மகாபாரதத்தில் இடம் பெறும் குருஷேத்திர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படத்தில் அர்ஜூன் மற்றும் சினேகா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கு இடையேயான குருஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும். இந்த காவியத்தின் குருஷேத்திர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் ‘குருஷேத்திரம்’. விருஷபாத்ரி புரொடக்ஷன் தயாரிப்பில், உலகளவில் 3டி முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘துப்பாக்கி’, ‘தெறி’ மற்றும் ‘கபாலி’ போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்த வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தமிழில் வெளியிடுகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பீஷ்மராக அம்பரிஷ், துரியோதனாக தர்ஷன், கர்ணனாக அர்ஜூன், கிருஷ்ணராக வி.ரவிச்சந்தர், அர்ஜூனனாக சோனு சூட், சகுனியாக ரவி சங்கர், சையியாவாக ராக்லைன் வெங்கடேஷ், திரவுபதியாக சினேகா என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து உள்ளார்கள்.

பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார். வருகிற ஆகஸ்டு மாதம் இந்த படத்தை திரையிட திட்டமிட்டு உள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal