உயர் கல்வி மற்றும் பயற்சி நெறிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உயர் கல்விக்காக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மாணவர்களை நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஆராய்ந்து வருகிறது. அத்தோடு பயிற்சிகளுக்காகச் சென்றவர்களை நாட்டுக்கு அழைத்து வருவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உயர் கல்வி மற்றும் பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளவர்கள் தாய் ...
Read More »குமரன்
கொரோனா வைரஸ் : புவிசார் அரசியல் விளையாட்டுக்கள்!
பெய்ஜிங், (சின்ஹுவா ) 100 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர், ஆஸ்திரிய -ஹங்கேரிய சாம்ராச்சியத்தின் முடிக்குரிய வாரிசான கோமகன் பிரான்ஸ் பேர்டினண்ட் சரஜீவோவில் கொலை செய்யப்பட்டதையடுத்து தோன்றிய நெருக்கடியை கையாளுவதில் அன்றைய பெரிய வல்லரசுகள் இழைத்த தொடர்ச்சியான புவிசார் அரசியல் தவறுகள் முதலாவது உலகப்போருக்கு வழிவகுத்தன. இன்று உலகம் ஏற்கெனவே உலகளாவிய ‘ போர் ‘ ஒன்றுக்குள் மூழ்கிக்கிடக்கிறது. இத்தடவை எதிரி கண்ணுக்குப்புலப்படாத — முன்கூட்டியே அறிந்திராத ஒரு வைரஸாக இருக்கின்ற போதிலும், பயங்கரமான புவிசார் அரசியல் விளையாட்டுக்களின் பேயுரு இன்னமும் வானில் உலாவுகிறது. ...
Read More »கொழும்பில் 49 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 45 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவடடத்தில் 28 பேரும், யாழ்ப்பாணத்தில் 16 பேரும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, கல்முனை, காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா ஆகிய பகுதிகளில் மிகக் குறைந்தளவானோரே பாதிக்கப்பட்டுள்ளனர் என, தொற்று நோயியர் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More »ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த இளம் தாய்!
அம்பாறை மாவட்டம், அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில், நிந்தவூரைச் சேர்ந்த பெண்ணொருவர், நேற்றிரவு (17) 9 மணியவில் ஒரே சூலில் 3 சிசுக்களைப் பெற்றெடுத்துள்ளார். நேற்றுக் காலை பிரவச வலி என 29 வயதுடைய குறித்த பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 சிசுக்களும் பெறப்பட்டுள்ளதுடன், பெண் சிசுவொன்றும் ஆண் சிசுக்கள் இரண்டும் தாயும் நலமாக உள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் பெண் சிசு 2,620 கிராமும் ஆண் சிசுக்கள் தலா 2,410 கிராமும் நிறையுடன் ஆரோக்கியமாக ...
Read More »சீனாவில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு
சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் பட்டியலில் கூடுதலாக 1290 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவி 1.5 லட்சம் உயிர்களை காவு வாங்கி உள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வுகான் நகரில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டது. வைரஸ் பரவத் தொடங்கியது முதல் ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட ...
Read More »ஆஸ்திரேலியாவில் கொரோனா அவசரகால நிதியுதவி!
ஆஸ்திரேலியாவில் கொரோனா எதிரொலி காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள அந்நாட்டு தொழிலாளர்களுக்கு அவசரகால நிதியுதவி வழங்கப்படுகின்றது. ஆனால், இந்த அவசரகால நிதியுதவியில் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தவிர்க்கப்பட்டிருப்பது பெரும் அச்சத்தையும் வாழ்வாதார சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் 482 எனும் தற்காலிக விசா விதிப்படி, பற்றாக்குறையின் அடிப்படையில் திறன்வாய்ந்த தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் இந்த விசாவின் கீழ், அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை ஆஸ்திரேலியாவில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இவ்விசா மூலம், தத்ரா எனும் ஹோட்டலினால் ஸ்பான்சர் செய்யப்பட்டு ஆஸ்திரேலியா சென்ற 6 வெளிநாட்டுத் தொழிலாளர்கள், ...
Read More »17 வருடங்களுக்குப்பிறகு விஜய்யுடன் இணைந்த நடிகர்
நடிகர் விஜயுடன் பதினேழு வருடங்களுக்கு முன்பு நடித்த நடிகர் தற்போது மீண்டும் இணைந்து நடித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். அனிருத் இசையமைக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், சஞ்சீவ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் இன்னும் பலர் இணைந்து நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பலரையும் கவர்ந்த மகேந்திரனும் இந்த படத்தில் நடித்துள்ளார். அவரைப் போலவே 17 வருடங்களுக்கு முன்பு விஜய்யின் திருமலை ...
Read More »21 ஆம் திகதி காலை 8.45க்கு வீடுகளில் இருந்தவாறு 2 நிமிட மௌன அஞ்சலி!
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இம்மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு வருடம் நிறைவடைகிறது. இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அன்றைய தினம் காலை 8.45க்கு வீடுகளில் இருந்தவாறு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு என கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இதேவேளை இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுத் திருப்பலிகள் மற்றும் விசேட வேலைத்திட்டங்கள் ஆகியன ஏற்கனவே திட்டமிப்பட்டப்படி நடத்தப்படாது என்றும் ...
Read More »டெங்கு, சிக்குன்குனியா போன்று கொரோனாவும் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்கும்! – மருத்துவ நிபுணர் பாலா பி.ராஜேஸ்
டெங்கு, சிக்குன்குனியாவைப் போன்று கொவிட் -19 கொரோனாவைரஸ் தொற்றுநோயும் சமூகத்திற்குள் தொடர்ந்து நீடிக்கும். ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் அது தலைகாட்டும் என்று கூறியிருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையின் ஒரு சிரேஷ்ட உறுப்பினரான மருத்துவ நிபுணர் பாலா பி.ராஜேஸ், தடுப்பு மருந்து தயாரானதும் மூத்த பிரஜைகள் உட்பட சமுதாயத்தில இந்த நோயினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கே அதை பயன்படுத்துவதில் முன்னுரிமை காட்டவேண்டும் என்று சிபாரிசு செய்யப்படக்கூடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். சென்னை மருத்துவ கல்லூரியின் பழைய மாணவரான அவர், கொவிட் – 19 நோயினால் ...
Read More »ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள்!
தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன யாழில் தெரிவித்தார் வடக்கிலுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு ஆகிய எங்களிடம் உள்ளது எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. எனவே தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாண மக்களுக்கு நான் இரண்டு கோரிக்கைகளை ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			