கொரோனா வைரஸ் இயற்கையில் இருந்து வேறானதொன்றல்ல. அதுவும் இயற்கையில் ஒரு படைப்பே. அதன் மூலம் இன்று இயற்கை ஊதியிருக்கும் அபாயச்சங்கு மனுக்குலத்துக்கான ஒர் எச்சரிக்கை. இதனைப் புரிந்து கொண்டவர்களாகக் கொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போமாயின் ஏனைய உயிர்களைப் போன்று இப்புவியில் மனிதன் நோய் நொடியின்றி நீடூழிவாழலாம் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 5ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது. ...
Read More »குமரன்
சமூக விலகலை உறுதி செய்ய உதவும் பிரத்யேக காலணிகள்
பொதுமக்கள் சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்க உதவும் வகையில் ருமேனியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் பிரத்யேகமான ஷூவை தயாரித்து அறிமுகம் செய்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தற்போது இருக்கும் ஒரே வழிமுறை சமூக விலகல் மற்றும் முக கவசம் அணிவதுதான் என மருத்துவ உலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பெரும்பாலான பொது இடங்களில் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டு ...
Read More »முதன்முறையாக தந்தை விக்ரமுடன் கூட்டணி சேரும் துருவ்?
ஆதித்ய வர்மா படம் மூலம் நடிகராக அறிமுகமான துருவ், அடுத்ததாக தந்தை விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆதித்ய வர்மா மூலம் நல்ல நடிகர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்கிறார் விக்ரமின் மகன் துருவ். நல்ல வரவேற்பு கிடைத்ததால் தந்தையும் மகனும் இரண்டாவது படத்தின் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் என கூறப்பட்டது. இதனிடையே விக்ரமின் 60-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க ...
Read More »பாலைவன மண்ணில் தென்கொரிய தொழில்நுட்பத்துடன் நெல் சாகுபடி
சார்ஜாவில் பாலைவன மண்ணில் தென்கொரிய தொழில்நுட்பத்துடன் நெல் சாகுபடி செய்யப்பட்டதை மந்திரி டாக்டர் தானி அல் ஜையூதி நேரில் ஆய்வு செய்தார். அமீரகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பாலைவன மண்ணின் தன்மை மாற்றப்பட்டு, உப்பு நீர் சுத்திகரிக்கப்பட்டு பல்வேறு இயற்கையான சவால்களை முறியடிக்கும் வகையில் சார்ஜாவில் தென்கொரிய தொழில்நுட்பத்துடன் நெல் சாகுபடி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. அமீரக பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் தென்கொரியாவின் வேளாண்மை நிபுணர்கள் கூட்டு முயற்சியில் இந்த ...
Read More »பேராசிரியர் ஜீவன் ஹூல் தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து விலகவேண்டும்!
தேர்தல் திகதியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளமை காரணமாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்ஆணைக்குழுவிலிருந்து விலகவேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்மாநாட்டில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் திகதிக்கு எதிராக நீதிமன்றம் செயற்படவேண்டும் என மறைமுகமாக பேராசிரியர்ரத்னஜீவன் ஹூல் தூண்டியதன் காரணமாக தேர்தல் ஆணைக்குழுவில் அவரின் பொறுப்பு என்னவென வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்கள் தேர்தல் ஆணைக்குழு மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ...
Read More »நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல் ஏன் ஏற்பட்டது?
மத்திய வங்கி மோசடியின் முக்கியசந்தேகநபரான வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளதுடன் சிங்கப்பூரில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் மிகப்பெரிய நிதிமோசடியான மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அர்ஜூன மகேந்திரனை கைதுசெய்தும் நிலையில் இன்டபோல் காணப்பட்டவேளை நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து மிகுந்த செல்வாக்கு மிக்க சிலர் மகேந்திரனிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல்ரீதியிலானவை,அவரை கைதுசெய்து இலங்கைக்கு நாடு கடத்தவேண்டிய அவசியமில்லை என இன்டர்போலிற்கு அறிவித்தனர் எனவும் சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார் இந்த விபரங்களை ...
Read More »காக்கா முட்டையில் நடித்த சிறுவர்களா?
காக்கா முட்டை படத்தில் சிறுவர்களாக நடித்திருந்த விக்னேஷ்-ரமேஷ் ஆகிய இருவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தனுஷ் தயாரிப்பில், கடந்த 2014-ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘காக்கா முட்டை’. குப்பத்து பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்கள், உயர்ந்த வர்க்கத்தினரால் சாப்பிடப்படும் உணவான பீட்சாவை சாப்பிட எடுக்கும் முயற்சிகளை கதையாக கொண்டு இயக்கியிருந்தார் மணிகண்டன். இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது. இதில் சிறுவர்கள் விக்னேஷ்-ரமேஷ் இருவரும் பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை என்ற பெயரில் அண்ணன்-தம்பியாக ...
Read More »இரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளின் ஒரு கதை
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக 2019 நவம்பர் 18 பதவியேற்றுக்கொண்ட கோதாபய ராஜபக்ச இப்போது பதவியில் 6 மாதங்களை நிறைவுசெய்திருக்கிறார். குறுகிய ஆனால் பரபரப்பூட்டும் நிகழ்வுகள் நிறைந்த இந்த பதவிக்காலத்தில் அவர் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார் ; தொடர்ந்து முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால், ஜனாதிபதியாக கோதாபயவின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வது இந்த கட்டுரையில் எனது நோக்கமல்ல.பதிலாக, அவரின் ஆட்சியின் கீழான இந்த சில மாதங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப்பதவியின் இயல்பு ; மிகவும் அசாதாரணமான பாணியில் எவ்வாறு மாறுதலுக்குள்ளாகியிருக்கிறது என்பதில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன். ...
Read More »முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கடந்த 31 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த யுவதியின் உடலம் கிணற்றில் கிடப்பது இன்று (03) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட குறித்த யுவதி அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பது கண்டறியப்பட்ட நிலையில் கொலையா? தற்கொலையா? என ...
Read More »நாளையும், நாளை மறுதினமும் முழு நேர ஊரடங்கு!
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை வியாழக்கிழமை (4) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (5) முழு நேரமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. ஜுன் 6 சனிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும். கடந்த திங்கட்கிழமை முதல் இன்று புதன்கிழமை வரை அனைத்து ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			