பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை பெற்ற கவின் நடித்துவரும் புதிய படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் இணைந்து நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். கவின் நடிப்பில் தற்போது லிப்ட் என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ...
Read More »குமரன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை மூடிமறைக்கமுயலவேண்டாம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மூடிமறைப்பதற்கு முயலவேண்டாம் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். 73 வது சுதந்திரதினத்தை குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஆராதனையின் போது கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 30வருட கால யுத்தத்திலிருந்து மீண்ட இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்தி செய்துவருகின்றது என ...
Read More »ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்
மியான்மரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ...
Read More »திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா…
திரைப்பட விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இணைந்து கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சில திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர். இந்த படத்தின் ...
Read More »ஒரு டுவிட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?
வசாயிகள் போராட்டம் குறித்த இந்திய பிரபலங்களின் நிலைப்பாட்டை நடிகை டாப்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் டுவிட் செய்து இருந்தனர். இதனிடையே விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாக இந்திய பிரபலங்களான கங்கனா ரனாவத், அக்ஷய் குமார், விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் உள்ளிட்ட பலர் டுவிட் செய்திருந்தனர். இந்நிலையில் இந்திய பிரபலங்களின் ...
Read More »நவால்னி: ரஷ்யாவின் புதிய லெனினா?
கடந்த 2020-ல் ரஷ்யாவில் கணிசமான அளவில் மாற்றங்கள் ஏற்பட்டன: கரோனா பெருந்தொற்று, அதன் விளைவான பொருளாதாரச் சரிவு, ஒரு பிராந்திய ஆளுநரின் கைது, பெலாரஸ், கிர்கிஸ்தான், மால்டோவா, நகோர்னோ-காரபாக் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள். ஆனால், 2021-ம் ஆண்டானது கடந்த ஆண்டின் பிரச்சினைக்குரிய சம்பவம் ஒன்றை கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது: புதினுக்கு எதிரான செயல்பாட்டாளர் அலெக்ஸி நவால்னியின் இன்னல்கள், இதனால் பல கேள்விகளுக்குப் பதிலே கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பாவின் தடைகள் மாஸ்கோவுக்குச் செல்லும் விமானத்தில் நவால்னிக்கு உடல்நலம் மோசமடைந்ததிலிருந்து இந்த நெடிய கதை தொடங்குகிறது. ஆம்ஸ்க் ...
Read More »இலங்கையர்கள் 129 பேரைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 129 பேரைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண கூறினார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணம் பறித்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட கிம்புலா எல குணா, அவரது மகன் பும்பா மற்றும் பிறிதொரு நபர் ஆகியோர் விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவர் என காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இன்டர்போலின் உதவியுடன் சிவப்பு அறிவித்தல்களை வெளியிட முடியும் ...
Read More »கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம்…….!
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என்ற கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கை முஸ்லீம்சமூகத்தினரை பெருமளவிற்கு உலுக்கியுள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.. நாடாளுமன்ற உறுப்பினர் ஏபிசிக்கு இதனை தெரிவித்துள்ளார் சுகாதாரத்திற்கு அவசியமானது என்ற எந்த நம்பிக்கையுடனும் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கை பின்பற்றப்படவில்லை,மாறாக முற்றிலும் இனவாத அடிப்படையிலேயே இது முன்னெடுக்கப்படுகின்றது என்பதை அவர்கள் அறிந்ததுதம் அது அவர்களை உலுக்கியுள்ளது என சுமந்திரன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை பூமிக்கு ஒப்படைக்கவேண்டும் என்பது அவர்களின் அடிப்படை நம்பிக்கை என்பதால் ...
Read More »அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கவனயீர்ப்பு நிகழ்வு
தமிழர்களுக்கான நீதியை கோரி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கவனயீர்ப்பு நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. இது குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே எதிர் வருகின்ற 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை தொடர் போராட்டம் ஒன்றுக்கு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சிவில் செயற்பாட்டு அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதரவை தாயகத்தின் அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் வழங்குகின்றன. குறிப்பாக வடக்கு கிழக்கில் தீவிரமான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்துவருகின்றன. தமிழ் மக்களின் கலை பண்பாட்டு ...
Read More »யாழில் நான்கு நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த நீதிமன்றம் தடை
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அஹிம்சை வழிப் போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தப் காவல் துறையினர் தடை உத்தரவு பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல் துறை தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை ...
Read More »