உரி தாக்குதல் துயரம் மனதை விட்டு நீங்காததால் பாடகி லதா மங்கேஷ்கர் தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்து விட்டதாக திரைப்படத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு நேற்று 87-வது பிறந்தநாள். ஆனால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்து விட்டார்.
சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் உரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவவீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். இது லதா மங்கேஷ்கருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் மனதை விட்டு நீங்காததால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்து விட்டார்.
உரி தாக்குதலில் உயிர் தியாகம் செய்த ராணுவவீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் லதா மங்கேஷ்கர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டதாக திரைப்படத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இருந்த போதிலும் பிரதமர் நரேந்திர மோடி, புகழ்பெற்ற இந்தி நடிகையான அமிர்தா ராவ் மற்றும் பலர் டுவிட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
Eelamurasu Australia Online News Portal