மன்னார் சதொச வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக் கூடுகள் அகழ்வுப் பணிகள் எதிர் வரும் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 52 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளதோடு 66 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டு 56 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழைம வரை தொடர்நது ஐந்து நாட்களும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முதல் எதிர் வரும் 20ஆம் திகதி வரை அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டமைக்கான காரணம் இது வரை அறிவிக்கப்படவில்லை. குறித்த அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal