குமரன்

சீனாவின் பகோடா கோபுரம் கின்னஸ் சாதனை

மரத்தினால் ஆன அதிக உயரமுள்ள சீனாவின் ‘பகோடா’ கோபுரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சீனாவின் கலாசார சின்னங்களில் ‘பகோடா’ என்ற மரத்தினால் ஆன கோபுரமும் ஒன்று. இக்கோபுரங்கள் வழிபாட்டு தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ‘பாக்யாங்’ கோவிலில் மிக உயரமான கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது 1056-ம் ஆண்டில் லியாவோ ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. மரத்தினால் ஆன இக்கோபுரம் 67.31 மீட்டர் உயரம் கொண்டது. இதில் உள்ள மரக்கட்டைகள் 3 ஆயிரம் கன மீட்டருடன் 2600 டன் எடை கொண்டதாகும். எனவே, ...

Read More »

யாழில் S. P. Bயின் நண்பேன்டா இசை நிகழ்ச்சி !- இந்தியச்சதி

அக்டோபர் மாதம் 9 ம் திகதி யாழ்ப்பாணம் 2016 யாழ் மண்ணில் சிறீலங்கா அரச தொலைகாட்சி வசந்தம் டிவி ( ITN) இலங்கை அரச வானொலி வசந்தம் FM ( ITN ) மற்றும் மகிந்த ராஜபக்சேவின் மகிந்த சிந்தனையில் உருவான ஒரே குரல் ஒரே தேசம் அரச தொலை தொடர்பு நிறுவனம் (SRILANKA TELECOM) ஆதரவில் தென்னிந்திய இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகன் ஹரி பாஸ்கர் மற்றும் மலையகத்தை பின்னணியாக கொண்ட ஐங்கரன் மீடியா நிறுவனத்திற்க்கு பணம் கொடுத்து பொருத்தமற்ற சூழ்நிலையில் இந்த ...

Read More »

கணவரை வில்லனாக களமிறங்கி விட்டுள்ளார் சிம்ரன்

திருமணம் செய்து கொண்ட பல மாஜி நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் பிசியாகி வருகின்றனர். ஆனால் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரனுக்குத்தான்  மீள் வருகை  பெரிதாக அமையவில்லை. ஆஹா கல்யாணம், திரிஷா இல்லன்னா நயன்தாரா, கரையோரம் போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர், தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார். அதோடு தனது கணவர் தீபக்கையும் முன்னணி நடிகர்களின் படங்களில் அறிமுகம் செய்ய சான்ஸ் கேட்டு வந்தார் சிம்ரன். ஆனால் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்காக காத்திருந்து காலம் கடத்த ...

Read More »

விண்வெளியில் உருவாகும் அதிசக்தி வாய்ந்த X கதிர்!

X கதிர்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும், மருத்துவ செயற்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்து வெளியாகும் சக்தியானது உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் பலத்த பாதுகாப்புக்களுடனேயே மருத்துவ சிகிச்சைகள் அல்லது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் இவற்றினை விடவும் அதிக சக்தி வாய்ந்த X கதிர்கள் அண்டவெளியில் உற்பத்தி செய்யப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை நாசா விண்வெளி ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. 2012ம் ஆண்டு நாசா நிறுவனம் மேற்கொண்ட DXL எனும் ராக்கெட்டினை விண்ணிற்று அனுப்பும் முயற்சியின் போது பால்வெளியில் குறைந்தளவு சக்தி உடைய X கதிர்கள் உருவாக்கப்படுகின்றமை கண்டறியப்பட்டது. எனினும் ...

Read More »

பிரதமராக தகுதியற்றவன்! பணிவுடன் வாய்ப்பை மறுத்தார் ஈழத்தமிழர்

சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல எனத் தெரிவித்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், என்னை பற்றி எனக்கு நன்கு தெரியும். எனவே பிரதமர் பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல. நான் கொள்கை வகுப்பதில் சிறப்பாக செயற்படுவேன். அத்துடன், இளைய சகாக்களுக்கும் பிரதமருக்கும் ஆலோசகனைகளை வழங்கும் தகுதி எனக்கு உண்டு. எனினும் பிரதமர் ...

Read More »

உரி தாக்குதல் துயரம் மனதை விட்டு நீங்காததால் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த லதா

உரி தாக்குதல் துயரம் மனதை விட்டு நீங்காததால் பாடகி லதா மங்கேஷ்கர் தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்து விட்டதாக திரைப்படத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு நேற்று 87-வது பிறந்தநாள். ஆனால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்து விட்டார். சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் உரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவவீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். இது லதா மங்கேஷ்கருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் மனதை விட்டு நீங்காததால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தியாகதீபம் திலீபன் நினைவுப்பாடல்

தியாகி திலீபன் நினைவு பாடல் ஒன்று அவுஸ்திரேலிய மெல்பேர்ண் கலை பண்பாட்டுக்குழுவினரால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. தியாகி திலீபனின் 29 வது ஆண்டு நினைவை முன்னிட்டு இப்பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.  

Read More »

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்வு

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த இரவு விருந்து நிகழ்வு கடந்த சனிக்கிழமை (24.09.2016) குட்வூட் சமுக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதிப்புக்குரிய பல்லின கலாச்சார அமைச்சர், சோய் பெட்டிசன், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வின் மூலம் திரட்டப்பட நிதி முழுவதும் வன்னி மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்காக “வன்னியின் கண்ணீர்” அமைப்பினூடாக வழங்கப்படவுள்ளது. விளம்பர அனுசரணையின் மூலமும், நல்லுள்ளங்களின் நன்கொடை மூலமும், உள்ளூர் எழுத்தாளர் திருமதி. ராஜி வல்லிபுரநாதன் ...

Read More »

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் மீண்டும் ஒருமனதாக தேர்வு

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக வங்கியின் தலைவர்களை அவ்வங்கியில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் அமெரிக்காதான் தொடர்ந்து அறிவித்தும் நியமித்தும் வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு இப்பதவிக்கான போட்டியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ந்கோஸி ஓக்கோஞோ-ல்வேலா என்பவர் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட தலைவரை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். இந்நிலையில், உலக வங்கியின் தலைவராக தென்கொரியா நாட்டை சேர்ந்த ஜிம் யாங் கிம் கடந்த 1-7-2012 அன்று பொறுப்பேற்றார். ...

Read More »

உலகில் முதன் முறையாக 3 பெற்றோர் இணைந்து உருவாக்கிய குழந்தை

உலகில் முதல் முறையாக 3 பெற்றோர் இணைந்து ஊருவாக்கிய குழந்தை மெக்சிகோவில் பிறந்தது. பொதுவாக ஒரு குழந்தைக்கு தாய் மற்றும் தந்தை என 2 பேர் பெற்றோராக உள்ளனர். ஆனால் தற்போது 2 தாய்கள் ஒரு தந்தை என 3 பெற்றோர் இணைந்து ஒரு குழந்தையை உருவாக்கியுள்ளனர். சிலருக்கு மரபணு (ஜீன்ஸ்) குறைபாடு காரணமாக குழந்தைகள் பிறப்பதில்லை. அப்படி உருவானாலும் கருச்சிதைவு ஏற்படுகிறது. தப்பி தவறி பிறந்தாலும் ஒரு விதமான வினோத நோயினால் பிறந்த குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இக்குறைபாட்டை போக்கவே 3 பெற்றோர் ...

Read More »