம் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வாக முடியும். ...

Read More »

இணையத்தில் நாட் குறிப்பு எழுதலாம்!

நீங்கள் கடந்த மாதம் என்ன செய்தீர்கள்? கடந்த வாரம் என்ன செய்தீர்கள்? உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது? இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது டேபில்.மி இணையதளம். இது ஓர் இணைய டைரி சேவை. இதில் உங்களுக்கான பக்கத்தை உருவாக்கி, டைரி குறிப்புகளை எழுதிச் சேமித்து வைக்கலாம். இதில் உறுப்பினராகச் சேருவதும் எளிது. தொடர்ந்து டைரி எழுதிப் பராமரிப்பதும் எளிது. நினைவூட்டல் சேவையாகவும் பயன்படுத்தலாம். இமெயிலுடனான ஒருங்கிணைப்பு, ஹாஷ்டேக் வசதி, பதில் அளிக்கும் அம்சம் என பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன. இணைய முகவரி: https://dabble.me/

Read More »

பத்திரிகையாளன் வாயை மூடவே முடியாது! – ‘நக்கீரன்’ கோபால்

ஒரு கட்டுரைக்காகத் திடீர் கைது, முன்னுதாரணம் அற்ற நிகழ்வாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 பிரயோகம், ஊடகங்களின் ஒட்டுமொத்த எதிர்க்குரல், நீதிமன்றத்தின் குறுக்கீடு, விடுவிப்பு என்று மீண்டும் பரபரப்பு எல்லைக்குள் வந்திருக்கிறார் ‘நக்கீரன்’ கோபால். ஆளுநர் சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரைக்காகக் கைதுசெய்யப்பட்ட விதம் அவரைப் புண்படுத்தியிருந்தாலும், அவரது துணிச்சலை அது துளியும் பாதிக்கவில்லை. ஊடகங்கள் இன்று எதிர்கொள்ளும் மோசமான சூழலை விரிவாகப் பேசினார். ஒருவேளை நீதிமன்றம் தங்களை விடுவிக்காமல் இருந்திருந்தால், ‘நக்கீரன்’ முடங்கியிருக்குமா? ஏனெனில், ‘நக்கீரன்’ ஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மீது எஃப்ஐஆர் ...

Read More »