வட இந்தியாவில் தமிழர்களை நன்றாக மதிக்கிறார்கள் என்று நடிகர் ஜீவா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். ஜீவா நடிப்பில் சீறு படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. ரத்ன சிவா இயக்கியுள்ள இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இது தவிர ஜீவா நடிப்பில் களத்தில் சந்திப்போம், ஜிப்சி, 83 ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. ஜீவா அளித்த பேட்டி: சீறு படம் பற்றி? இது முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தரும் படம். படத்தில் 6 சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. மயிலாடுதுறையில் கொக்கரக்கோ டிவி ...
Read More »குமரன்
இராணுவ பதக்கங்களுடன் சிறிலங்கா ஜனாதிபதி!
சிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் சிறிலங்காவின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அணிந்திருந்த ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. சிறிலங்காவின் ஜனாதிபதி ஒருவர் இராணுவ பதக்கங்களை அணிந்திருந்த முதல் சம்பவம் இதுவாகும் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் சிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர தினம் நேற்று சுதந்திர சந்துக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி வருகை தந்த வேளையில் அவர் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த பதக்கங்கள் ஜனாதிபதி இராணுவத்தில் சேவையாற்றிய காலத்தில் அவர் ...
Read More »சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை!
சிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாமை கவலையளிப்பதாக தெரிவித்திருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகனேசன் இலங்கையரின் அடையாளத்தை அழிக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது. இதன் போது தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் மனோகனேசன் அவருடைய உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார். இலங்கையர் என்ற ...
Read More »பிரிட்டிஸ்காரர்களைக் காட்டிலும் சிங்களவர்களிடமே அதிகம் அடிமைப்படுகிறோம்!
இலங்கை 1948 மாசி 4ஆம் திகதி சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டாலும் தமிழர்களுக்கு எஜமான் மாறியதைத் தவிர சுதந்திரம் கிடைக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், பிரிட்டிஸ்காரர்களின் கீழ் அடிமையாக இருந்ததை விட சிங்களவர்களின் கீழேயே அடிமைப்படுத்தல்கள் கூடுதலாக உள்ளதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மறைமுகமாகவும் மெதுவாகவும் நடத்தப்பட்ட அடக்குமுறைகள், ஆக்கிரமிப்புக்கள் புதிய அரசாங்கம் பதவியேற்றதும் வெளிப்படையாகவும், தீவிரமாகவும் நடக்கின்றன. இந்த நிலையிலேயே வலிந்து காணாமல் ...
Read More »பொதுமன்னிப்பில் 17 கைதிகள் யாழில் விடுதலை!
சிறிலங்காவின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கட்டிருந்த தண்டனைக் கைதிகளான பெண் உள்பட 17 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர். நாடுமுழுவதும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 512 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். இதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் திருட்டு,நம்பிக்கை மோசடி மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற சிறிய குற்றங்களின் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களாகும். வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்கள், கொள்ளை மற்றும் இலஞ்சம் கோருதல் போன்ற பெரிய குற்றங்களுக்காக ...
Read More »ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது!
எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது. எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது. எந்த ஒருவரும் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம் என்றார். சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற 72ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாகும். சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயகக் குடியரசாகும். 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலனித்துவ கால ...
Read More »அடுத்த கட்டத்திற்கு சென்ற பொன்னியின் செல்வன்!
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். இதன் ...
Read More »ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச்!
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்தை பிடித்தார். உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (9,720 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 32 வயதான ஜோகோவிச் 5-வது முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் நம்பர் ஒன் இடத்தை 276-வது வாரமாக அலங்கரிக்கிறார். ...
Read More »ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள் 4 பேர் பலி!
ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுமிகளும், சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு வீதியில் சாலையோர நடைபாதை மீது சிறுவர், சிறுமிகள் 7 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று நடைபாதை மீது ஏறி சிறுவர், சிறுமிகள் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட ...
Read More »எமது உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும்!
இலங்கையின் சுதந்திரத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி நீதிக்காக எமது உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் இதற்கு பூரண ஆதரவினை வழங்குவதோடு போராட்டத்தில் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு தமிழ் உறவுகள் அனைவரிடமும் அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம். எமது மக்களின் ஜனநாயக முறையிலான போராட்டங்களில் எமது மாணவர் ஒன்றியம் தொடர்ந்தும் பயணிக்கும். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு ஈழத்தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் எம் மக்களும் காலா காலமாக நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்ற போதும் எமது மக்களின் ...
Read More »