வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்று, காலை 8.15 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். பிற்பகல் 4 மணிக்கு பச்சை சாத்தும் பூசை இடம் பெற்று அம்மன் ஆலயத்துக்குள் எழுயந்தருளுவார். நாளை வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு தீர்த்த திருவிழாவுக்காக வசந்த மண்டப பூசைகள் ஆரம்பமாகும். காலை 8.30 மணி தொடக்கம் 10 மணி தீர்த்த பூசைகள் நடைபெறும்.
Read More »குமரன்
புலத்தில் இருந்து தாயகம் திரும்பி சிறுவன் விபத்தில் பலி!
மட்டக்களப்பு – கிரான் பகுதியில் நேற்று முன் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சகோதரன் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்தும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற வானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் வானின் சாரதியான கல்லடி நொச்சிமுனையைச் சேர்ந்த பாலச்சந்திரன் ...
Read More »படகுகளில் வருவோரை தடுக்க அவுஸ்திரேலியா அதிரடி நடவடிக்கை!
அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக படகுகளில் வருவோரை தடுப்பதற்கு புதிய யுக்தி ஒன்றினை அவுஸ்திரேலியா கையாளவுள்ளது. கடல் எல்லையைப் பாதுகாக்கும் நோக்கில் Triton drones என்று பெயரிடப்பட்டிருக்கும் ஆளின்றி பறக்கும் அதிநவீன போர் விமானங்களை அவுஸ்திரேலிய அரசு வாங்கவுள்ளது. இந்த ஆளின்றி பறக்கும் அதிநவீன போர் விமானத்தின் மூலம் புகலிடம் கோருவோரை ஏற்றிவருத் படகுகள் அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் வரும் முன்பே கண்டறிந்துவிட முடியும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் ஆயுத மற்றும் வான்வழி போர் தளபாடங்களை தயாரிக்கும் Northrop Grumman Corporation எனும் நிறுவனத்திடமிருந்து அவுஸ்திரேலியா அரசு ...
Read More »ஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும்!
ஊருக்குள் வந்த சிறுத்தை தன்னை தற்காத்துக் கொள்வதற்காக மனிதர்களைத் தாக்கியது. மனிதர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக சிறுத்தையைத் தாக்கினார்கள். தன்னைக் கொல்ல வரும் பசுவைக் கொல்லலாம் என்று ஒரு கிராமியச் சொற்தொடர் உண்டு. எனவே ஊருக்குள் நுழைந்து மனிதர்களைத் தாக்கிய சிறுத்தையை மனிதர்கள் தாக்கியத்தில் ஒரு தர்க்கம் உண்டு. வீட்டுக்குள் வரும் விசப்பாம்பை அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு. அதுபோலவே ஊருக்குள் திரியும் கட்டாக்காலி நாய்க்கு விசர் பிடித்தாலும் அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு. ஆனால் அம்பாள் குளத்தில் சிறுத்தையைக் கொன்ற விதமும், கொன்ற பின் கொண்டாடிய விதமும் தான் ...
Read More »ஐஸ்வர்யா ராயின் மகள் வருங்கால பிரதமரா ?
அமிதாப் பச்சனின் பேத்தியும், ஐஸ்வர்யாராயின் மகளும் ஆன ஆர்த்யா இந்தியாவின் வருங்கால பிரதமராக வருவார் என பிரபல ஜோதிடர் கியானேஷ்வர் கணித்துள்ளார். 2018ஆம் ஆண்டின் புதிய ஜோதிட கணிப்புகளை வெளியிட்டுள்ள கியானேஷ்வர், ஐஸ்வர்யாராயின் மகள் ஆர்த்யா தனது பேரை ரோகினி என மாற்றிக்கொண்டார் என்றால் அவர் இந்தியாவின் வருங்கால பிரதமராக வருவார் என கணித்துள்ளார். இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என ஏற்கெனவே துல்லியமாக கணித்துவர். அத்துடன் 2009ஆம் ஆண்டு ஆந்திராவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை ...
Read More »சுழிபுரம் சிறுமி கொலை- சந்தேகநபர் அதிர்ச்சி வாக்குமூலம்!
