குமரன்

யாழ் நூலக எரிப்பு : அரங்கேற்றப்பட்ட இனவாதம் – 39 வருடம் நிறைவு

யாழ் நூலக எரிப்பென்பது சாதாரணமான ஒரு வன்முறையல்ல. அது வேண்டும் என்று அரங்கேற்றப்பட்ட ஓர் இனவாத அரசியல் நாடகம். திட்டமிட்டு தமிழர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு பெரும் தாக்குதல். தீர்மானம் மிக்கதோர் இன அழிப்பு நடவடிக்கை. தமிழ் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, அறிவியல் ஆகிய அம்சங்களை அழித்தொழித்ததோர் இன வன்முறை. அதுவும் ஓர் அரச வன்முறை. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான சாத்வீகப் போராட்டங்கள் தோல்வியடைந்தையடுத்து, வேறு வழியின்றி தனிநாட்டைக் கோருவதைவிட வேறு வழியில்லை என்ற அரசியல் ரீதியான வெறுப்பின் விளிம்பில், தமிழ்த் ...

Read More »

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் அட்லீயின் அடுத்த படம்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ, தனது அடுத்த படத்தை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இயக்குனர் ...

Read More »

காணாமல்போனோரின் உறவுகள் போராட்டம் 1200 ஆவது நாளை எட்டியது

வவுனியாவில் சுழற்சிமுறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 12.15 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே? போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு சமூக இடைவெளிகளை பேணி இப்போராட்டத்தில் கலந்து ...

Read More »

சிங்கங்களால் கடித்துக்குதறப்பட்ட அழகிய இளம்பெண் இவர்தான்: புகைப்படம் வெளியானது!

அவுஸ்திரேலிய வன விலங்குகள் பூங்காவில் சிங்கங்களால் கடித்துக்குதறப்பட்ட இளம்பெண் குறித்த விவரங்களும் அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளன. அவரது பெயர் Jennifer Brown (35). அவுஸ்திரேலியாவின் North Nowraவிலுள்ள Shoalhaven உயிரியல் பூங்காவில், Jennifer சிங்கங்கள் இருக்கும் கெபியை சுத்தம் செய்யச் செல்லும்போது, அவர்மீது பாய்ந்து அவரை தாக்கிய சிங்கங்கள் அவரது தலை மற்றும் கழுத்தைக் கடித்துக் குதறியுள்ளன. சிங்கங்களைக் கையாள்வதில் நிபுணரான Jenniferஐ அந்த சிங்கங்களே கடித்துக்குதறியது ஏன் என்று தெரியவில்லை. அவரது சக ஊழியர்கள் இருவர் சமயோகிதமாக செயல்பட்டு அந்த சிங்கங்களை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். ...

Read More »

ட்விட்டர் வெப் வெர்ஷனில் ட்விட்களை ஷெட்யூல் செய்யும் வசதி அறிமுகம்

 ட்விட்டர் நிறுவனம் தனது வெப் வெர்ஷனில் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம். ட்விட்டர் வெப் வெர்ஷனில் பயனர் எழுதும் ட்விட்களை டிராஃப்ட் ஆக வைத்து கொள்ளும் வசதியும், எழுதி முடித்த ட்விட்களை பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்ய ஏதுவாக ஷெட்யூல் செய்யும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த அம்சங்களை சில க்ளிக்குகளில் மேற்கொள்ள முடியும். முதற்கட்டமாக இரு அம்சங்களும் ட்விட்டர் வெப் மற்றும் மொபைல் வெப் பதிப்புகளில் வழங்கப்படுகிறது. புதிய ஷெட்யூல் அம்சத்தில் ட்வீட் கம்போசர் அருகில் ...

Read More »

அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு எவ்வளவு?

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி இருந்தனர். குணம் அடைந்த பின்னர் அவருக்கு அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கான பில்லை நீட்டினர். அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். சிகிச்சை கட்டணமாக ...

Read More »

யாழ். நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவுதினம்

20 ஆம் நூற்றாண்டின் “தமிழ் கலாசார இனப்படுகொலை” என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39ஆவது ஆண்டு நினைவுதினம், இன்று (01) யாழ். நூலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்படட போது படுகொலை செய்யப்படடவர்களுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில் பதில் முதல்வர் தலைமையில் நூலக வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும், எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலும் நூலக நுழைவாயிலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. ...

Read More »

இலங்கையில் 11ஆவது மரணம் பதிவானது

கொரோனா வைரஸ் தொற்றால் மற்றுமொருவர் உயிரழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. குவைட்டில் இருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவரே இவ்வாறு உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Read More »

யாழ்,நூலகம் எரிக்கப்பட்ட 39 ம் ஆண்டின் நினைவுகள்

தமிழர்களின் அறிவுப் புதையாலாக விளங்கிய யாழ்.நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 39 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 புத்தகப் புதையல்களைக் கொண்டு தமிழரின் அறிவுக் கருவூலமாக திகழ்ந்த யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் 1981 மே 31ஆம் நாள் நல்லிரவிற்கு மேல் எரித்து சாம்பலாக்கப்பட்டது. ஒருசிலரது முயற்சியால் சிறு நூலகமாக 1933 இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த யாழ் நூலகம் காலப்போக்கில் தனிப்பட்ட ரீதியில் நூல்ளை சேகரித்து வைத்திருந்தவர்களது பங்களிப்புடன் வளர்ச்சியடைந்தது. பல்வேறு பழமையான நூல்கள் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் பத்திரிகைகள் என சேகரிக்கப்பட்டு ...

Read More »

தனிமைப்படுத்தப்பட்டது ஏன்? – பிந்து மாதவி

தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையான பிந்துமாதவி, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்த பிந்து மாதவி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அடுத்ததாக மாயன், யாருக்கும் அஞ்சேல் போன்ற படங்களில் நடித்துவந்த அவர், கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி உள்ளார். இந்நிலையில் நடிகை பிந்துமாதவி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்புக்கு சீல் வைப்பதையும் ...

Read More »