அக்டோபர் மாதம் 9 ம் திகதி யாழ்ப்பாணம் 2016 யாழ் மண்ணில் சிறீலங்கா அரச தொலைகாட்சி வசந்தம் டிவி ( ITN) இலங்கை அரச வானொலி வசந்தம் FM ( ITN ) மற்றும் மகிந்த ராஜபக்சேவின் மகிந்த சிந்தனையில் உருவான ஒரே குரல் ஒரே தேசம் அரச தொலை தொடர்பு நிறுவனம் (SRILANKA TELECOM) ஆதரவில் தென்னிந்திய இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகன் ஹரி பாஸ்கர் மற்றும் மலையகத்தை பின்னணியாக கொண்ட ஐங்கரன் மீடியா நிறுவனத்திற்க்கு பணம் கொடுத்து பொருத்தமற்ற சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சியை இந்தியத் தூதரகம் மறைமுகமாக நடாத்த உள்ளனர்
இந்நிகழ்வானது செப்டம்பர் 24 ம் திகதி மிகவும் வெற்றிகரமாக யாழில் இடம்பெற்ற எழுக தமிழ் மாபெரும் எழுச்சி பேரணிக்கு கிடைத்த வெற்றியை மழுங்கடித்து கேலியாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள்.
யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் மக்களின் பலதரப்பட்ட பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் இருக்கும் நிலையில்தான் இந்நிகழ்வு நடைபெற உள்ளது .
• இராணுவத்தால் கையடக்கபட்ட மக்களின் நிலங்கள் திருப்பி வழங்காமை
• விசாரணை இன்றி சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் தற்போதைய உண்ணாவிரத போராட்டம்
• தமிழர் பிரதேசங்கள் புத்த மயமாக்கல்
• சிங்கள குடியேற்றம்
• காணாமல் போனவர்களை கண்டு பிடித்தல்
• இனப்படுகொலைக்கான அனைத்துலக விசாரணை
• இனப் பிரச்சினைக்கான தீர்வு முன் வைக்கப்படாமை
• சரணடைந்த போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டைமை
• வடக்கில் அபிவிருத்தியும் தொழில் வாய்ப்பும் புறக்கணிக்கப்பட்டவை
இது போன்ற பல பிரச்சினைகளுக்கு ஈழத் தமிழர் முகம் கொடுத்து இருக்கும் வேளையில் திரை மறைவில் இந்திய அரசின் தேவைக்கு ஏற்ப இன் நிகழ்ச்சி இப்போது நடைபெறுவது வருந்ததக்கது .
தமிழீழ தமிழ் மக்கள் என்றென்றும் S. P. பாலசுப்ரமணியம் மற்றும் கங்கை அமரன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் பாசமும் கொண்டவர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்போது இதுபோன்ற மேலும் பல்வேறு நிகழ்சிகளை யாழ் மக்கள் வரவேற்பார்கள்.