முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி கடந்த 31 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த யுவதியின் உடலம் கிணற்றில் கிடப்பது இன்று (03) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த யுவதி அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பது கண்டறியப்பட்ட நிலையில் கொலையா? தற்கொலையா? என விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
சம்பவம் குறித்த விசாரணைகளை சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal