குமரன்

நீச்சல் குளத்தில் விழுந்து இரட்டை குழந்தைகள் பலி!

அவுஸ்ரேலியா நாட்டில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இரட்டை குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகரில் 23 மாதம் மட்டுமே ஆன இரட்டை குழந்தைகளுடன் பெற்றோர் வசித்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் உள்ள நீச்சல் குளத்திற்கு அருகில் குழந்தைகள் இருவரும் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். குழந்தைகளின் தாயார் வீட்டிற்குள் இருந்ததாக கூறப்படுகிறது. சில நிமிடங்களுக்கு பிறகு குழந்தைகளின் சத்தம் எதுவும் கேட்காததால் வியப்படைந்த தாயார் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, நீச்சல் குளத்தில் இரண்டு குழந்தைகளும் ...

Read More »

ஸ்மார்ட்போன் ஸ்டெடிகேம்

கேமிராவை கையில் பிடித்துக் கொண்டு படம் பிடிப்பதற்கு ஸ்டெடிகேம் என்கிற கருவி பயன்படும். அதையே ஸ்மார்ட்போனுக்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பட்டன்களிலிருந்தே கேமிராவை இயக்கலாம்.

Read More »

அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க தூதரகம் விருது

காசநோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வரும் இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க தூதரகம் விருது வழங்கியது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் காசநோய் பிரசார தூதராக செயல்பட்டு வருகிறார். அவரது மகத்தான சேவையை கவுரவிக்கும் பொருட்டு, அவருக்கு விருது வழங்க இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் முடிவு செய்தது. அதன்படி, மும்பையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க தூதர் ரிச்சர்டு ஆர்.வெர்மா, 74 வயது நடிகர் அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க அரசின் விருதினை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் திரையுலக பிரமுகர்களும், இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ...

Read More »

சிட்னி சர்வதேச டென்னிஸ்: வோஸ்னியாக்கி வெற்றி

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி மோனிகா புய்க்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா புய்க்கை (புயர்டோரிகா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ...

Read More »

ஊழல் புகார் எதிரொலி: அவுஸ்ரேலிய மந்திரி பதவி விலகினார்

அரசுப் பணத்தை சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அவுஸ்ரேலிய சுகாதாரத்துறை மந்திரி சூசன் லேய் தற்காலிகமாக பதவி விலகியுள்ளார். அவுஸ்ரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களின் ஆதரவுடன் முன்னாள் பிரதமர் டோனி அபாட்-டை பதவி நீக்கம் செய்த மால்கோம் டர்ன்புல், கடந்த 2015-ம் ஆண்டு அந்நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றார். மால்கோம் டர்ன்புல் தலைமையிலான ஆட்சியில் சுகாதாரம், முதியோர் நல்வாழ்வு மற்றும் விளையாட்டு துறை மந்திரியாக பதவி வகிக்கும் சூசன் லேய் என்ற பெண்மணியின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் பெருகி ...

Read More »

‘புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது, துரிதமாக இடம்பெறவேண்டும்’

“புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது, துரிதமாக இடம்பெறவேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலமாக, 70 வருடகாலமாகப் புரையோடியிருக்கின்ற தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படவேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருக்கிறது“ என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், நேற்று (08) தெரிவித்தார். புதிய அரசியலமைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிகளுடன் ஆராயும் முழுநாள் கூட்டம், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டம், நேற்று மாலை நிறைவடைந்ததன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் ...

Read More »

மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாற்றுச்சின்னங்கள் அழிந்து போகும்நிலையில்

ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்யப்பட்ட காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை மாவட்டத்தில் ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார். விடுதலைப்புலிகளின் காலத்தில் அக்கோட்டையானது அதிக பாதுகாப்புகளை வழங்கி பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அபிவிருத்தி என்ற பேரில் அக்கோட்டையினை பேரினவாதிகள் அழித்தொழிக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் வீரம் பேசும் தமிழ் அரசியல்வாதிகளினாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினாலும் அதனை பாதுகாப்பதற்கு முடியவில்லை. ...

Read More »

சீனா- நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்

சீனாவில் நோக்கிய நிறுவனம் தனது முதல் பிரத்தியேக ஸ்மார்ட் போனை வெளியிட உள்ளது.உள்ளூர் இணைய சில்லரை பெரு நிறுவனமான ஜேடி.காம் உடன் இணைந்து நோக்கிய இந்த ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய உள்ளது. இந்த கைப்பேசியின் உயர்தர வடிவமைப்பு காரணமாக உள்ளூர் சந்தையில் கவனத்தை பெறும் என்று நோக்கிய 6 ஸ்மார்ட் போனை உருவாக்கிய குழுவானது நம்பிக்கை தெரிவித்துள்ளது. லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் சி இ எஸ் எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சியின் இறுதிநாளில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த கண்காட்சியில் பிற ...

Read More »

‘தங்கல்’ வெளியான 16 நாட்களில் ரூ.330 கோடி வசூல்

அமீர்கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் ரூ.330 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘தங்கல்’. கிறிஸ்துமஸ்  விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இப்படத்தில் அமீர்கானின் நடிப்பும், படத்தின் திரைக்கதையும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வெகுவாகப்  பாராட்டுப்படுகிறது. படம் வெளியாகிய முதல் 16 நாட்களில் ‘தங்கல்’ இந்தியாவில் மட்டும் ரூ.330 கோடிகளை வசூலித்து  சாதனை ...

Read More »

அவுஸ்ரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்

இந்திய தொடரின்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று வார்னர் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியா அணி இலங்கை, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை இழந்தது. ஆனால் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 3-0 எனக் கைப்பற்றியது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டின் வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக அந்த அணி நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. இதனால் அவுஸ்ரேலியா புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இருந்தாலும் ஆசிய மண்ணில் அந்த அணி பெரிய வெற்றி பெற்றதில்லை. 19 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத இந்தியாவை நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சந்திக்க ...

Read More »