மலையாள சினிமாவின் மிக திறமையான நடிகைகளில் ஒருவர் பார்வதி. தனக்கு பிடிக்காத கேரக்டர் என்றால் அது எவ்வளவு பெரிய ஹீரோ படம் என்றாலும் எவ்வளவு சம்பளம் என்றாலும் நிர்தாட்சண்யமாக மறுத்து விடுவார். அப்படி செலக்டிவாக நடிப்பதால் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த பார்வதி, தற்போது ஒரு பட வாய்ப்பு கூட இல்லாத நிலையில் இருக்கிறார் என்பது தான் ஆச்சர்யம்.
இதை அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவரது அம்மா கூட, பார்வதியை நடிப்பை விட்டுவிட்டு எம்.பி.ஏ படிப்பை தொடர்ந்து படிக்க சொல்லி வற்புறுத்தி வருகிறாராம். பெண்களை இழிவுபடுத்தியதாக கடந்த வருடம் மம்முட்டியை விமர்சித்தார் பார்வதி.. தற்போது சினிமா பெண்கள் அமைப்பின் மூலமாக திலீப் விவகாரத்தில் போர்க்குரால் எழுப்பி வருகிறார்.
மேலும் இந்த விவகாரத்தில் நடிகர்சங்க தலைவராக இருக்கும் மோகன்லால் மீதும் அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார் பார்வதி. இவையெல்லாம் தான் பார்வதிக்கு எதிராக கிளம்பி, அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி விட்டன. இன்னும் சொல்லப்போனால் மலையாள சினிமாவில் பார்வதி மீது அறிவிக்கப்படாத மறைமுகமான ரெட் கார்டு போடப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.