குமரன்

நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபச்சவின் அரசாங்கத்தில் இருந்தவர்களை கைது செய்திருந்தால் தற்போதைய அரசாங்கம் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்களை கைது செய்திருக்கமாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க கைது செய்யாது அங்கும் இங்குமாக டீல் போட்டதால் தான் இன்று கைதுகள் இடம்பெறுகின்றது. இன்றைய அரசாங்கத்தில் நாடகங்கள் அரங்கேறுகின்றன தென்னிலங்கை மக்கள் ...

Read More »

அவுஸ்திரேலியா காட்டுத் தீ : பசுபிக் கடல் முழுவதும் புகை மண்டலம்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இருந்து வரும் புகை பசுபிக் முழுவதம் பரவியுள்ள நிலையில் தென் அமெரிக்காவை நோக்கி நகர்வதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச வானிலை அறிவிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.   அத்துடன் இந்த புகை மண்டலம் அந்தார்டிக்காவை அடைந்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவுஸ்திரேலிய தீ விபத்து தொடர்பான நாசாவின் செய்மதி தகவல்களை பயன்படுத்தி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய முப்பரிமாண புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் அவுஸ்திரேலியாவின் 10.3 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. அத்துடன் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரணத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ஒதுக்கீடு செய்து அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.   இந்த காட்டுத்தீயால் அங்கு கடும் வெயில் வாட்டி ...

Read More »

கோத்தாபயவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 2020 நாடாளுமன்ற தேர்தல் !

பி.கே.பாலசந்திரன் – முன்னைய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் பலவீனப்பட்டுப் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை மீளவும் பலப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு வசதியாக 2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார்.   மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மீளவும் கொண்டு வருவதற்கு 19 ஆவது திருத்தத்தை முற்றாகக் கைவிடுவதில் அல்லது அதில் பெருமளவுக்கு வெட்டிக் குறைப்பு ...

Read More »

தொல்பொருள் ஆய்வாளராக களமிறங்கும் ரெஜினா!

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரெஜினா அடுத்ததாக தொல் பொருள் ஆய்வாளராக நடிக்க இருக்கிறார். திருடன் போலீஸ், உள்குத்து படம் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் ராஜு. இவர் அடுத்ததாக மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படத்தை இயக்க தயாராகி இருக்கிறார். இந்த புதிய படத்தில் ரெஜினா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை ஆப்பிள் டிரி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது ...

Read More »

விமானத்தில் பயணித்த அனைவரும் பலி!

ஈரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 180 பேருடன் புறப்பட்ட உக்ரேன் நாட்டுக்கு சொந்தமான போயிங் 737 மெக்ஸ் ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். ஈரானின் தெஹ்ரான் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உக்ரேன் தலைநகர் கீவ் நோக்கி புறப்பட்ட விமானமே சிறிது நேரத்தில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்போது விமானத்தில் 170 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்துள்ளதாக தெஹ்ரான் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணைகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த ...

Read More »

விஜய்சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் செய்த ரசிகர்கள்!

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உடல் உறுப்புதானம் செய்து அசத்தி இருக்கிறார்கள். தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய பிறந்தநாள் ஜனவரி 16. விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் 202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்புதான செய்த ...

Read More »

சர்வதேச மொழித் திறமை மேம்பாட்டுக்காக புதிய பல்கலைக்கழகம்!

மாணவர்களிடையே சர்வதேச மொழித்திறமையை மேம்படுத்துவதற்காக விரைவில் புதிய பல்கலைக்கழகமொன்று ஸ்தாபிக்கப்படுமென உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பு 07 இல் அமைந்துள்ள சிங்கள அகராதி அலுவலக விஜயத்தின் போது அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறினார். தொழில் சந்தையை கருத்திற் கொண்டு இளைஞர்களிடையே சர்வதேச மொழி வல்லுனர்களை உருவாக்குவதே இந்த பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் சிங்கள அகராதி அலுவலகத்தை பல்கலைக்கழக கல்லூரியாக மாற்றி அதனை அரசாங்க பல்கலைக்கழகமொன்றுடன் இணைந்ததாக செயற்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read More »

‘கஜபா’க்களின் காலம்!

இந்­தியா புதி­தாக பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி (கூட்­டுப்­ப­டை­களின் தள­பதி) என்ற பத­வியை கடந்த ஜன­வரி 1ஆம் திகதி உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. இந்­திய இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், முத­லா­வது பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இந்­தியா சுதந்­திரம் பெற்ற பின்னர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளுடன் பாரிய போர்­களை நடத்­தி­யி­ருந்த போதிலும், கிட்­டத்­தட்ட 72 ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரே, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என்ற பத­வியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. சர்­வ­தேச அளவில், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னிகள் மட்­டத்தில் நடந்து வந்த சந்­திப்­புகள், கூட்­டங்­களில், பெரும்­பாலும் இந்­தியா ...

Read More »

பழிவாங்குவோம்- சொலைமானியின் உடலின் மீது விழுந்து கதறியழுது புதிய தளபதி சபதம்!

அமெரிக்க தாக்குதலில்  ஈரானிய தளபதி கசேம் சொலைமானி கொல்லப்பட்ட பின்னர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் கானி சொலைமானியின் கொலைக்கு பழிவாங்கப்போவதாக சூளுரைத்துள்ளார். கொல்லப்பட்ட ஈரானிய இராணுவ அதிகாரியின்  இறுதிநிகழ்வுகள் இன்று இடம்பெற்றவேளை அவரது பிரேதப்பெட்டியின் மேல் விழுந்து கதறியழுத கானி சொலைமானி வீரமரணமடையச்செய்யப்பட்டமைக்கான பழிவாங்கல் இடம்பெறும் என்பது இறைவனிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி என தெரிவித்துள்ளார். சொலைமானியின் பாதையைஅதே வலிமையுடன்தொடர்வதற்கு நாங்கள் உறுதி தெரிவிக்கின்றோம்,  என குறிப்பிட்டுள்ள கானி  அமெரிக்காவை பிராந்தியத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் பல நடவடிக்கைகள் மூலம் ...

Read More »