இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் தீர்வொன்றை வழங்குவதென்றால் தங்களிடத்தில் உள்ள திட்டம் என்ன?

70 ஆண்டுகாலமாக நீடிக்கும் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு உங்களிடத்தில் உள்ள உத்தரவாதம் என்ன என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்தில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன், கடந்த காலத்தில் கிடைத்த வாய்ப்புக்களை மஹிந்த ராஜபக்ஷ ஆக்கபூர்வமானதாக பார்க்காது தவறவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

கடந்த காலத்தினை மறந்து தற்போதுள்ள நிலைமைகளின் பிரகாரம், எமது மக்களுக்கு நியாயமான நிரந்தரமான தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஆகவே தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் தீர்வொன்றை வழங்குவதென்றால் தங்களிடத்தில் உள்ள திட்டம் என்ன? அத்திட்டத்தினை எவ்வளவு கால அவகாசத்தினுள் முழமையாக நடைமுறைப்படுத்துவீர்கள்?

ஆத்திட்டத்தினை முழுமையான நடைமுறைப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையை எமக்கு எவ்வாறு ஏற்படுத்துவீர்கள் போன்ற வினாக்களுக்கு தாங்கள் உரிய உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார்.