குமரன்

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தவறியோருக்கான அறிவிப்பு!

பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்கள், தமது விண்ணப்பங்களை அனுப்பிவைப்பதற்கான மேலதிக காலத்தை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது இந்நிலையில் நாட்டில் அமுலாகியுள்ள நடமாட்டத் தடையைக் கருத்திற்கொண்டு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலத்தை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது இதற்கமைய எதிர்வரும் 21,22,23 ஆகிய திகதிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சம்பந்தனை மீண்டும் தொடர்பு கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ …..

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு இருதரப்புச் சந்திப்புக்களை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த போதும் அது ஈற்றில் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக கூறி ஜனாதிபதி தரப்பால் இரத்தச் செய்யப்பட்டிருந்தது இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை காலையில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சிறிலங்கா ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஒருவர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு சம்பந்தனுடன் உரையாடியுள்ளார். சிறிலங்கா  ஜனாதிபதி கோட்டாபய ...

Read More »

பிரபல நடிகரை மீண்டும் இயக்கும் பிரித்விராஜ்

நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் பிரித்விராஜ், தனது அடுத்த படத்தை பிரபல நடிகரை வைத்து இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். மலையாள நடிகர் பிரித்விராஜ் சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். அந்த வகையில் ஓர் இயக்குநராக தனது முதல் படத்தை மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ படத்தை இயக்கினார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. பிரித்விராஜ் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு இந்நிலையில், பிரித்விராஜ் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், மீண்டும் மோகன்லாலை வைத்து எனது ...

Read More »

IS அமைப்புக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் சிட்னி இளைஞர் கைது!

சிட்னியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் IS அமைப்பினருக்கு ஆதரவு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். Chester Hill மற்றும் Sefton ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தீவிரவாத அமைப்பொன்றின் அங்கத்தவராக செயற்பட்டார் என்ற அடிப்படையில் இவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக Australian Federal Police மற்றும் NSW பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்துவைத்திருந்ததாகவும், வெடிமருந்து செய்முறைகளை வைத்திருந்தார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களாக இந்த இளைஞர் ...

Read More »

ஈரான் அதிபர் தேர்தல்: யாருக்கு வெற்றி வாய்ப்பு?

ஈரானில் அதிபர் தேர்தல் வெள்ளிக்கிழமை முடிந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியாக உள்ளன. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் பதவிக் காலம் முடிந்த நிலையில், ஈரான் அதிபருக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது. எனினும், அதிபர் தேர்தலில் மக்கள் ஆர்வமில்லாமல் வாக்களித்ததன் காரணமாக குறைவான எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவாகின. அதிபர் தேர்தலில் ஈரான் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் ரைசி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல் நாசர் ஹெமத்தி ...

Read More »

மகள் கதையை பகிர்ந்த பிரித்விராஜ்

நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ், தன்னுடைய மகள் எழுதிய கதையை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். மலையாள நடிகர் பிரித்விராஜ் சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். அந்த வகையில் ஓர் இயக்குநராக தனது முதல் படத்தை மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ படத்தை இயக்கினார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் பிரித்விராஜ். இந்நிலையில் பிரித்விராஜ் தனது தனது சமூக வலைத்தள பக்கத்தில், தன் மகள் சிலேட்டில் எழுதிய ஒன்லைன் கதையை பகிர்ந்தார். இந்தக் கதை 2-ஆம் உலகப் போரின் பின்னணியில் ...

Read More »

நிலையின்மையின் தத்துவார்த்தத் தேடல்

பெர்சேபோலிஸ் மர்ஜான் சத்ரபி வின்டேஜ் புக்ஸ் விலை: ரூ.599 மர்ஜான் சத்ரபியின் புகழ்பெற்ற கிராபிக் நாவலான ‘பெர்சேபோலிஸ்’ வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகின்றன. அந்த நாவல் மையப்படுத்தியிருக்கும் காலகட்டமோ இன்றிலிருந்து நாற்பது ஆண்டுகள் முந்தையது. நாற்பது ஆண்டுகள் கழிந்தும் அந்நாவலில் பதிவாகியிருக்கும் நிகழ்வுகள் இன்றும் தன்மை மாறாமல் நிகழ்ந்துவருகின்றன. கருத்தியல் அதிகாரத்தின் விளைவுகள் எல்லாக் காலகட்டத்திலும் ஒரே தன்மையுடையதாகத்தான் இருக்கின்றன என்பதை அந்நாவல் உணர்த்துகிறது. ஈரானில், 1979-ல் இஸ்லாமியப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு வரை ஆடைக் கட்டுப்பாட்டு, மதரீதியான அடக்குமுறைகள் ஆகியவை நடைமுறையில் இருக்கவில்லை. ...

Read More »

குருந்தூர் மலையை விரைவில் மீட்போம்!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில், தற்போது பௌத்தமயமாக்கல் முற்றுகைக்குள் உள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையினை விரைவில் மீட்போம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவ்வாறு குருந்தூர் மலையை மீட்பதற்காக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களுடன் இணைந்து வழக்குத் தொடர்வதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாகவும், அவ்வாறு வழக்குத் தொடர்வதற்கான ஆயத்தக்கட்டப்பணிகளில் பெரும்பாலான பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், எனவே குருந்தூர்மலையினை மீட்க வழக்கு விரைவில் தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு ...

Read More »

கருணா விவகாரத்திற்கு பொறுப்பேற்று ரணில் விக்கிரமசிங்க என்னை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டார்

17 வருடங்களிற்கு முன்னர் எனது கட்சி தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார் எனக்கு துரோகமிழைத்தார். இதன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக என்னை பலிக்கடாவாக்கினார். அதன் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நான் வெறுமனே அவரது உத்தரவுகளை மாத்திரம் பின்பற்றினேன்இநாட்டிற்கு நல்லது என நினைத்ததை மாத்திரம் செய்தேன்.என அவர் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது. அந்த நாள் ஜூன் 22 2004 நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ...

Read More »

அஸ்தமனமானது ‘முதலாவது’ சரணாகதி

இதுவும் நடந்துவிடவேண்டுமென நினைத்திருந்தவர்களுக்குக் கசப்பாகவும் நடந்துவிடவே கூடாதென எண்ணியிருந்தோருக்கு திகைப்பூட்டியும், ‘ஜனாதிபதி மாளிகை’யைக் களமாகக் கொண்டு, ‘ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு’த் தொடர்பாக, ஜூன் 15ஆம் திகதி வெளிவந்த செய்திகள் அமைந்திருந்தன. அதுதான் ‘முதல்’ முறை என்றாலும், ‘இறுதி’யாகி விடக்கூடாது என்பதே, பலரது கரிசனையுமாகும். ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னரான அறிவிப்புகள், ஜனாதிபதி செயலகத் தரப்பிலிருந்து விடுக்கப்படுவது அரிதாகும். இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெறுமாயின், அவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால், கூட்டமைப்புடனான சந்திப்புத் தொடர்பிலும், சந்திப்பு பிற்போடப்பட்டமை குறித்தும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பக்கத்திலிருந்தே ...

Read More »