சியோமி நிறுவனத்தின் போகோ பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்சமயம் போகோ ட்விட்டில் போகோ ஸ்மார்ட்போனிற்காக குவால்காம் நிறுவனத்துடன் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளது. அந்த வகையில் புதிய போகோபோன் எஃப்1 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என தெரிகிறது.
போகோபோன் எஃப்1 மாடலில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கலாம் என சமீபத்திய அன்பாக்சிங் வீடியோவில் தெரியவந்தது. மேலும் இதைத் தொடர்ந்து சியோமி இந்தியா மேளாலர் ஜெய் மணி பதிவிட்டிருக்கும் ட்விட் ஒன்றில் வேகம், செயல்திறன் உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறது.
இதன் மூலம் புதிய ஸ்மார்ட்போனினை ஃபிளாக்ஷிப் கில்லர் பரிவில் வெளியிட சியோமி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. தற்சமயம் இந்த பிரிவில் ஒன்பிளஸ் முன்னிலை வகிக்கிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி போகோபோன் எஃப் 1 மாடலின் விலை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் போகோபோன் எஃப் 1 ஒன்பிளஸ் மாடலுக்கு போட்டியாக அமைய அதிக வாய்ப்பிருக்கிறது.
சியோமி போகோபோன் எஃப்1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 5.99 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இஷ வைபை, ப்லூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்