குமரன்

இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் தீர்வொன்றை வழங்குவதென்றால் தங்களிடத்தில் உள்ள திட்டம் என்ன?

70 ஆண்டுகாலமாக நீடிக்கும் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு உங்களிடத்தில் உள்ள உத்தரவாதம் என்ன என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்தில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன், கடந்த காலத்தில் கிடைத்த வாய்ப்புக்களை மஹிந்த ராஜபக்ஷ ஆக்கபூர்வமானதாக பார்க்காது தவறவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.   கடந்த காலத்தினை மறந்து தற்போதுள்ள நிலைமைகளின் பிரகாரம், எமது மக்களுக்கு நியாயமான நிரந்தரமான தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஆகவே தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் தீர்வொன்றை வழங்குவதென்றால் தங்களிடத்தில் உள்ள திட்டம் ...

Read More »

முதல் பார்வை: ஜீனியஸ்

அப்பா தரும் அழுத்தத்ததால் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் சிறுவன், வேலைக்குப் போய் எம்.டி. தரும் அழுத்தத்தால் வேலையில் தீவிரம் காட்டி மனச்சிதைவுக்கு உள்ளானால் அதுவே ‘ஜீனியஸ்’. நரேன் – மீரா கிருஷ்ணன் தம்பதிக்கு ஒரே மகன் ரோஷன். பள்ளி ஆண்டுவிழாவின்போது எல்லா போட்டிகளிலும் முதல் பரிசு பெறும் மகனைப் பார்த்து பூரிப்படைகிறார் நரேன். இனி அவனை இன்னும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் கிளாஸ், டியூஷன் என்று அலைய விடுகிறார். விடுமுறையில் ஊருக்குப் போவதோ, ...

Read More »

தமிழ்மக்கள் கூட்டணியும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்- பி.மாணிக்கவாசகம்

வடமாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைந்த சூட்டோடு சூடாக அதன் முதலமைச்சர் புதிய அரசியல் கட்சியொன்றைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துவிட்டார். அவர் தனது அரசியலைவிட்டு, ஒதுங்கி இருக்கமாட்டார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்த போதிலும், பொதுவாக புதிய அரசியல் கட்சியொன்றை அல்லது புதியதோர் அரசியல் முன்னணியைத் தொடங்கப் போவதாகவே அவருடைய அறிவித்தல் அமைந்திருக்கும் என்ற வெறுமனான எதிர்பார்ப்பே அரசியல் வட்டாரங்களில் மேலோங்கியிருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பைப் புறந்தள்ளி, தான் ஆரம்பிக்கவுள்ள புதிய அரசியல் கட்சியின் பெயரை ‘தமிழ் மக்கள் கூட்டணி என ...

Read More »

புதிய அமைச்சரவை! பதவியேற்றவர்கள் விவரம்!

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா-; போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம- வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மகிந்த சமரசிங்க- துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சர் மகிந்த அமரவீர- விவசாய அமைச்சர் ரஞ்சித் சியபலாபிட்டிய – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ- கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா – மீன்படி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய ...

Read More »

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள்!

அரசியலமைப்பிற்கு முரணான, சர்வாதிகார ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நாடாளுமன்றத்திலேயே தீர்வு உள்ளதாகவும், அதனால் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் நல்லாட்சி அரசாங்கத்தில் மனித உரிமைகளை பாதுகாக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது சீர்திருதத்தின் அடிப்படையில் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் ஒருவரை தெரிவு செய்யும் ...

Read More »

ஏ.ஆர்.முருகதாஸுக்கு வரலட்சுமி சரத்குமார் ஆதரவு!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஆதரவாக வரலட்சுமி சரத்குமார் ட்வீட் செய்துள்ளார். விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. உலகம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘சர்கார்’ வெளியாகிறது. இந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதை, தன்னுடைய ‘செங்கோல்’ ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 6 வயது சிறுமிக்கு சிறுவர்களால் நேர்ந்த ஆபத்து!

தொலைபேசியில் ஆபாச காட்சிகளை தொடர்ந்து பார்த்து வரும் இரண்டு சிறுவர்கள் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விவகாரத்தில் தொடர்புடைய சிறார்கள் இருவரும் 10 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க முடியாது இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் சைபர்-பாதுகாப்பு நிபுணரான Susan McLean இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடன் பேசியுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகம் ஏன் காவல் முறையிடம்  அப்போது முறைப்பாடு அளிக்கவில்லை என அவர் ...

Read More »

இந்தோனேசியாவில் விமானம் விழுந்து நொறுங்கியது- 188 பயணிகள் பலி!

இந்தோனேசியாவில் லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதில் 188 பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. “லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பயணிகள் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 188 பேர் இருந்தனர். அவர்களில் 178 பேர் ...

Read More »

அரசாங்க ஊடகப்பேச்சாளர்களாக ஹெகலிய, சமரசிங்க!

அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் அரசாங்க ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே தேசிய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்துக்கது.

Read More »

டெலோவின் முக்கியஸ்தருக்கு ஆவா குழு எச்சரிக்கை!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான நாகராஜனுக்கு ஆவா குழுவினர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட தலைமை காவல் துறை நிலையத்தில் முறைப்பாடிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளருமான நாகராஜன் என்பவருடைய கையடக்க தொலைபேசியிற்கு நேற்றைய தினம் (28) இரவு 07.30 மணியளவில் இரண்டு தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் தடைசெய்யப்பட்ட கழகங்களை இணைத்து செயற்படாவிட்டால் உன் மீது வாள்வீச்சு நடாத்தப்படும் ...

Read More »