சாம்பியா குடியரசின் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டப்ள்யூ.எம் சிகாஷ்வோ (DSS) எம்ஏ (DSS) இலங்கைக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை ஸ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு இலங்கை இராணுவ தளபதியை சந்திப்பதற்காக வருகை தந்தார்.
இங்கு வருகை தந்த இவரை இராணுவ தலைமையக பட்டாலியன் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் இந்திக பெரேரா வரவேற்றார்.
பின்னர் இராணுவ தலைமையக நுழைவாயிலில் வைத்து சாம்பியா இராணுவ தளபதியை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சூல அபேநாயக வரவேற்று பின்னர் சிங்கப் படையணியைச் சேர்ந்த கெப்டன் கசும் தஹநாயகவின் தலைமையில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.
பின்னர் இராணுவ தளபதியின் பணிமனைக்கு சாம்பியா இராணுவ தளபதி அழைத்து செல்லப்பட்டார். அங்கு இவரை பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றார். பின்னர் இராணுவ தலைமையகத்திலுள்ள மூத்த இராணுவ உயரதிகாரிகளை இராணுவ தளபதியவர்கள் சாம்பியா இராணுவ தளபதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதனை தொடர்ந்து இரு இராணுவ தளபதியவர்களுக்கும் இடையில் நல்லிணக்கம் , இராணுவ உறவு முறைகள் மற்றும் பயிற்சிகள் தொடர்பான விடயங்ள் கலந்துரையாடப்பட்டன. இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் நோக்கத்துடன் இலங்கை இராணுவ தளபதியின் நினைவு பரிசொன்று வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார். இறுதியில் விஷேட அதிதிகளுக்கான குறிப்பேட்டிலும் சாம்பியா இராணுவ தளபதியவர்கள் கையொப்பமிட்டார். .
சாம்பியா இராணுவ தளபதியுடன் தென்னாபிரிக்காவிற்கான தூதரகத்தின் பிரதிநிதியான பிரிகேடியர் ஜெனரல் சிமுசண்டு, சாம்பியா உயர் பாதுகாப்பு ஆனையம், புதுதில்லி, இந்தியா தூதரகத்தின் பிரதிநிதி பிரிகேடியர் ஜெனரல் ஜி Ng´andwe, சாம்பியா பாதுகாப்பு பல்கலைக்கழக பணிப்பாளர் கேர்ணல் ஜெத்ரோ சிபிலி, கேர்ணல் டீ பண்டா, தலைமை கல்லூரி பயிற்றுவிப்பாளர் பணிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் எம் ஷாப்வாயா, கட்டளை சிறப்பு படை , கெப்டன் எம். முலேங்கா போன்றோர் பங்கேற்றிக் கொண்டனர்.
இம் மாதம் (21) ஆம் திகதி இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்ட சாம்பியா இராணுவ தளபதியவர்கள் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி அவர்களை சந்திக்கவுள்ளார்.