குமரன்

ஆஸ்திரேலியாவில் பட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து!

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் பெரிய கத்தி ஒன்றுடன் வந்த மர்ம நபர் ஒருவர் பெண் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் கிங் தெருவில் இன்று மர்ம நபர் ஒருவர், பொதுமக்களை குறிவைத்து கத்தியால் குத்த முயன்றுள்ளார். அந்த நபரின் கையில் கத்தியைப் பார்த்ததும் சாலையோரம் நடந்து சென்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், யார்க் மற்றும் கிங் தெருவின் முனையில் உள்ள ஓட்டல் அருகே, கத்தியுடன் வந்த அந்த மர்மநபர், அங்கே ...

Read More »

ஐ.நா சிறப்பு பிரதிநிதி சிறிலங்கா வருகை!

மத சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்கா  வருகின்றார். ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர்  அரச மற்றும் எதிர் தரப்பினர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

Read More »

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபை தேர்தலை நடத்தலாமா?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து  சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் வியாக்கியானம் கோரியுள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை முன்வைக்கப்பட்டிராத சந்தர்ப்பத்தில்  மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான  வாய்ப்புக்கள் உள்ளதா என வியாக்கியானம் தருமாறு கோரியே சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார். அதன்படி ஜனாதிபதியின் குறித்த விண்ணப்பம் மீது எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் விசாரணைகளை  முன்னெடுக்க உயர் நீதிமன்றம் தீர்மனைத்துள்ளது. அதன்படி உயர் நீதிமன்றின் தீர்ப்பானது, ...

Read More »

தமிழ் மக்­களின் உரிமைக்குர­லாக செயற்­பட்ட குமார் பொன்­னம்­பலம்!

அண்ணல் குமார் பொன்­னம்­பலம் என்னும் உரிமைக்­குரல் எம்­மி­ட­மி­ருந்து பறிக்­கப்­ப­டாமல் வாழ்ந்­தி­ருந்தால் இன்று ஆகஸ்ட் 12 இல் அவ­ருக்கு 81 வய­தாகும். அர­சியல் கார­ணங்­க­ளுக்­காகக் கைது செய்­யப்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் சார்பில் நீதி­மன்­றங்­களில் வாதா­டினார். எவ்­வி­டத்­திலும், தமிழ் மக்­க­ளுக்குச் சார்­பான கருத்­துக்­களைத் துணி­வாக வெளி­யிட்டு வந்தார். இதனால்,  இதன் உச்சக் கட்­ட­மாக இன­வா­தி­களால் குமார் சுட்டுக் கொல்­லப்­பட்டார். தமிழர் தம் அடிப்­படை அபி­லா­சை­களை இடித்து வலி­யு­றுத்­தி­யவர் அவர். திம்­புக்­கோட்­பா­டு­களையே  தமிழர் தம் அடிப்­படை அபி­லா­சை­க­ளாக  கொண்­டி­ருந்தார். எந்த  ஒரு  சிங்­கள தலை­மையும்  வடக்கு கிழக்கு எனும் ...

Read More »

பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர்! மில்லியனராக மாறினார்!

அவுஸ்திரேலியாவில் பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர், 21 வயதிலே மில்லியனராக மாறியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஹாரி சாண்டர்ஸ் என்கிற 21 வயது இளைஞர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி 1.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கு சொந்தமானவராக உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வாழ்க்கையில் பலர் வெற்றிபெற விழித்திருந்து இரவு முழுவதும் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. உங்களுக்கு மனஅழுத்தம் இருந்தால் நீங்கள் ஒரு தொழிலை நடத்த முடியாது அதிகாலை 3 மணி வரை உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்ப்பதை ...

Read More »

விலங்குகளுக்கு நீதி வேண்டும்- அனுஷ்கா சர்மா

நாடு முழுவதும் வன்கொடுமைக்குத் தள்ளப்படும் விலங்குகளுக்கு நீதி வேண்டும் என நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் மும்பையில் லக்கி என்ற நாய் ஒன்றை சில விஷமிகள் அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தால் நடிகை அனுஷ்கா சர்மா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான அனுஷ்கா சர்மாவை சமூக வலைதளங்களில் 60 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். இதைப் பயன்படுத்தி அவர் விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகளைத் தடுக்கும் விதமாக கடுமையான சட்டங்கள் ...

Read More »

ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்!

ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதால் மாஸ்கோ நகரத்தின் மத்திய பகுதி குலுங்கியது. ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் திகதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்தும், தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் கடந்த மாத மத்தியில் மாஸ்கோ நகர மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எதிர்க்கட்சியினர் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ...

Read More »

செஞ்சோலை நினைவுதூபி அமைப்பவர்களுக்கு விசாரணை!

சிறிலங்கா  விமானபடையினரின்  விமான தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவு தூபி ஒன்று வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.இந்த நினைவுத் தூபியில் கொல்லப்பட்ட மாணவிகளின் படங்களை பதிப்பதற்கு தடை விதித்துள்ள  புதுக்குடியிருப்பு காவல் துறை  குறித்த பணிகளை முன்னெடுத்த சிலரை இன்று (11)காலை புதுக்குடியிருப்பு காவல் துறை  நிலையம் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையின் விமானங்கள் நடத்திய குண்டு தாக்குதலில் 54  பாடசாலை மாணவிகள் உயிரிழந்தனர். அவர்களுடைய 13 ...

Read More »

“கோத்தாவை தமிழர் ஏற்க மாட்­டார்கள்” : சிறிநேசன்

கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ தமிழ் மக்­களை  பாதிக்­கக்­கூ­டிய மிகவும் கசப்­பான உணர்­வு­களை எமது மனங்­களில் விதைத்­துள்ளார். தமிழ் மக்கள் அவரை ஏற்­க­மாட்­டார்கள் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மவாட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஞான­முத்து சிறி­நேசன் தெரி­வித்தார். இவ்­வி­டயம் குறித்து நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை (11) ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­விக்­கும்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.  இதன்­போது அவர் மேலும் தெரி­விக்­கையில். தென்­இ­லங்­கையில் இருந்து வரும் தலை­வர்­களைப் பொறுத்­த­வரை அவர்கள் அடிப்­ப­டை­வாத சிந்­த­னையில் மூழ்­கி­யுள்­ளனர். பேரி­ன­வாத பிடிக்குள் இறு­கி­யுள்­ளனர். பேரி­ன­வா­தத்தை மட்டும் கையில் வைத்து ஆட்சி செய்­ப­வர்கள். ...

Read More »

நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன் – மஹிந்த

இலங்கையில் எங்களால் மட்டுமே பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் அளிக்க முடியும் என்பதை இந்தியா புரிந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் மிகச் சிறந்த நண்பனாக தாமே இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக, இந்திய ஊடகவியலாளர் பகவான் சிங்குக்கு  அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த செவ்வியில் மஹிந்த ராஜபக் ஷ மேலும் கூறியதாவது, கேள்வி: உங்கள் வேட்பாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பொது ஜன ...

Read More »