எம்.சி.சி ஒப்பந்தத்தை இன்று கைசாத்திட்டாலும் தான் மகிழ்ச்சியடைவேன் எனத் தெரிவிக்கும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அந்த ஒப்பந்தத்தால் ஒரு மாத்திரை அளவுக்கூட இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதெனவும் தெரிவித்தார். மாத்தறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் கடன் சலுகை கோரியதால் வேறு எந்த நாடும் இலங்கைக்கு சிறிய வட்டிக்கு கடன் தர முன்வராத நிலைமை காணப்படுவதாகவும், இதுவரை இலங்கையிலுள்ள எந்தவொரு நிதி அமைச்சரும் வெ ளிநாடுகளிடம் அவ்வாறதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை ...
Read More »குமரன்
‘கொரோனா’ வைரஸ் 60 நாடுகளுக்கு பரவியது!
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும் மற்ற நாடுகளுக்கு பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. 31 மாகாணங்களில் பரவிய கொரோனா வைரசால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக கடந்த மாதம் ஒரே நாளில் 252 பேர் பலியானதால் ...
Read More »விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்!
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னைப் பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது விரைவில் திரைக்கு வருகிறது. தெலுங்கில் ரவிதேஜாவுடன் கிராக் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டார். அதில் உடல் மெலிந்த தோற்றத்தில் ஆளே மாறிப்போய் இருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த சில ரசிகர்கள் விமர்சித்தனர். உடல் இளைத்து அழகை ...
Read More »ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மலேசியர்கள்!
ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக பணியாற்ற முயன்ற 5 மலேசியர்களை பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய எல்லைப்படை தடுத்து நிறுத்தியுள்ளது. 5 பேர் கொண்ட இக்கூட்டத்தை வழிநடத்தியதாக ஒப்புக்கொண்ட 34வயதுடைய மலேசியருக்கும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 27ம் திகதி இவர்கள் அனைவரும் சுற்றுலா விசாக்கள் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல முயன்றதாகக் கூறப்படுகின்றது. முதலில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் விசாரித்த பொழுது, 5 மலேசியர்களையும் தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனக் கூறியுள்ளார் இந்நபர். பிறகு நபர் ஒருவருக்கு 500 மலேசிய ரிங்கட்களை(180 ...
Read More »ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும்!
உள்ளக விசாரணை பொறிமுறையானது கலப்பு என்று பொய்கூறி தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றிய விற்கப்பட்டது. காலம் தாழ்த்தாது ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடரின் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை மீதான பொது விவாதத்தில் ((OHCHR oral update on Sri Lanka) விடயம் 2 இன் கீழ் 28.02.2020 இன்று ஆற்றிய உரை வருமாறு. 30/1 தீர்மானத்தை ...
Read More »நன்கொடையாக கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கும் ஆஸ்திரேலிய சிறுவன் குவாடன்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தனக்கு கிடைத்த 4 லட்சத்து 75 ஆயிரம் டாலர் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க போவதாக அவனது தாய் தெரிவித்துள்ளார். குள்ளத்தன்மையால் கேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன் குவாடன் பேல்ஸ், மனமுடைந்து தனது தாயிடம் தற்கொலை செய்யப்போவதாக கதறி அழும் வீடியோ உலகையே உலுக்கியது. அவனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் கருத்து பதிவிட்ட நிலையில் அமெரிக்க நடிகர் ப்ராட் வில்லியம்ஸ் உருவாக்கிய பக்கத்தின் மூலம் இந்திய மதிப்பில் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் நன்கொடை ...
Read More »சனல் – 4 போர்க்குற்ற ஆவணப்படத்தை தயாரித்தவருக்கும் கொரோனா பாதிப்பு!
இலங்கையில் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானியாவின் சனல் – 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோவும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய போர்க்குற்ற ஆவணப்படத்தை சனல்- 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோ “இலங்கையின் கொலைக்களங்கள்” என்ற பெயரில் வெளியிட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தார். ஈரானுக்கு தேர்தல் வேலைக்காக சென்றிருந்த அவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது ...
Read More »ஆப்பு வைக்கும் தேர்தல் வியூகம்!
உள்நாட்டு அரசியல் செயற்பாடுகளும் சர்வதேச அணுகுமுறைகளும், இலங்கை அரசியலுக்குத் தேவையான, தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்துள்ளன. என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் தரப்பினரின் பிரிவினைப் போக்கும் சிங்கள தேசியவாத கட்சிகளின் ஒன்றிணைதலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிதைவும் முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கையறு நிலையும், இலங்கை அரசியலில் மீள முடியாத, தேசியவாத சிந்தனைகளின் வௌிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தில், சிங்களத் தேசியவாத அரசை நிலைநிறுத்த, பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் முறையாகத் திட்டம் வகுத்துச் செயற்பட ஆரம்பித்துள்ளன. அதன் விளைவாக, வடக்கு, கிழக்கு ...
Read More »காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் தொடர்ந்து இயங்கும்!
காணாமல்போனோர் அலுவலகத்தை தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளதென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஜெனிவா பேரவையில், இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பேரவையில் தினேஷ் குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “30/1 மற்றும் 40/1 போன்ற பிரேரணைகளுக்கான அனுசரணையிலிருந்து அரசாங்கம் விலகினாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். அபிவிருத்தி நிரந்தர சமாதானம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்றவற்றில் நாங்கள் ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றுவோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிக ...
Read More »நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் என்பதனை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 25ஆம் திகதி மன்னார் மனித புதை குழி தொடர்பாக இடம்பெற்ற வழக்கு விசாரணை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இடம் ...
Read More »