குமரன்

தமிழிலேயே கேள்வி கேட்கலாம்; பதில் சொல்லலாம்!

சர்வதேச அளவில் பயனர்களே கேள்வி கேட்டு, பயனர்களே பதில்கள் கூறும் இணையதளம் ‘கோரா’ (Quora). முதன்முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இது, பயனாளர்களின் வரவேற்பு காரணமாக இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் உட்பட 16 மொழிகளில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது பதினேழாவதாக தமிழில் ‘கோரா’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ”அறிவைப் பகிர்வதற்கும் உலகை நன்கு அறிவதற்குமான ஓர் உயரிய இடம்” என்று கோரா தமிழ் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் நீங்கள் என்ன வகையான கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம், பதில் அளிக்கலாம். ஒரே கேள்விக்கு எத்தனை பேர் வேண்டுமானாலும் பதில் கூறலாம். இந்நிலையில் ...

Read More »

ஜெயலலிதா மரணத்துக்கும், கொடநாடு சம்பவங்களுக்கும் தொடர்பு!

ஜெயலலிதாவின் மரணத்துக்கும் கொடநாடு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி  தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- ஏழை-எளிய ஒடுக்கப்பட்ட மக்களும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்காகத்தான் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் போராடி வெற்றி கண்டனர். ஆனால் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10 சதவீதம் ...

Read More »

48 பந்தில் சதம் விளாசிய சிட்னி தண்டர் வீரர்!

பிக் பாஷ் டி20 லீக் தொடரில சிட்னி தண்டர் அணியைச் சேர்ந்த பெர்குசன் 48 பந்தில் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பெர்த் ஸ்கார்சர்ஸ் – சிட்னி தண்டர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பெர்த் ஸ்கார்சர்ஸ் தொடக்க பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் அதிரடியால் (55 பந்தில் 96 ரன்கள்) ...

Read More »

சம அந்தஸ்து இதுவரை கிடைக்கவில்லை!

200 வருடங்கள் கடந்தும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு கௌரவமான இலங்கை பிரஜைகள் எனும் உரிமையை இதுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்தும் அவர்களது சந்ததியினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த வெளிநாட்டவர்கள் என்றே நோக்கப்படுகின்றனர்.   தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால் வாக்களிப்பதற்கான உரிமை கிடைக்கின்றது. எனினும் பெரும்பான்மை மக்களோடு ஒப்பிடும்போது அவர்களுடனான சம அந்தஸ்து அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இன்றும் இவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே கருதப்படுகின்றனர். இவர்கள் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது இலங்கையில் ஒரு அங்குல நிலத்துக்கு அவர்களால் உரிமை கூற முடியாத காரணத்தினாலேயே தோட்டத்தொழிலாளர்களின் ...

Read More »

முன்னாள் முதலமைச்சருடன் ஃபேர்கஸ் ஒளல்டின் சந்திப்பு!

பிரித்தானியாவின் தென்னாசிய திணைக்களத் தலைவரும் இந்திய ஒருங்கமைப்பாளரும் ஃபேர்கஸ் ஒளல்ட் மற்றும் இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் முதல்செயலாளர் போல் ஃகிறீன் ஆகியோர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை நேற்று (24) காலை நீதியரசரின் வாசஸ்தலத்தில் சந்தித்துள்ளனர். இதன் போது சில முக்கியமான அடிப்படை விடயங்களைப் பெற்றுத் தருவதாக மக்களிடம் கூறி வாக்குப் பெற்று விட்டு அவை சம்பந்தமாக அரசாங்கத்துடன் கருத்துப் பரிமாற்றம் செய்யாது மிகவும் குறைந்த அளவு சில உரிமைகளைப் பெற இன்றைய தமிழ்த் தலைவர்கள் முயன்றுள்ளதால் அதை மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய ...

Read More »

சம்பந்தனை சந்தித்த அவுஸ்திரேலிய, ஜப்பான் தூதுவர்கள்!

சிறிலங்காவிற்கான ஜப்பான் தூதுவர் மற்றும் தனது  சேவை காலத்தை நிறைவு செய்யவுள்ள அவுஸ்திரேலிய  தூதுவர்  ஆகியோர் நேற்று(24) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர் சிறிலங்காவிற்கான  ஜப்பான் தூதுவர் அகிரா சுகியமா மற்றும் அவுஸ்திரேலிய தூதுவராக கடமையாற்றி தனது  சேவை காலத்தை நிறைவு செய்யவுள்ள பிரைஸ் ஹட்ச்ஸ்ன்  ஆகிய இருவருமே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்  

Read More »

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் தாமதிப்பது முறையல்ல!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில், விடுதலையை ஆளுநர் தாமதிப்பது முறையல்ல என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாகத் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 138 நாட்கள் ஆகியும், அவர்களின் விடுதலை இன்னும் சாத்தியமாகவில்லை. 7 தமிழர்கள் விடுதலை விவகாரம் குறித்து முடிவெடுப்பதில் எந்தக் காரணமும் இல்லாமல் ஆளுநர் ...

Read More »

திட்டமிடப்பட்ட நில அபகரிப்பு!

திருகோணமலை,  கோணேசபுரி வனப் பகுதியை, வனப் பாதுகாப்புத் திணைக்களம், திட்டமிட்டு அபகரிப்பதாக, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உப்புவெளிப் பிரதேச சபை உறுப்பினர் ச.விவுசன் குற்றஞ்சாட்டினார். திருகோணமலை,  சாம்பல் தீவு 06ஆம் வட்டாரப் பகுதி, ஆத்திமோட்டை, கோணேசபுரி, சாம்பல்தீவு குடியிருப்புப் பிரதேசங்களின் நடுவில் காணப்படுகின்றது. இதனுள் இரு கிராமங்களை இணைக்கும் வீதிகள்,  குடியிருப்புக் காணிகள், வயல் நிலங்கள், தோட்டக் காணிகள் காணப்படுவதாகவும் இவற்றையே, வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் அடையாளக்கல் இட்டு, முற்றுகையிட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்களின் நிலங்களும், பொது இடங்களும் பரவலாக ...

Read More »

மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் ரணில் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமண நிகழ்வில் விசேட அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டுள்ளார்.   தனது மகனின் திருமணத்திற்கு வருகைத் தருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையிலேயே பிரதமர் இன்று திருமண நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். ரோஹித ராஜபக்ஷ அவரது நீண்ட கால காதலியான டட்யான லீ ஆகியோர் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப கிராமமான வீரக்கெட்டியவில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் திடீரென ஏற்பட்ட அசாதாரண நிலை!

அவுஸ்திரேலியாவில் பாரிய காட்டுத் தீ பற்றியுள்ளது. இதனால் 720 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவும் அசாதாரண நிலை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மேனியா வனப்பகுதியில் உள்ள புதர் காடுகளில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் வேகமாக நெருப்பு பரவியதால் சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த காட்டுத் தீயை அணைப்பதற்கு நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தீயின் வேகம் அதிகமாக இருப்பதால் எதிர்வரும் நாட்களில் 720 கிலோ மீட்டர் தூரம் தீ பரவலாம் ...

Read More »