மகள் கதையை பகிர்ந்த பிரித்விராஜ்

நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ், தன்னுடைய மகள் எழுதிய கதையை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மலையாள நடிகர் பிரித்விராஜ் சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். அந்த வகையில் ஓர் இயக்குநராக தனது முதல் படத்தை மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ படத்தை இயக்கினார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் பிரித்விராஜ்.

இந்நிலையில் பிரித்விராஜ் தனது தனது சமூக வலைத்தள பக்கத்தில், தன் மகள் சிலேட்டில் எழுதிய ஒன்லைன் கதையை பகிர்ந்தார். இந்தக் கதை 2-ஆம் உலகப் போரின் பின்னணியில் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தந்தை-மகன் இரட்டையரைப் பற்றியது. இந்த சிலேட்டின் படத்தை பகிர்ந்து,
பிரித்திவிராஜ் பகிர்ந்த கதை
“இந்த லாக்டவுனில் நான் கேட்ட சிறந்த ஒன்லைன் கதை இது. ஆனால் ஒரு பெருந்தொற்று நோய்க்கு மத்தியில் இதைப் படமாக்குவது சாத்தியமற்றது என்று தோன்றியதால், நான் மற்றொரு ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுத்தேன். ஆம், மீண்டும் கேமராவுக்குப் பின்னால் செல்ல இருக்கிறேன். விவரங்கள் விரைவில் வெளியாகும்” என்று தனது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.