குமரன்

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்தது- 2 தொழிலாளர்கள் பலி, 18 பேர் சிக்கித் தவிப்பு!

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. சீனாவின் யுன்செங் கவுண்டியில் லாங்யுன் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஷிப்டில் 334 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் வடிகால் சுரங்கத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதும் சுரங்கத்தினுள் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சுரங்கம் இடிந்து விழுந்த பகுதியில் 22 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்புக்குழுவைச் சேர்ந்த ...

Read More »

ரோவிற்கு அயல்நாட்டு அரசியல்வாதிகளை கொலைசெய்யவேண்டிய தேவையில்லை! -சரத்பொன்சேகா

இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோவிற்கு அயல்நாட்டு அரசியல்வாதிகளை கொலைசெய்யவேண்டிய தேவையில்லை என முன்னாள் இராணுவதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் ரோ போன்ற அமைப்பு அயல்நாட்டின் அரசியல்வாதிகளை கொலை செய்ய முயலும் என நான் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரோ என்பது இந்தியாவின் உயர்ந்த தொழில்சார் ரீதியான புலனாய்வு அமைப்பு என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா அயல்நாட்டின் அரசியல்வாதிகளை கொலை செய்யும் நோக்கத்துடன் ரோ உருவாக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையின் சில புலனாய்வு அமைப்புகளை போலயில்லாமல் ரோ கடுமையா ஒழுக்ககட்டுப்பாடுகளை கொண்ட அமைப்பு எனவும் ...

Read More »

மக்களின் எதிர்ப்பையடுத்து மூடிய வீதிகளை திறந்தனர் கடற்படையினர்!

முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை மூடிய கடற்படையினர், மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து மூடிய வீதிகளை மக்களின் பாவனைக்கு திறந்து விட்டுள்ள்ளனர்.   முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை திடீரென கடற்படையினர் முட்கம்பிகள் கொண்ட  வேலியினால் வீதியை இடை மறித்து அடைத்தமையினால்  நேற்று (21-10-2018) ஞாயிற்றுக்கிழமை (21) காலை முதல் முள்ளிக்குளத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினை சுமூக நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை ...

Read More »

`மெட்ராஸ்’… `வடசென்னை’… என்ன வித்தியாசம்?

`வடசென்னை’ பற்றிய பாராட்டுகளையும், தூற்றல்களையும் மாறிமாறிப் படித்து மூளைக்காய்ச்சல் வராத குறை. ஒரு பக்கம் `குப்பையில் கூட டீட்டெயிலிங் காட்டியிருக்காரு’ என்றும், இன்னொருபுறம் `குப்பையைவிட தரங்கெட்ட படைப்பு’ என்றும் டைப்பி தீர்க்கிறார்கள். `ஏன் இப்படி’ என நாலைந்து இடியாப்பத்தை கொசகொசவென பிசைந்து கையில் கொடுத்ததுபோல் ஏற்பட்ட பெரும் குழப்பத்திற்குப் பின், ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. `வடசென்னை’யில் என்ன பிரச்னை?! ” `வடசென்னை என்பது ரௌடிகளின் சரணாலயம். அங்கு, குழாயைத் திறந்தால் தண்ணீர் வராது ரத்தம்தான் வரும்’ என்கிற அளவுக்கு வன்முறையையும் வன்முறையாளர்களையும் மட்டுமே வெற்றிமாறன் ...

Read More »

மருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்!

1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாள். இந்தியப் படைகள் யாழ்மருத்துவமனையில் படுகொலை புரிந்த நாள். இந்திய அமைதிப் படைகள் மேற்கொண்ட படுகொலைகளில் ஒன்றான யாழ் போதனா வைத்தியசாலைப் படுகொலைகள் அல்லது யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நிகழ்ந்து 31 வருடங்கள் கடந்துவிட்டன இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியப் படைகள் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் இலங்கைக்கு வந்தனர். அமைதியை ஏற்படுத்தவே இந்தியப் படைகள் வருகின்றன என்று ஈழத் தமிழர்களும் நம்பியிருந்தனர். தமிழ் மக்கள்மீது தமது தீர்வை திணிப்பதன் ...

Read More »

பகத்சிங்கின் கடைசி நிமிடங்கள்!

தாய் நாட்டின் மானம் காக்க தூக்குக் கயிற்றைத் துணிந்து முத்தமிட்ட பஞ்சாப் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாள்  செற்ரம்பர் 28 ஆம் நாள். இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி பிறகு நம் நாட்டை அடிமைப்படுத்தி இங்குள்ள வளங்களை ஏராளமாகக் கொள்ளையடித்துச் சென்றது. அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அடக்குமுறைகளை ஏவியது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களை தீவிரவாதிகள் என்றும் தேசத் துரோகிகள் என்றும் கூறிக் கைது செய்து கடுமையாக சித்ரவதை செய்தது. எனினும், கைது, சிறை போன்றவற்றை துச்சமாக மதித்து ...

Read More »

பார்வதி ஒரு பட வாய்ப்பு கூட இல்லாத நிலையில் இருக்கிறார்!

மலையாள சினிமாவின் மிக திறமையான நடிகைகளில் ஒருவர் பார்வதி. தனக்கு பிடிக்காத கேரக்டர் என்றால் அது எவ்வளவு பெரிய ஹீரோ படம் என்றாலும் எவ்வளவு சம்பளம் என்றாலும் நிர்தாட்சண்யமாக மறுத்து விடுவார். அப்படி செலக்டிவாக நடிப்பதால் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த பார்வதி, தற்போது ஒரு பட வாய்ப்பு கூட இல்லாத நிலையில் இருக்கிறார் என்பது தான் ஆச்சர்யம். இதை அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவரது அம்மா கூட, பார்வதியை நடிப்பை விட்டுவிட்டு எம்.பி.ஏ படிப்பை தொடர்ந்து படிக்க சொல்லி ...

Read More »

நியூசிலாந்தின் மீள்குடியேற்ற சலுகையை ஏற்றுக்கொள்ளும் ஆஸ்திரேலியா!

நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்யப்படும் அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் வர வாழ்நாள் தடை விதிக்கும் சட்டத்தை ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், நியூசிலாந்தின் மீள்குடியேற்ற சலுகையை ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன். நவுரு மற்றும் மனுஸ்தீவுகளில் உள்ள பல்வேறு நாட்டு அகதிகளில் ஆண்டுதோறும் 150 அகதிகளை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக நியூசிலாந்து அரசு ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட காலமாக தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து வருகின்றது. அதனை பல ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அரசு நிலுவையில் வைத்திருந்த நிலையில், மீண்டும் அது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக ...

Read More »

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு – ரஷிய பெண் மீது வழக்கு!

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு தொடர்பாக ரஷிய நாட்டைச் சேர்ந்த எலினா அலெக்சீவ்னா குஸ்யாய்நோவா என்ற பெண் மீது முதன்முதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் ரஷியா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்புக்குழுவின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ...

Read More »

மலையக மக்களுக்காக குரல் கொடுக்கும் யாழ் மக்கள்!

அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி போராடும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் பஸ் நிலையம் முன்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தள நண்பர்களின் ஏற்பாட்டில் “தோட்டத் தொழிலாளருக்காய் வடக்கில்  இருந்து ஓர் உரிமை குரல்” என்ற தொனிப் பொருளின் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும், தோட்ட கம்பனிகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை  எழுப்பியிருந்தனர்.

Read More »