அவுஸ்திரேலியாவின் Powerball அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர்களை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.
Powerball அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பின் அடுத்த வாரத்திற்கான தொகை சுமார் 100 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை இந்த சீட்டிழுப்பு இடப்பெறவுள்ளது.
இந்த 100 மில்லியன் டொலர்களை யாராவது வென்றுவிடும் தருணத்தில் அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாக தனிநபர் ஒருவரால் வெல்லப்பட்ட அதிகக் கூடிய தொகை என்ற சாதனை பதிவு செய்யப்படும்.
இதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு Hervey Bay -ஐச் சேர்ந்த தம்பதியர் 70 மில்லியன் டொலர்களை வென்றமை தற்போதைய சாதனையாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.