குமரன்

மகாபாரத படத்தில் அர்ஜூன், சினேகா!

மகாபாரதத்தில் இடம் பெறும் குருஷேத்திர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படத்தில் அர்ஜூன் மற்றும் சினேகா ஆகியோர் நடித்துள்ளார்கள். மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கு இடையேயான குருஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும். இந்த காவியத்தின் குருஷேத்திர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் ‘குருஷேத்திரம்’. விரு‌ஷபாத்ரி புரொடக்‌‌ஷன் தயாரிப்பில், உலகளவில் 3டி முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘துப்பாக்கி’, ‘தெறி’ மற்றும் ‘கபாலி’ போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்த வி கிரியே‌ஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தமிழில் ...

Read More »

நீதியை பலவீனப்படுத்தும் அரசியல் அதிகாரம்!

வடஇந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இரு வருடங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு இந்தியாவின் வரலாற்றில் அடையாளச்சின்னமாக இடம்பெறப்போகிறது. .ஏனென்றால், அது சமூக அமைப்பில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் நீதித்துறையின் குறைபாடுகளின்  மையத்தே உள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்தியாவின் பெரும்பாலான பாகங்களில் இளம் பெண்கள் மகங்கொடுக்கவேண்டியிருக்கின்ற கொடுமைகளை அது வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது ; பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பிரஜை ஒருவர் அதிகாரபலமுடையவருக்கு எதிராக வழக்கொன்றை பதிவு செய்வதற்கு நடத்தவேண்டிய நீண்ட போராட்டத்தை அது ...

Read More »

தாமரை மொட்டின் ஆட்சி மலரும் என்கிறார் பஸில்!

“தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஆட்சி விரைவில் மலரும்.”  என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று மேலும் தெரிவித்துள்ளதாவது:- “நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னர் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தரமான – தகுதியான வேட்பாளர்களே போட்டியிடுவார்கள். இரண்டு தேர்தல்களிலும் எமது கட்சியே வெற்றி பெறும். அது இப்போதே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இந்த இரண்டு தேர்தல்களிலும் சிங்கள ...

Read More »

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் வேட்பாளர் யார் ?

பங்காளி கட்சிகளுடன் ஆகஸ்ட் 5 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டவுடன் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி தொடர்பில் தெரிவிக்கையிலேயே அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி  ஏனைய பல்வேறு கட்சிகளும் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணியில் கைசாத்திடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அனைத்து மத குருமார்களினதும் ஆசீர்வாதத்துடன் இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளது. இந்த கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம்!

அவுஸ்திரேலியாவில் விமானம் ஒன்று தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே விமான நிலைய கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெர்த் விமான நிலையத்தில் உள்ள லைட் கோபுரத்தில் விமானம் மோதியதை அடுத்து அவசர சேவை சம்பவ இடத்திற்கு விரைந்தது. விமானத்தில் 62 பயணிகளும் நான்கு ஊழியர்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணியளவில் விமானம் தரையிறங்கியது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் எற்படவில்லை,மேலும் விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் வேறு எந்த ...

Read More »

கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமியத்திற்கு விரோதமானது!

மற்ற மதத்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தேசிய சிறுபான்மையினர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்படும். தங்கள் விழாக்களை, பண்டிகைகளை எவ்வித இடையூறும் இன்றி கொண்டாடி மகிழும் வகையில் அவர்களுக்கான உரிமை பாதுகாக்கப்படும். ஒரு இந்துப் பெண்ணைத் திருமணம் ...

Read More »

18 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு!

உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பந்துப்பட்ட கூட்டணியின் கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக ஜே.வி.பி.யினர் தெரிவித்துள்ளனர்.

Read More »

21,22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலப் பிரேரணை கையளிப்பு!

21, 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் தொடர்பான பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் விஜயதாச ராஜபக்ஷ இன்று சமர்ப்பித்துள்ளார். பொதுத் தேர்தலில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு ஒரு அரசியல் கட்சியோ அல்லது குழுவோ பெற்றுக்கொள்ள கூடிய குறைந்தபட்ச வாக்கு வீதத்தை தற்போதைய 5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிப்பதற்கு வகை செய்யக் கூடியதாக அரசியலமைப்புக்கான 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் தொடர்பான பிரேரணை அமைந்துள்ளது. அத்துடன் உயர்பதவி நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வகைசெய்யக் கூடியதாக 22 ஆவது திருத்த ...

Read More »

இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வெளியிட பிரியங்கா சோப்ராவுக்கு இவ்வளவு கோடியா?

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பரம் வெளியிட கோடி கணக்கில் பணம் வாங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக்ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். இந்தி, ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் புகை பிடிக்கும் படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் இப்படி புகைப்பிடிக்கலாமா? என்று ரசிகர்கள் விளாசினார்கள். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா இடம்பிடித்துள்ள தகவல் தற்போது ...

Read More »

‘300 கிராமங்கள்’ பற்றிய விக்கியின் கருத்தின் பாரதூரம்!

வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரன் அண்மையில், “300 தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டு, அவை முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன” என்ற தொனியில் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து, முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே மட்டுமல்லாமல் சாதாரண பொதுமக்களிடையேயும் பாரிய விமர்சனத்தைத் தோற்றுவித்து இருக்கின்றது. பொறுப்புள்ள பதவிவகித்த ஒருவரான விக்கி, உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை, எந்த அடிப்படையில் முன்வைத்தார் என்பதுதான் இங்கு முன்வைக்கப்படுகின்ற முதலாவது கேள்வியாகும். இந்த வினாவுக்கு, அவர் இந்த நிமிடம் வரை பதிலளிக்கவும் இல்லை; தான் தவறாகக் கூறிவிட்டதாக, மறுத்துரைக்கவும் ...

Read More »