தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையான பிந்துமாதவி, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்த பிந்து மாதவி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அடுத்ததாக மாயன், யாருக்கும் அஞ்சேல் போன்ற படங்களில் நடித்துவந்த அவர், கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.
இந்நிலையில் நடிகை பிந்துமாதவி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்புக்கு சீல் வைப்பதையும் தனது டுவிட்டர் பக்கத்தில் காணொளியாக பதிவிட்டுள்ளார். மேலும் அங்கு வசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நடிகை பிந்து மாதவி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal
