மின்னெஸோடாவைச் சேர்ந்த வானியல் நிபுணரான சூசி மார்டின், சர்வதேச குழந்தை சுமக்கும் வாரத்தை ஆதரிக்கும் பொருட்டு, தொலைக்காட்சியில் தனது குழந்தையுடன் தோன்றி வானிலை அறிக்கை வாசித்துள்ளார்.
சூசி குழந்தையுடன் வானிலை அறிக்கை வாசித்த காணொளி இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது.
தன் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்ட சூசி, கைக்கடக்கமான உதவியாளர் என்று அந்தக் குழந்தையை அறிமுகம் செய்துவிட்டு தனது அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார். இந்த காணொளியில் தூக்கக் கலக்கத்தில் இருக்கும் சூசியின் குழந்தைக்கும் பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
வேலையைச் செய்யும்போதே இப்படி குழந்தையைக் கட்டிக்கொள்வது தான் ஒரு மகிழ்ச்சியான தாயாக இருக்க உதவியுள்ளதாகவும், இன்றுவரை இது சவுகரியத்துக்கும், அமைதிக்குமான காரணமாக இருப்பதாகவும் சூசி கூறியுள்ளார் .
குழந்தையை எப்படி கட்டிக்கொள்ள வேண்டும் என்பதையும் சூசி விளக்கியுள்ளார். ஊழியராகவும், தாயாகவும் தனக்கு தன் நிறுவனம் ஆதரவு அளித்துள்ளதாகக் கூறி நன்றி தெரிவித்துள்ளார் சூசி.