கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளனர். பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளனர். தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More »குமரன்
வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராட்டம்!
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி, வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Read More »சின்னத்திரை ‘சித்ரா‘ தூக்கிட்டுத் தற்கொலை!
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(29), சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கென் தனி ரசிகர் வட்டம் உள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் அவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் திருமணத் திகதியை முடிவு செய்யவிருந்தார். இந்நிலையில், தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த விபரீத முடிவு சின்னத்திரை ...
Read More »மனிதர்களுக்கு மத்தியில் மறைந்து வாழும் வேற்று கிரகவாசிகள்?
வேற்று கிரகவாசிகள் மனிதர்களுக்கு மத்தியில் மறைந்து வாழ்வதாக இஸ்ரேலின் முன்னாள் விண்வெளி பாதுகாப்பு தலைவர் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1981 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் விண்வெளி பாதுகாப்புக்கு தலைமை வகித்த ஹைம் எஷெட் (Haim Eshed)அமெரிக்க வார இதழுக்கு அளித்த பேட்டியில், வேற்று கிரக வாசிகள் பூமியின் தன்மை குறித்து ஆராய்வதற்காக, அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வேற்று கிரக வாசிகளின் இருப்பை உலகிற்கு பிரகடனப்படுத்த முற்பட்டபோது, மனிதர்கள் அச்சமடைவார்கள் என்பதற்காக ...
Read More »செம்பியன்பற்று கடற்கரையில் கரை ஒதுங்கிய எலும்புக்கூடு
வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று நேற்று (08) மாலை கரையொதுங்கியுள்ளது. செம்பியன்பற்று கிராமத்துக்கும் தனிப்பனை கிராமத்துக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் இவ்வாறு ஒதுங்கிய உருக்குலைந்த சடலம் அடையாளம் காண முடியாதவாறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Read More »யாழில் ஆயிரம் கடற்படையினர் தனிமைப்படுத்தலில்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் ஆயிரம் கடற்படையினர் அவர்களது முகாம்களில் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பணியாற்றும் கடற்படையினர் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று விடுமுறையைக் கழித்த பின்பு பணிக்குத் திரும்பும் சமயம் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனையின் பின்பே பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு தனிமைப்படுத்தல்களுக்கு உட்பட்டவர்கள் காலி, காங்கேசன்துறை, நெடுந்தீவு, மாதகல், வெற்றிலைக்கேணி எனப் பல இடங்களிலும் உள்ளனர். இவ்வாறு சகல இடங்களிலும் தனிமைப்படுத்தலில் உள்ள கடற்படையினரே ஆயிரம் பேர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்தலிலுள்ள ஆயிரம் பேரில் பலரது ...
Read More »சமூகத்துக்காகப் பேச வேண்டியது யார்?
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன், நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, ”முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை, அரசாங்கத்துக்குப் பெரும் வெட்கக்கேடான விடயம்’ எனச் சுட்டிக்காட்டியமை, முஸ்லிம் வெகுஜனங்களுக்கு மத்தியில் பேசுபொருளாகி இருக்கின்றது. கணிசமானோர் சாணக்கியன் எம்.பியின் இந்தச் செயற்பாட்டை வரவேற்றிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, முஸ்லிம் அரசியல்வாதிகளின் உரைகளின் கனதியும் அவரது உரையுடன் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றது. சாணக்கிய அரசியல் தெரிந்த பெரும் தலைமைகள், அரசியல் ஞானிகள், வித்தகர்கள் போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படும் கடந்தகால, நிகழ்கால முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காத்திரமான உரைகளை நாடாளுமன்றத்தில் நிகழ்த்துவதற்குத் ...
Read More »சஹ்ரானின் போதனைகளுக்கு சென்ற 21 பேர் கைது
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்ற மற்றும் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் 6 பெண்கள் உட்பட 21 பேரை, காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காத்தான்குடி பிரதேசத்தில் சஹ்ரானுடன் தொடர்பை பேணிவந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் சஹ்ரானின் ...
Read More »பிறந்து 20 நாட்களான சிசுவை கொன்றது கொரோனா
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த 20 நாட்களேயான சிசு, சற்றுமுன்னர் மரணமடைந்துள்ளது. இது, ஆகவும் குறைந்த வயதில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த சம்பவமாக இலங்கையில் பதிவாகியுள்ளது. பொரளை சீமாட்டி வைத்தியசாலையிலே அந்த சிசு மரணமடைந்துள்ளது. அந்த சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது எனினும், நிமோனியா காய்ச்சலே மரணத்துக்கு காரணமென கண்டறிப்பட்டுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்த சிசுவின் தாய், தந்தை ஆகிய இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவ்விருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
Read More »உலகின் பல பகுதிகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் மர்மமான தூண்கள்
அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுபோன்ற நிகழ்வு உலகின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18-ம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த பாலைவன பகுதியின் மையத்தில் பளபளப்பான வெளிச்சத்தில் ஒரு உலோகத்தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் இங்கு கொண்டுவரப்பட்டது என எந்த விவரமும் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்தது. ...
Read More »