ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் நபர்களை கடல் கடந்த தடுப்பில் சிறைவைப்பது எனும் கொள்கையை முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் நடைமுறைப்படுத்தி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த கொள்கையின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக்கோரி இணைய வழிப் போராட்டம் நடந்துள்ளது. கொரோனா காரணமாக இணைய வழியாக நடந்த இப்போராட்டத்தில் 230 பேர் பங்கேற்றதாக இதனை ஒருங்கிணைத்த Refugee Action Collective அமைப்பு தெரிவித்துள்ளது. சொந்த நாட்டில் ஏற்பட்ட சித்ரவதை சூழலிலிருந்து தப்பிக்க ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பின்னரும் சித்ரவதைக்கு உள்ளாகிறோம் என தற்போது ...
Read More »குமரன்
இணைய தொடராக உருவாகும் வீரப்பன் வாழ்க்கை கதை
வீரப்பனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இணைய தொடர் ஒன்றை உருவாக்க உள்ளதாக இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார். சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து, ஏற்கனவே ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் வனயுத்தம் என்ற பெயரிலும், ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரிலும் திரைப்படங்களாக வெளிவந்தன. வனயுத்தம் படத்தில் வீரப்பனாக கிஷோரும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனும் நடித்திருந்தனர். இந்த படம் தணிக்கை குழுவின் எதிர்ப்பில் சிக்கி பல காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே திரைக்கு வந்தது. இந்நிலையில் வீரப்பன் வாழ்க்கை கதையை மையமாக ...
Read More »அஸ்தமித்துப்போன ஆர்வம்
வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் தேர்தலில் அக்கறையற்று இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கருத்து வெளியிட்டு இருந்தார். இது போன்றதொரு பொதுத் தேர்தல், 21.07.1977ஆம் ஆண்டு நடைபெற்றபோது, மொத்தமாக நாடாளுமன்றத்தில் உள்ள 168 ஆசனங்களில், 140 ஆசனங்கள் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி வசமாகியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வெறும் எட்டு ஆசனங்களுடன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அ. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, 18 ஆசனங்களைக் கைப்பற்றி, எதிர்க்கட்சியாகியது. எதிர்க்கட்சித் தலைவராக அ. ...
Read More »இராணுவம் குறிவைத்திருக்கும் இடமாக முல்லைத்தீவு
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் நேற்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் க.வி. விக்னேஸ்வரன் தலைமையில் வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு யாழ்ப்பாண கிளிநொச்சி வேட்பாளர்களான சுரேஷ் பிறேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் , சிறீகாந்தா மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு கலந்து கொண்டு உரையாற்றிய சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்ததாவது, முல்லைத்தீவு மண் என்பது ஒரு போராட்ட களத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலிகொடுத்த இடம். இந்தப் போராட்டம் தேவையற்ற ஒரு காரணத்துக்காக நடைபெறவில்லை. தமிழ் மக்கள் கௌரவமாக ...
Read More »முன்னாள் போராளி மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை செய்யப்பட்டார். கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் அவரை குற்றம் நீக்கி, விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. கண்ணதாசன் சார்பில் எம். ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார். வழக்கு மே மாதம் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வவுனியா மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை நியாயப்படுத்த ...
Read More »பழுந்தடைந்த லிப்ட்டில் 4 நாட்கள் சிக்கி கொண்ட தாய்-மகள்
சீனாவில் பழுதான லிப்டில் சிக்கிய தாயாரும் மகளும் உயிர் பிழைக்க ஒருவருக்கொருவர் சிறுநீரைச் சேகரித்து குடித்து வந்த நிலையில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர். தாயாரும் மகளும் வசித்து வந்த நான்கு மாடி குடியிருப்புக்குள் அமைந்திருந்த லிப்டில் இருவரும் மாடிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென அது வேலை செய்வதை நிறுத்தியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் 82 வயதான தாயாரும் அவரது 64 வயதான மகளும் சிக்கியுள்ளனர். செய்வதறியாது திகைத்துப் போன இருவரும் உதவிக்கு அழைத்தும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.இதனையடுத்து உயிர் பிழைக்க ஒருவருக்கொருவர் ...
Read More »கவுதம் மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்?
தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடித்து 2006-ல் திரைக்கு வந்த படம் “வேட்டையாடு விளையாடு”. இந்த படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்து இருந்தார். மேலும் கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். கவுதம் மேனன் இயக்கியிருந்த இப்படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் அனுஷ்காவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க முடிவு செய்து ...
Read More »அமெரிக்க எம்முடன் பேரம் பேசியது!
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அதனைப் பகிஷ்கரிப்பது என்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்த போது யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், பகிஷ்கரிப்பு கோரிக்கையைக் கைவிடுமாறு தம்மைச் சந்தித்து கோரிக்கைவிடுத்ததாக அவ்வமைப்பின் முக்கியஸ்தரான சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்திருக்கின்றார். யாழ். திருநெல்வேலியிலுள்ள ;திண்ணை விடுதியில் தன்னையும், முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் செல்வராஜா கஜேந்திரனையும் சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஜனாதிபதித் தேர்தலைக் கைவிடுமாறு தம்மை வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு ...
Read More »தரிசா பஸ்டியனை விசாரணை செய்யலாம்
சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்; குறித்த விசாரணைகளுக்கு பத்திரிகையாளர் தரிசா பஸ்டியன் தடையை ஏற்படுத்தினால் அவரை விசாரணை செய்யலாம் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்கலாம் என நீதிமன்றம் சிஐடியினருக்கு தெரிவித்துள்ளது. தரிசா பஸ்டியனின் மடிக்கணிணியை சிஐடியினர் கைப்பற்றிய திகதி தொடர்பான குழப்பம் குறித்து தரிசா பஸ்டியனின் சட்டத்தரணிகள் விளக்கமளித்த பின்னர் கொழும்பு பிரதானநீதிவான் லங்கா ஜயரட்ண இதனை தெரிவித்துள்ளார். ஜீன் மாதம் தரிசா பஸ்டியனின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் குறிப்பிட்ட மடிக்கணிணியை ஜீன் நான்காம் திகதி சிஐடியினர் எடுத்துச்சென்றிருக்கலாம் என ...
Read More »ஒரு வழியாக நாடு திரும்பிய மகன்…. உற்சாகத்தில் விஜய்
கனடாவில் பிலிம் மேக்கிங் படித்துவந்த நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒருவழியாக நாடு திரும்பி உள்ளார். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் பிலிம் மேக்கிங் படித்து வந்தார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் லாக்டவுன் போடப்பட்டதால், தாயகம் திரும்ப முடியாமல் சஞ்சய் கனடாவிலேயே சிக்கி தவித்தார். மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் குடும்பமே மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய், ஒரு வழியாக நாடு திரும்பிவிட்டார். விமானம் மூலம் சென்னைக்கு வந்த சஞ்சய், நட்சத்திர ...
Read More »
Eelamurasu Australia Online News Portal