கனடாவின் தலைநகரான ஒட்டாவில் தமிழீழ தாயகத்தை நேசித்த ஒரு தேசப்பற்றாளரான ஒட்டாவா சுரேஷ் என்று அழைக்கப்படும் ந்திரன் தம்பிராஜா சாவடைந்துள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வீதியில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றுக்கு உதவுவதற்காக தனது வாகனத்திருந்து மனைவியுடன் இறங்கி உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சுரேஷ் யாழ்ப்பாணம் புத்தூரைப் பிற்பிடமாகக் கொண்டவர். கனடாவில் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்தவர். ஒட்டாவா மாநிலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் போராட்ட ...
Read More »குமரன்
இணைய வழியாக ஒன்றுகூடி இதய அஞ்சலியை செலுத்துவோம்!
அன்பான அவுஸ்திரேலியா வாழ் தமிழ் உறவுகளே! நீதிக்கான குரலாக அனைவரும் ஒன்றுபட்டு எமது உறவுகளை நெஞ்சங்களில் நினைவேந்தி நினைவு கூருவோம். தற்போதைய கொறானா வைரஸ் என்ற தொற்றுநோயினால் ஏற்பட்ட இடர்கால நிலையால், அனைவரும் ஒன்றுபட்டு நினைவுகூர முடியாத காலச்சூழல் உள்ள நிலையில், அனைவரும் தனித்திருந்து ஒவ்வொரு வீட்டிலும் எம் உறவுகளை நினைவில் இருத்தி சுடரேற்றி நினைவுகூருவோம். இணைய வழியாக ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். காலம்: 18 – 05 – 2020 Monday 7pm – 8pm (AEST), ...
Read More »என் குடும்பத்தினர் அனைவரும் சம்மதித்தால்தான், காதலரை மணப்பேன்!
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் டாப்சி, அவர்கள் சம்மதித்தால் தான் காதலரை மணப்பேன் என தெரிவித்துள்ளார். சமீபகால கதாநாயகிகளில் கவர்ச்சியையும், நடிப்பு திறனையும் சேர்த்து வழங்குபவர், டாப்சி. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்களின் ரசனை அறிந்து படங்களில் நடித்து வருவதாக டாப்சி கூறுகிறார். இவருக்கும், பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இரண்டு பேரின் காதலுக்கும் பெற்றோர்கள் சம்மதம் சொல்லி விட்டதாகவும் ...
Read More »முள்ளிவாய்கால் நினைவேந்தலை தடுக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியை முடக்கிய அரசாங்கம்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேற்கொண்ட முன்னணியின் கஜேந்திரகுமார், கஜேந்திரன், மணிவண்ணன், சுகாஸ் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்த உத்தரவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல் கட்டளையிட்டுள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வார நினைவேந்தலில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் ...
Read More »மெக்ஸிக்கோவில் ஊடகவியலாளர் கொலை
மெக்ஸிக்கோவின் வடக்கு சோனோரா மாநிலத்தில் ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் ஜோர்ஜ் ஆர்மெண்டா என்ற ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளார். சோனோரா மாநிலத்தில் சியுடாட் ஒப்ரிகானிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சோனோராவின் சட்டமா அதிபர் அலுவலகம் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு நகராட்சி காவல்துறை அதிகாரியும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் மேலும் ஒரு அதிகாரி காயமடைந்தும் உள்ளார். இதேவேளை சோனோரா மாநில ஆளுநர் கிளாடியா பாவ்லோவிச் அரேலானோ, கண்டிக்கத்தக்க தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண உடனடியாக விசாரணைகளை நடத்துமாறும் ...
Read More »உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்த அருண் விஜய்
தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் அருண் விஜய் உடற்பயிற்சி செய்யும் போது தவறி கீழே விழுந்து இருக்கிறார். மாஃபியா படத்திற்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் ‘அக்னி சிறகுகள்’, ‘சினம்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் அந்தரத்தில் கம்பி ஒன்றில் தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுகிறார். பழைய வீடியோவான அதனை பகிர்ந்து, ”எப்பொழுதும் இதனை முயற்சிக்காதீர்கள். உடற்பயிற்சி ...
Read More »நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார்
இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி போலீஸ் நிலையத்துக்கு நேற்று கோபி பா.ஜ.க. நிர்வாகிகள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் சேதுபதி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அது மத ரீதியாகவும் தேசிய இறையாண்மைக்கு எதிராகவும், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. விஜய் சேதுபதியின் இந்த பேச்சால் ...
Read More »சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா
சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம் தனது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சாட்டி வந்தார். ஆனால் ஹூவாய் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது. எனினும் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடந்த ஆண்டு ஹூவாய் நிறுவன பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடைபோட்டது. மேலும் அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது. ஹூவாய் நிறுவன விவகாரத்தில் ...
Read More »ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள 150 நியூசிலாந்தினரை விடுவியுங்கள்?
ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்கள் கொரோனா தொற்று பரவக்கூடிய ஆபத்துமிகுந்த இடமாக மாறக்கூடும் என்பதால், தடுப்பில் உள்ள 150 நியூசிலாந்தினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிட்னி தடுப்பு முகாமிலிருந்து வெளியாகிய படங்கள், அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிப்பதற்கான முடியாத சூழல் நிலவுவதை உணர்த்தியிருக்கின்றன. அம்முகாமில் உள்ள ஒரு நபர், தான் வைக்கப்பட்டுள்ள 120 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சூழல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அனுமதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தடுப்பில் உள்ளவர்கள் உயிர்களுக்கு ஆபத்து உள்ளதாக மருத்துவர்களும் மனித ...
Read More »முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க தயாராகும் சிறிலங்கா அரசாங்கம்!
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக காவல் துறை காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நினைவு தூபிக்கு அண்மையாகவுள்ள வீடு ஒன்றில் 10 க்கும் மேற்பட்ட அரச புலனாய்வவாளர்களும் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு செல்லும் ஒழுங்கையில் ஆரம்பத்தில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான பாதையில் காவல் துறை வீதி சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாகவுள்ள ஆட்களற்ற வீடு ஒன்றில் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal