குமரன்

டெல்லி கலவரத்துக்கு ஐநா சபை கண்டனம்!

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி கலவரத்தில் காவல் துறை  செயல்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஹை கமி‌ஷனர் கூறியுள்ளார். ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பின் 43-வது ஆலோசனை கூட்டம் சுவீட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஹை கமி‌ஷனர் மிச்சேல் பேச்லட் பேசும்போது, டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தார். இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி கலவரத்தில் காவல் துறை  செயல்படாமல் ...

Read More »

பரமபதம் விளையாட்டை தள்ளிப்போட்ட திரிஷா!

திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் வெளியீட்டு திகதி  மாற்றப்பட்டுள்ளது. திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ’பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை திருஞானம் இயக்கி இருக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் பிப்ரவரி 28ம் திகதி வெளியாக  இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவாக கிடைத்ததால் தற்போது இப்படத்தை மார்ச் மாதம் மாதம் வெளியிட இருப்பதாக இயக்குனர் திருஞானம் தெரிவித்திருக்கிறார்.

Read More »

சமந்தா படத்திற்கு ரூ.15 கோடி நஷ்டமா?

சமந்தா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ரூ.15 கோடி வரை நஷ்டம் வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் 2018ம் ஆண்டு வெளிவந்த ‘96’ படத்தை தெலுங்கில் சர்வானந்த், சமந்தா நடிக்க ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்து பிப்ரவரி 7ம் தேதி வெளியிட்டார்கள். முதல் நாளில் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் வரவேற்பையும் பெற்ற படம் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறிவிட்டது. படம் தோல்வியை நோக்கிப் போவதாக கடந்த வாரமே சொன்னார்கள். அதன்படியே படம் எதிர்பாராத பெரும் தோல்வியைக் கொடுத்து ...

Read More »

வங்காளதேசத்தை 86 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

கான்பெர்ராவில் நடைபெற்ற ஆட்டத்தில் 189 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தை 103 ரன்னில் கட்டுப்படுத்தி அபார வெற்றி பெற்றது. பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனே ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் வங்காளதேச வீராங்கனைகளின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அலிசா ஹீலி 53 பந்தில் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பெத் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதியின் நாவல் திரைப்படமாக…..!

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானியின் ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ எனும் நாவல் விரைவில் திரைப்படமாக உருவெடுக்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பை Sweetshop & Green, Aurora Films மற்றும் Hoodlum Entertainment எனும் தயாரிப்பு நிறுவனங்கள் தனது கூட்டறிக்கையில் வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு ...

Read More »

கமல் கடிதத்துக்கு லைகா பதில்!

‘இந்தியன் – 2’ விபத்து குறித்து கமல் எழுதிய கடிதத்துக்கு பதில் கடிதமொன்றை லைகா நிறுவனம் கமலுக்கு அனுப்பியுள்ளது. கடந்த 19-ம் தேதி பூந்தமல்லி ஈவிபி மைதானத்தில் ‘இந்தியன்-2’ படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து சினிமாத் துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீட்டை கமல் வழங்கினார். அதன்பிறகு படப்பிடிப்பில் குழுவினர் பாதுகாப்பு, அவர்கள் மனநிலை, ...

Read More »

கல்வி மட்டுமே முன்னேற்றத்துக்கான வழி- ஷாருக்கான்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலுள்ள லா ட்ரோப் பல்கலைகழகம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெயரில் பிஎச்டி படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் ஒன்றை அறிவித்திருந்தது. தற்போது அந்த ஸ்காலர்ஷிப் கேரளாவைச் சேர்ந்த பிஎச்டி மாணவியான கோபிகாவுக்கு கிடைத்துள்ளது. முதல் ஷாருக்கான் லா ட்ரோப் பல்கலைகழக பிஎச்டி ஸ்காலர்ஷிப்பை மாணவி கோபிகாவுக்கு நேற்று (26.02.2020) ஷாருக்கான் வழங்கினார். மும்பையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷாருக்கான் பேசியதாவது: நான் கல்வி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன். ஒரு நகரமோ, மாநிலமோ, நாடோ மேலும் மேலும் ...

Read More »

விக்கிப்பீடியாவில் தமிழ் முன்னணியில் இருப்பது எப்படி?

துறை சார்ந்த நிபுணர்கள் முதல் மாணவர்கள், பொதுமக்கள் வரை தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் தேடிப் பெற கூகுள் போன்ற தேடு பொறிகள் பெரும் உதவியாக உள்ளன. எனினும், பெரும்பாலான தகவல்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. ஆனால், உலகெங்கும் தகவல்களைத் தேடுவோர் எண்ணிக்கை ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளில் 68% உள்ளது. இந்நிலையில், பல்வேறு துறை சார்ந்த தகவல்கள் இந்திய மொழிகளில் விக்கிப்பீடியாவில் கிடைக்கச் செய்வதற்கான ஏராளமான தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவ்வகையில், தமிழ் மொழி தகவல்களை இணையத்தில் இடம்பெறச் செய்வதில் தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. தமிழ் விக்கிப்பீடியா 2003 ...

Read More »

இலங்கை ஊழியர்களுக்கு கொரோனா இல்லை – விரைவில் நாடு திரும்புவர்

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டயமன்ட் பிரின்ஸஸ் கப்பலில் சேவையாற்றிய இலங்கை ஊழியர்கள் இருவரும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனைகளில் உறுதியானதை அடுத்து அவர்கள் இவ்வாறு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் 14 நாட்களுக்கு பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஹொங்கொங்கில் இருந்து 3,700 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடந்த 4 ஆம் திகதி ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டயமன்ட் பிரின்ஸஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ...

Read More »

சாம்பியா குடியரசின் இராணுவ தளபதி இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு

சாம்பியா குடியரசின் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டப்ள்யூ.எம் சிகாஷ்வோ (DSS) எம்ஏ (DSS) இலங்கைக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை  ஸ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு இலங்கை இராணுவ தளபதியை சந்திப்பதற்காக வருகை தந்தார்.

Read More »