பாகுபலி படம் மூலம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ், அவர் இயக்கத்தில் நடிப்பது சந்தோஷம் என்று கூறியிருக்கிறார். ‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதன் இயக்குநர் கே கே ராதா கிருஷ்ணா. இந்தப் படம் இப்போதைக்கு ‘பிரபாஸ் 20’ என்று ...
Read More »குமரன்
கடிநாய்கள் மலிந்த ஊரில் காலை தூக்கியிருந்தால் வீரமோ?
முப்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த போர் முடிவடைந்த ஸ்ரீலங்காவில், தற்போது ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, ஸ்ரீலங்காவில் பேசாத அரசியல்வாதிகளின் வாய்களே இல்லை. மேடைக்கு மேடை, சோடைபோகாத தங்களின் தங்கக்குரல் பேச்சுகளில், அரசியல்வாதிகள் எப்போதும் வாய்கூசாமல் பயன்படுத்தி வருகின்ற சொல் ‘ஜனநாயகம்’. போன ஆட்சிக்காலத்தில், இந்தச் சொல்லுக்குத் தங்கத்தால் பூண் பூட்டிவிட்டதைப்போல, கொஞ்சம் அதிகமாகவே மவுசு இருந்தது. ‘நல்லாட்சி’ என்ற பொற்கிண்ணத்தில், மிதக்கின்ற விலை உயர்ந்த நாணயம் போன்ற இந்த ஜனநாயகத்தைத் தாங்கள் பெற்றெடுத்திருப்பதாக மைத்திரியும் ரணிலும் எல்லோரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் காண்பித்தார்கள். ...
Read More »அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு பரவத்தொடங்கியது வைரஸ்!
அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு கொரோனா வைரஸ் பரவிய இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவுஸ்திரேலியாவில் இதுவரை 40 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ; ஒருவர் உயிரிழந்துள்ளார் எனினும் இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் நோய்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு கொரோனா வைரஸ் பரவிய இரண்டு சம்பவங்கள்பதிவாகியுள்ளமை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது நியுசவுத்வேல்சின் சுகாதார அமைச்சர் பிரட் ஹசார்ட் இதனை உறுதி செய்துள்ளார். ஈரானிலிருந்து வருவபவர்களிற்கான தடை நடைமுறைக்கு வருவதற்கு முதல் நாள் அவுஸ்திரேலியாவிற்கு வந்த நபர் ஒருவர் கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் ...
Read More »அவுஸ்திரேலியாவில் கைகுலுக்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் !
கொரோனா வைரஸ் பரவி வரும் இவ்வேளையில் கைகுலுக்கிக்கொள்வதை தவிர்ப்பது புத்திசாலித்தனமாக நடவடிக்கையாக அமையும் என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்சின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நான் எனது நாளாந்த நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மக்களை கைகுலுக்கிக்கொள்வதை நிறுத்தி விட்டு முதுகில் மெதுவாக தட்டுமாறு கேட்டுள்ளார் கைகுலுக்காமல் இருப்பது புத்திசாலித்தனமான நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார். முத்தமிடும்போது எச்சரிக்கையாகயிருங்கள் எனவும் நியுசவுத்வேல்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு வைரஸ் பரவத்தொடங்கியுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
Read More »நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் 68 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை!
நாடாளுமன்றம் இன்று (02) நள்ளிரவுடன் கலைக்கப்படுமானால் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும். 5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது. அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது. அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினருக்கும் இந்த வாய்ப்பு இல்லாமல் போகவுள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ...
Read More »நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும்!
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று (02) இரவு கலைக்கப்படும் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இன்றைய தினம் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்ற ஆயுட்காலம் நான்கரை வருடங்களை கடந்த பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அதன்படி நேற்று (01) நள்ளிரவு நாடாளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைந்த நிலையில் ஜனாதிபதியால் எந்த வேளையிலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். கடந்த 2005 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் ...
Read More »“நான் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விரும்புகிறேன் எனக் கூறியதில்லை”!
“நான் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விரும்புகிறேன் எனக் கூறியதில்லை,” என ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த குர்து அகதியான பெஹ்ரூஸ் பூச்சானி ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பூச்சானி ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்து வந்த நிலையில் பூச்சானியின் தற்போதைய கருத்து பதிலடியாக கருதப்படுகின்றது. முன்னதாக, நியூசிலாந்துக்கு வரும் தனிநபர் குறித்து தனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார் நியூ சிலாந்து பிரதமர். அதனால் அது அவர் மற்றும் அவர்களின் ...
Read More »துபாயில் பெண்கள் மட்டும் நடத்தும் இசைக்குழு, கலையகம் – வழிகாட்டியாக ஏ.ஆர்.ரகுமான்
மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த சுமார் 50 பெண் இசைக்கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படும் ஒலிப்பதிவுக் கூடம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் வழிகாட்டியாக செயல்படுவார். துபாயில் இந்த ஆண்டும் (2020) வழக்கம்போல் சர்வதேச பொருட்காட்சி நடைபெறவுள்ளது.‘சிந்தனைகளை இணைத்து, எதிர்காலத்தை படைப்போம்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தொடங்கி, 10-4-2021 வரை நடைபெறும் இந்த பொருட்காட்சியை பார்வையிட உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சுமார் 50 பெண் இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து துபாய் ...
Read More »திருக்கேதீஸ்வரத்திலிருந்து எழுவைதீவு வரை!
அண்மையில் தமிழ் வாக்குகள் சாதி ரீதியாகவும் சமய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரை தொடர்பாக ஒரு சமூக செயற்பாட்டாளர் என்னோடு கதைத்தார். அவர் காரைநகரில் உள்ள சமூக மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்.கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது இந்த அமைப்பு என்னோடு தொடர்பில் இருந்தது. அவர்களை ஆதரித்து கட்டுரைகளையும் எழுதி இருக்கிறேன். என்னோடு தொலைபேசியில் கதைத்த நண்பர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். சாதிரீதியாக சமூகத்தை பிரிப்பதற்கு நாங்கள் எதிராகவே இருப்போம். நீங்கள் கூறுவது ...
Read More »அம்மன் தோற்றத்தில் நயன்தாரா! –
நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். அவருடன் ஊர்வசி, மவுலி, இந்துஜா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து ...
Read More »
Eelamurasu Australia Online News Portal