சிறுமியை கொலை செய்த பின்னர், அவளது பாடசாலை சீருடையை நெருப்பில் எரித்தேன். தோடுகளைத் திருடுவதற்காகவே அவளைக் கொலை செய்தேன்” என்று சுழிபுரம் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் காவல் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என அறியமுடிகிறது. சந்தேகநபர்களில் ஒருவர் ஒருவன் மனநோயாளியைப் போல நடிக்கிறார். சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறார். ஆனால் சரியான காரணத்தைக் கூறவில்லை என்று காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி றெஜீனா நேற்று ...
Read More »ரெலோ அமைப்பின் ஆயுதக் குவியல் ரமேஸ்வரத்தில் கண்டுபிடிப்பு!
ராமேஸ்வரம் அருகே கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகள் தமிழ்ஈழ விடுதலை இயக்கம் பதுக்கியது என தெரிய வந்ததால் டெல்லி, சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த ராமேசுவரம் விரைந்துள்ளனர். ராமேசுவரம் அருகே கடற்கரை கிராமமான தங்கச்சி மடத்தில் ஆயுத குவியல் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழ்ஈழ விடுதலை இயக்கம் பதுக்கியது என தெரிய வந்ததால் டெல்லி மற்றும் சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் மேல் விசாரணை நடத்த ராமேசுவரம் விரைந்துள்ளனர். தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன் என்பவரது ...
Read More »யாழில் மீண்டும் கிட்டுப்பூங்கா!
யாழில் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு பின்புறமாக காணப்படும் தீயாக தீபம் தீலபனின் சிலையை மீளவும் அதே இடத்தில் நிறுவுவதற்கும் யாழ் மாநகர சபைக்குட்பட்ட சங்கிலியன் பூங்காவாகவுள்ள கிட்டு பூங்காவை மீளவும் கிட்டுப் பூங்கா என பெயர் மாற்றுவதற்கும் நாவாந்துறையில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுத் தூபியை நிறுவுவதற்கும் யாழ் மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் அமர்வு இன்றைய தினம் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது சங்கிலியன் பூங்கா என அழைக்கப்படும் கிட்டுப் புங்காவை மீளவும் கிட்டுப் பூங்கா என பெயர் ...
Read More »தூத்துக்குடிக்காக சர்வதேச அமைப்பை உருவாக்கும் திருமுருகன் காந்தி!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஒரு சர்வதேச பிரச்னை. அதைத் தமிழ்நாட்டின் பிரச்னையாக மட்டும் பார்க்கக் கூடாது. இதைச் சர்வதேச பிரச்னையாக கொண்டுபோகும் வேலைகளில் இறங்கி ‘தூத்துக்குடி படுகொலைக்கும், தமிழ்நாட்டுக்குமான நீதி’ எனும் தலைப்பில், ஐரோப்பாவில் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது மே பதினேழு இயக்கம். தென்னாப்பிரிக்காவில் `மரிக்கானா’ (Marikana) எனும் சிறு நகரத்தில் போராடிய சுரங்கத் தொழிலாளர்களின் மீது 2012-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50. அப்போது நடந்த துப்பாக்கிச்சூடு லொன்மின் (Lonmin) என்ற கனிமச் சுரங்க நிறுவனத்துக்கு ...
Read More »மைதானத்தினுள் நுழைந்து கால்பந்து விளையாடிய கங்காரு!
ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் நேற்று பெண்களுக்கான கால்பந்து பிரீமியர் லீக் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கங்காரு ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது. அதனை கண்ட அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். கங்காரு மைதானத்தை குதித்து குதித்து சுற்றி வந்தது. பின்னர் கங்காருவிடம் பந்தை எறிந்தனர். கங்காரு அந்த பந்துகளை காலால் எட்டி உதைத்தது. அதன் பின் மைதானத்தை சுற்றி வந்தது. இதனால் போட்டி 20 நிமிடம் தாமதமானது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் கங்காருவை வானில் ஏற்றி அழைத்து சென்றனர். ...
Read More »
Eelamurasu Australia Online News Portal