இலங்கை நாளாந்தம் 100 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா கொத்தணி உருவாகக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத் தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். பொது மக்கள் சுகாதார வழிகாட்டிகளை கடைப்பிடிக்காவிட்டால் நாட் டில் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்புள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். மக்கள் ஒன்று கூடும் இடம், சமூக இடைவெளியைப் பின்பற்றாத சந்தர்ப் பத்தில் கொரோனா தொற்று ஏற்படலாம்.நாளாந்தம் 100 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் ...
Read More »குமரன்
மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதை வேளையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தநிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற அழகி போட்டி ஒன்றில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டு அழகி ஹான் லே, மியான்மர் ராணுவத்துக்கு எதிராக பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி ...
Read More »சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் நான் – விஜய் சேதுபதி
கோடம்பாக்கத்தில் ஓட்டு போட வந்த நடிகர் விஜய் சேதுபதி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் நான் என்று கூறியிருக்கிறார். சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் வாக்குகளை செலுத்தினார்கள். நடிகர் விஜய் சேதுபதி 2 மணியளவில் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். அதன்பின் பேசிய விஜய் சேதுபதி, சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, மனிதர்கள் தான் ...
Read More »குளங்களைத் தொலைக்கும் தலைமுறை
தண்ணீரைக் காக்கத் தவறுகின்ற சமூகம் வாழ்வதற்குத் தகுதியற்றது. எங்கள் கண்முன் எம் நீராதாரங்கள் களவாடப்படுகின்ற போது, வாழாவிருக்கின்ற சமூகம் அடிப்படை அறங்களை முற்றுமுழுதாகத் தொலைத்துவிட்டது என்றே கொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை (26) வவுனியாக்குளத்தைக் காப்பாற்றுமாறு கோரி சத்தியாக்கிரகமொன்றை வவுனியாக் குளத்துக்கான மக்கள் செயலணி நடத்தியது. இது எம் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் பேரவலமொன்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. போருக்குப் பின்னரான இலங்கையில், அபிவிருத்தியின் பெயரால் அரங்கேறும் அவலங்களை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இனியாவது நாம் பேசியாக வேண்டும். அடுத்த தலைமுறைக்கு, எதை விட்டுச் ...
Read More »தேவிபுரத்தில் துப்பாக்கி , ரவைகள் மீட்பு
புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து, துப்பாக்கியொன்றும் ரவைகளும் இன்று (06) மீட்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர் காணியைத் துப்புரவு செய்யும் போது, நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், வெடிபொருட்கள் இனம் காணப்பட்டன. இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைஅடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த காவல் துறை , உரப்பை ஒன்றில் பொதிசெய்யப்பட்ட நிலையில், டி56 ரக துப்பாக்கி ஒன்றும் அதன் ரவைகள் 420உம் மீட்கப்பட்டுள்ளன.
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரிகள் விளக்கமறிலில்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரிகளாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் இணங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தற்போது கொழும்பில் இடம்பெற்ற வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நெளபர் மௌலவி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் அடிப்படைவாதத்தை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹசீம் என்பவர் 2016 ஆம் ஆண்டே அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவருக்கு நௌபர் மௌலவி என்பவரே ...
Read More »மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு ஏற்ப முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது கடமைகளை நிறைவேற்ற தவறியபின்னரும் வெட்கமின்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார் என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நாட்டின் மீது தாக்குதல் இடம்பெற்றவேளை மைத்திரிபாலசிறிசேன வெளிநாட்டிலிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள மல்கம் ரஞ்சித் மைத்திரிபால சிறிசேனவின் தலைமத்துவ திறன்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். தாக்குதல் இடம்பெறலாம் என்பது தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க ...
Read More »தமிழ் அகதிகளை விடுவிக்க ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை
ஆஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் Karen Andrews பொறுப்பேற்றுள்ள நிலையில், இது அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சுகாதார பிரச்னைகள் தொடர்பாக புதிய அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கான நல்ல வாய்ப்பு என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இது புதிய உள்துறை அமைச்சர் Karen Andrews தனது புதிய பொறுப்பைக் கருணையுடன் தொடங்குவதற்கான நேரமாகும். அத்துடன், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பில் உள்ள தமிழ் அகதி குடும்பத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கையை புதிய அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. “எந்த நாட்டு ...
Read More »குறும்பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த விஷால்
நடிகர் விஷாலின் 31-வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. எனிமி படத்துக்கு பிறகு விஷாலின் 31-வது படத்தை, புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் ...
Read More »அமைதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை நெருங்கிய வகையில் தொடர்புபட்டு ஆற்றிய அளப்பரிய பணிகளை தனிப்பட்ட முறையில் நான் நன்கறிவேன் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப் ஆண்டகையின் மறைவையடுத்து, அதிவணக்கத்துக்குரிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்களுக்கு ...
Read More »
Eelamurasu Australia Online News Portal