குமரன்

புதிய தேர்தல் முறையால் சிறுபான்மையினருக்கு ஆபத்து! – அமீர் அலி

மாகாண சபைத் தேர்தல் புதிய சட்டத்தின் பிரகாரம் தொகுதி ரீதியாக நடைபெற்றால் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தல்களை எக் காரணம் கொண்டும் சிறுபான்மை கட்சிகள் புதிய தேர்தல் முறைப்படி நடத்துவதற்கு இடமளிக்க கூடாது. எனெனில் வடகிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிறுபான்மை தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர்கள் தமக்கென்று ஒரு பிரதிநிதியை பெற்றுக் கொள்ள ...

Read More »

மனித எலும்புக் கூடுகள் அகழ்வுப் பணி இடை நிறுத்தம்!

மன்னார் சதொச வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக் கூடுகள் அகழ்வுப் பணிகள் எதிர் வரும் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 52 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளதோடு 66 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டு 56 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தது. திங்கள் முதல் வெள்ளிக்கிழைம வரை தொடர்நது ஐந்து நாட்களும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முதல் எதிர் வரும் 20ஆம் திகதி வரை அகழ்வுப் பணிகள் இடை ...

Read More »

காணாமல் போன கணவரை 36 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மனைவி!

பாகிஸ்தான் சிறையில் இருந்து 29 இந்தியர்கள் விடுதலை. 36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்துள்ளார் ஒரு பெண். வாலிபராக சென்றவர் வயோதிகராக திரும்பி உள்ளார். பாகிஸ்தான் சிறைகளில் வாடிய 29 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு, வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் கராச்சி உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் 29 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 26 பேர் மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலை செய்யப்பட்டவர்கள் பாக்., சிறைகளிலிருந்து லாகூர் வந்தனர். பின்னர் ...

Read More »

புதிய அரசமைப்பு…தூறலும் நின்று போச்சு!

தற்போது புலம்பெயர் தமிழ் உறவுகள் பலர், ஊரில் உலாவுகின்றார்கள். விசாரித்ததில், அவர்களுக்கு இப்போது அங்கு விடுமுறை நாள்களாம். இவ்வாறாக, பள்ளித்தோழன் ஒருவன் பல வருடங்களுக்குப் பின்னர் சந்தித்தான். “உங்களுக்கு என்ன, நீங்கள் வெளிநாட்டுக்காரர்…” என்று வெடியைக் கொழுத்திப் போட்டேன். “என்ன, சும்மா வெளிநாடுதான்; நிறத்தால், அங்கு நாங்கள் இரண்டாம் இடம்; இனத்தால், இங்கு நாங்கள் இரண்டாம் இடம்” எனப் பொரிந்து தள்ளினார். அர்த்தம் பொதிந்த இவ்வாக்கியங்கள், நாட்டின் அரசமைப்பு முறை ஊடாக, ஓர் இனம் பாதுகாக்கப்படவில்லை; பேணப்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. ஒரு நாட்டில் ...

Read More »

திருமணமான 2 நாளில் இளம் தம்பதியினருக்கு அதிர்ஷ்டம்!

அவுஸ்திரேலியாவில் திருமணமான இரண்டு நாளில் புதுமண தம்பதிக்கு அதிர்ஷ்ட லாபச்சீட்டு மூலம் 671,513 டொலர் பரிசு விழுந்துள்ளது. Cairns நகரைச் சேர்ந்த இளைஞனுக்கும் இளம்பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. இருவரும் அதிர்ஷ்ட லாபச்சீட்டு ஒன்றினை வாங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த தம்பதிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. இந்த நிலையில் இது எங்களுக்கு கிடைத்த திருமணப் பரிசுகளில் சிறந்த பரிசு இதுவென தாம் நினைக்கிறோம் என குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர் இந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது என இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Read More »

பிராசஸர் கொண்டு உருவாகும் சியோமி போகோ ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனத்தின் போகோ பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்சமயம் போகோ ட்விட்டில் போகோ ஸ்மார்ட்போனிற்காக குவால்காம் நிறுவனத்துடன் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளது. அந்த வகையில் புதிய போகோபோன் எஃப்1 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என தெரிகிறது. போகோபோன் எஃப்1 மாடலில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கலாம் என சமீபத்திய அன்பாக்சிங் வீடியோவில் தெரியவந்தது. மேலும் இதைத் தொடர்ந்து சியோமி இந்தியா மேளாலர் ஜெய் மணி பதிவிட்டிருக்கும் ட்விட் ஒன்றில் வேகம், செயல்திறன் உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறது. இதன் ...

Read More »

100 மில்லியன் டொலர்கள் யாருக்கு ?

அவுஸ்திரேலியாவின் Powerball அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர்களை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. Powerball அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பின் அடுத்த வாரத்திற்கான தொகை சுமார் 100 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.  எதிர்வரும் வியாழக்கிழமை இந்த சீட்டிழுப்பு இடப்பெறவுள்ளது. இந்த 100 மில்லியன் டொலர்களை யாராவது வென்றுவிடும் தருணத்தில் அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாக தனிநபர் ஒருவரால் வெல்லப்பட்ட அதிகக் கூடிய தொகை என்ற சாதனை பதிவு செய்யப்படும். இதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு Hervey Bay -ஐச் சேர்ந்த தம்பதியர் 70 ...

Read More »

வடக்கு அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

வடக்கு அலாஸ்கா பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு அலாஸ்கா பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கத்தால் பல இடங்களில் வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்கள் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை. கடந்த 1995-ல் வடக்கு அலாஸ்கா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ...

Read More »

மைத்திரியே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்!- மஹிந்த அம­ர­வீர

நாட்டில் மீண்டும் ஜனா­தி­ப­தி­யாகும் சந்­தர்ப்பம் மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு இல்லை. அதனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வாகும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். அங்­கு­னுகொல பெலஸ்ஸ பிர­தே­சத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்­ந்தும் கூறு­கையில், அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் மஹிந்த ராஜ­பக்ஷ மீண்டும் ஜனா­தி­பதி பத­விக்கு நிய­மிக்­கப்­பட வாய்ப்­பில்லை. அதுதான் நாட்டின் சட்டம். அதனால் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட தகு­தி­யான வேட்­பா­ள­ராக இருப்­பது ...

Read More »

காவல் துறை பாதுகாப்புடன் ஞானசார தேரருக்கு இன்று அறுவைச் சிகிச்சை!

நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சை இன்று இடம்பெறவுள்ளது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், சிறைச்சாலை மற்றும் சிறிலங்கா காவல் துறையின் பாதுகாப்பின் கீழ் மேற்குறிப்பிடப்பட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Read More »