மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. பாண்டிச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் ஜெயம் ரவி நடிக்கும் காட்சிகள் 6 நாட்கள் படமாக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal