குமரன்

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு மக்களிற்கு உரிமையுள்ளது- ஐநா பிரதிநிதி

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களிற்கு உள்ள உரிமைக்கு ஆதரவாக இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநி ஹனா சிங்கர் கருத்து வெளியிட்டுள்ளார். ஒன்றுகூடுவதற்கான உரிமையில் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமையும் அடங்கியுள்ளது என அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கருத்துசுதந்திரம் பொதுமக்கள் கொள்கைகளில் தாக்கம் செலுத்துதல் போன்ற ஏனைய உரிமைகளை பயன்படுத்துவதற்கு அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை உதவுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவைரசினை கட்டுப்படுத்;துவதற்கான கட்டுப்பாடுகள் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கின்ற நியாயமான நடவடிக்கைகளிற்கு அப்பால் செல்லாமலிருப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

சம்பந்தனை கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சி எதுவும் இடம்பெறவில்லை

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லை என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அரசியல்வாதியொருவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயல்கின்றார் என நான் தெரிவிக்கவில்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நான் அன்று இந்திய தூதுவரை சந்திப்பதற்காக கொழும்பிலிருந்தேன் அவ்வாறான நிலையில் நான் எப்படி யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ...

Read More »

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான்

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு தனது இசையில் பாட வாய்ப்பளித்த இசையமைப்பாளர் டி.இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் கைவசம் ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் 40-வது படம், விஜய் சேதுபதியின் லாபம், அரவிந்த் சாமியின் வணங்காமுடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல், மை டியர் பூதம் போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், இசையமைப்பாளர் இமான், கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு, தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார். இவருடன் இணைந்து சஹானா என்ற சிறுமியும் ...

Read More »

இன்று சர்வதேச மலாலா தினம்

இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயின் பிறந்த நாளான ஜூலை 12ம் தேதி, சர்வதேச மலாலா தினமாக கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் போராளியான மலாலா, பெண்களின் கல்வி உரிமைக்கான குரல் கொடுத்ததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர். 2012 ஆம் ஆண்டு, பெண்களுக்கான உரிமை குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது தலிபான்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றார் மலாலா. மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட அவர், பயந்து ஒதுங்கிவிடாமல் தனது கருத்துக்களை முன்பைவிட வலுவாக முன்வைத்தார். 2013 ஆம் ...

Read More »

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு மனப்போக்கு மாற்றம்

கடந்த வருடம் கொவிட் –19 பெருந்தொற்று நோய் பரவத்தொடங்கிய நேரத்தில் இருந்து இலங்கைக்கு முக்கியமானதும் காலப்பொருத்தமானதுமான உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதில் சீனா அதிமுன்னணியில் இருந்திருக்கிறது.கடனாகவும் நாணயபரிமாற்றமாகவும் சீனா இலங்கைக்கு 200 கோடிக்கும் அதிகமான டொலர்களை வழங்கியிருக்கிறது ;10 இலட்சத்துக்கும் அதிகமான சினோபார்ம் தடுப்பூசிகளை நன்கொடையாகவும் சுமார் 60 இலட்சம் தடுப்பூசிகளை வேறு வழிகளிலும் இதுவரை காடுத்திருக்கிறது.ஆனால், கடந்த கால மற்றும் தொற்றுநோய்க் கால உதவிகளுக்கு மத்தியிலும், முன்னொருபோதும் இல்லாதவகையில் சீனா இலங்கையில் பொதுமக்களின் கூர்மையான அவதானிப்புக்குள்ளாகியிருக்கிறது. இது மிகவும் முக்கியமானது.ஏனென்றால்,(சுதந்திரம் பெற்ற 1948 ஆம் ...

Read More »

போராட்டம் வெடிக்கும், எச்சரிக்கிறார் ரவிகரன்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர்பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலைகொண்டிருக்கும் கோத்தாபாய கடற்படை முகாமிற்காக அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு தமிழ் மக்களின் காணிகளை கடற்படை முகாமிற்காக அபகரித்தால், மக்களோடு இணைந்து எதிர்ப்பு ஆற்பாட்டத்தில் இறங்குவோம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள குறித்த தமிழ் மக்களுக்குரிய 617ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றிற்கு ...

Read More »

மூளை என்றொரு மின்தடம்

அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியலாளரும், பிபிசியில் ஒளிபரப்பாகும் ‘தி ப்ரெய்ன்’ என்ற புகழ்பெற்ற தொடர் நிகழ்ச்சியை வழங்குபவருமான டேவிட் ஈகிள்மேன், மனித மூளையின் அசாத்தியமான நெகிழ்வுத்தன்மை குறித்து சமீபத்தில் எழுதியுள்ள ‘லைவ்வயர்ட்’ நூல் குறித்து ‘தி கார்டியன்’ இதழுக்கு ஒரு நேர்காணலை அளித்துள்ளார். புதிய அனுபவங்களுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்வதில் மூளை எப்படிச் சிறந்து விளங்குகிறது என்பதை இந்த நேர்காணலில் பகிர்கிறார். செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக இவர் கைக்கடிகாரத்தின் வடிவத்தில் உருவாக்கிய ‘பஸ்’ (buzz) என்ற கருவி, ஒலியை வெவ்வேறு அதிர்வு வடிவங்களாகப் பெயர்த்து என்ன சத்தம் ...

Read More »

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் டெல்டா வைரஸ்: சிட்னியில் அதிகரிக்கும் தொற்று

ஆஸ்திரேலியாவை கரோனா டெல்டா வைரஸ் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. அதுவும் குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அன்றாட தொற்று வேகமெடுத்து வருகிறது. சிட்னி நகரில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் குறையவில்லை. இதனால் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக அந்நாடு பரிசீலித்து வருகிறது. இது குறித்து, நியூசவுத் வேல்ஸ் மாகாணத் தலைவர் கிளாடிஸ் பெர்ஜிக்லியான் கூறும்போது, “டெல்டா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதன் பரவல்தன்மை அதிகம். ஆகையால் மக்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது ...

Read More »

‘நானே வருவேன்’ படத்தலைப்பு மாற்றம்?

தனுஷ் நடிக்கவுள்ள ‘நானே வருவேன்’ படத்தின் தலைப்பை மாற்றப் படக்குழு முடிவு செய்துள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் படம், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம், ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ். இதில் செல்வராகவன் இயக்கத்தில், தாணு ...

Read More »

வலிகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோசிற்கு கொலை மிரட்டல்

யாழ்மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோசிற்கு மத்திய மாகாணத்தில் பதியப்பட்ட வாகனத்தில் வந்த சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதுடன் அவரை கற்களால் தாக்க முயற்சித்துள்ளனர். இது தொடர்பில் தியோகராஜா நிரோஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். நான் எனது உத்தியோகபூர்வ வாகனத்தில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி ஊடாக பழைய தபாற்கந்தோர் ஒழுங்கை ஊடாக சென்றுகொண்டிருந்தபோது-எங்களிற்கு பின்னர் வந்துகொண்டிருந்த மத்திய மாகாணத்தில் பதியப்பட்ட பிபீ 0595 என்ற அதிசொகுசு பிக்கப்பில் வந்த பத்துபேர் என்னை அச்சுறுத்தினார்கள். அவர்கள் பொதுமக்கள் அதிகமாக காணப்படுகின்ற பகுதியில் மிக ...

Read More »